Fruits

 

Twitter

ஹெல்த்

சளி பிடித்திருக்கும் போது பழங்கள் சாப்பிடலாமா?

மினு ப்ரீத்தி

பொதுவாகச் சளியை பெரும்பாலானோர் நோயாகப் பார்க்கின்றனர். அய்யோ,’சளியா’, எடு அந்த மாத்திரையை என்று… உங்களுக்குத் தெரிந்திருக்கும் அது எந்த மாத்திரை என? அதைப் போட்டுவிட்டு அடுத்த வேலையைப் பார்க்க சென்றுவிடுவீர்கள். சிலரோ, அய்யோ குனிந்தால் மூக்கு ஒழுகுமே, ஆபிஸில் ‘இஸ்க், இஸ்கு’ என இழுத்துக்கொண்டிருந்தால் நன்றாக இருக்காதே என மருத்துவரிடம் சென்று சிகிச்சையைப் பெற்றுக் கொண்டு வந்துவிடுவீர்கள். இன்றைய காலத்தில், பரவலாகப் பார்க்கப்படும் நிலை இதுவே.

சிலர் பாட்டிக்கால வழக்கமுறைப்படி பாட்டி வைத்தியம், நாட்டு வைத்தியம் என ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப், யூ டியூப் தீர்வுகளை முயற்சி செய்து தோல்வியும் அடைந்திருக்கலாம் அல்லது வெற்றியும் பெற்றிருக்கலாம். சரி, முதலில், ‘சளி’ என்றால் என்ன? என்று நாம் பார்க்கலாம்.

Mucus

அந்நியன் யார்? உடல் கேக்கும் கேள்வி!

நம் உடலில் தேவையில்லாத அல்லது அந்நியப்பொருளாகவோ அல்லது கிருமியோ அல்லது அழுக்கோ அல்லது கழிவோ… இப்படி ஏதேனும் உடலுக்குத் தேவையில்லாத பொருள் உடலினுள் நுழைந்துவிட்டால் உடல் அதைக் கண்டுபிடித்து ‘நீ யார்’ என்பதுபோல விசாரிக்கும். நீ இந்த உடலுக்கு ஏற்றவன் இல்லையே… வேறு ஏதோ போலத் தெரிகிறதே எனச் செயல்பட்டு, அந்தப் புதிதாக வந்த ஏதோ ஒன்றை சுற்றி சளிப்படலம் உருவாகிடும். அதுதான் mucus. உடலுக்குத் தேவையில்லாததை அங்கே இங்கே நகரவிடாமல் செய்ய அதைச் சுற்றி சளியால் படர்ந்து ‘லாக்’ செய்துவிடும். இதுதான், ‘சளி உருவாகுதல்’. இந்தச் சளியை உருவாக்கியது யார்? நம் உடல்… ஏன் உருவாக்கியது? உடலுக்குத் தேவையில்லாத ஏதோ ஒன்று வந்ததால், அதை நகரவிடாமல் செய்ய அதைச் சுற்றி சளியை படர செய்து ஜெயிலில் போட்டு வைக்கிறது, நம் உடல். இந்தச் செயல்முறை பெயர் என்ன தெரியுமா? கெட்டதை நகரவிடாமல் செய்து, சளி மூலம் ‘லாக்’ செய்து மேலும் உடலுக்குள் செல்லாமல் தடுக்க, உடலை பாதுகாக்கின்ற ஒரு இயற்கை செயல்… உடல் தன்னைத் தானே பாதுகாக்கும் திறன் என்றுகூடச் சொல்லலாம்.

Sneeze

தும்மல் ஏன் வருகிறது?

இப்போது, நம் உடலில் லாக்காகி கிடக்கும் இந்தப் புதிய பொருளை எப்போது உடல் வெளியேற்றும்? அதை உடல்தான் தீர்மானிக்கும். நீங்கள் அவசரமாக டிராஃபிக் உள்ள ஏரியாவில் போகிறீர்கள் ஒரே வாகன நெரிசல். அங்கு 5-6 அழுக்குகள் உங்கள் மூக்கின் வழியாக உடலுக்குச் சென்றுவிட்டது என வைத்துக்கொள்வோம். உடனே, உடல் என்ன செய்யும்? ‘யார் நீ’ என்பது போல விசாரித்து, முடிவெடுத்து நீ உடலுக்குப் புதியவன், கெட்டவன், தேவையில்லாதவன் என்று முடிவெடுத்து… உடல், சளியை உருவாக்கி அந்த 5-6 அழுக்கை சளி மூலம் படரவிட்டு அங்கே இங்கே நகரவிடாமல் லாக் செய்துவிடும். இந்தச் செயல்களைச் செய்வது யார்? அதேதான் நம் உடல். இப்போது, உடல் என்ன நினைக்கும்? கெட்டவர்கள், கொஞ்சம் அதிகமாக வந்துவிட்டார்கள். இவர்களை வெளியில் அனுப்பவேண்டும் என நினைத்து ‘தும்மல்’ மூலம் வெளியே தள்ளும். சிலர் தும்மலை அடக்குவார்கள்; சிலர் தும்முவார்கள்; சிலர், ‘ஒரே தும்மல் வருது டாக்டர்’ எனச் சொல்லி மருந்து வாங்கிச் சாப்பிடுவார்கள்.

தும்மியவர்களின் உடலில் இருந்து அழுக்கோ கழிவோ வெளியே நீங்கிருக்கும். தும்மல் அடக்கியவர்களின் உடலில் இருந்து கழிவு வெளியேறி இருக்காது. மருந்து வாங்கிச் சாப்பிட்டவரின் உடலில் கழிவு அப்படியே இருக்கும், உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலும் குறைந்து இருக்கும். காரணம் மருந்துகள்... இப்போது மீண்டும் உடல் என்ன செய்யும்? இந்தக் கழிவுகள் இன்னும் வெளியே போகலையா இரு… எனச் சொல்லி சளியை உருவாக்கி மீண்டும் நன்றாகப் படர செய்து மூக்கு ஒழுகலாக வெளியே தள்ளும். மூக்கு ஒழுகினால் என்ன செய்ய வேண்டும்? மூக்கை சிந்த வேண்டும். அதுதான் சிகிச்சை. எதற்கு மூக்கில் சளி ஒழுகுகிறது? கழிவை வெளியேற்ற… இதற்கு நீங்கள் டாக்டரிடம் சென்று மருந்து வாங்கிச் சாப்பிட்டால் மூக்கு ஒழுகுவது நின்று கழிவு அப்படியே உடலில் இருக்கும். உடலின் எதிர்ப்பு ஆற்றலோ? ‘எவன்டா இவ’ ‘நான் கஷ்டப்பட்டு வெளியேத்துறேன் இவன் மருந்த சாப்பிட்டு மீண்டும் உள்ளேயே வைச்சிருக்கிறானா’ என நினைத்து மீண்டும் சளியை கெட்டியாக மாற்றி ‘நெஞ்சு சளியாக’ உருவாக்கும். இருமல் மூலம் வெளியே தள்ளும். உடனே நாம் செய்வது என்ன? டாக்டர் இருமல் மருந்து கொடுங்க என்று இருமல் டானிக் வாங்கிக் குடித்துவிட்டு அரைப் போதையில் இருப்போம். உடலோ இந்தக் கழிவை வெளியேற்ற தும்மலை உருவாக்கினேன். தடுத்துவிட்டான்; மூக்கு ஒழுக செய்தேன்… தடுத்துவிட்டான்… நெஞ்சு சளியாக இருமல் மூலம் வெளியேற்றினேன். தடுத்துவிட்டான்… எனச் சோர்ந்து போய்விடும். நோய் எதிர்ப்பு ஆற்றலும் குறைந்துவிடும். கழிவும் அப்படியே இருக்கும்.

Cold 

எல்லா உயிரினங்களுக்கு நடக்கும் இயற்கை நிகழ்வு

உடலில் ‘சளி’ சும்மா பொழுதுபோக்குகாக உருவாகாது. உடலுக்குத் தேவையில்லாத பொருள் இருந்தால் அதை ‘லாக்’ செய்து வெளியேற்றவே ‘சளி’ உருவாகும். இதுதான் எல்லா உயிரினத்துக்கும் நடக்கின்ற ‘இயற்கை செயல்பாடு’. இந்த இயற்கை செயல்பாடானது ‘நல்லவன் கெட்டவன் இந்தியன் அமெரிக்கன்’ என எந்த வித்தியாசமும் பார்க்காது. கழிவு உடலில் இருந்தால், அதை வெளியேற்ற மனிதனின் உடலும் இதைத்தான் செய்யும்; நாயின் உடலும் இதைத்தான் செய்யும்; எல்லா உயிரினங்களின் உடலும் இதைத்தான் செய்யும்.

இப்போ சொல்லுங்கள்… சளி வந்தால் என்ன செய்யணும்? என்று… முதலில் தும்மல் வந்தால் தும்முங்கள். அதுதான் சிகிச்சை. அடுத்து, மூக்கு ஒழுகினால் என்ன செய்வது? இரண்டு மூக்கிலும் உள்ள சளியை சிந்த வேண்டும். எப்போதெல்லாம் சளி வருகிறதோ அப்போதெல்லாம் சிந்த வேண்டும். சளி வாயின் வழியாக வந்தால்? துப்புங்கள். இருமல் மூலமாக வெளியேறினால்? இருமி துப்புங்கள். அவ்வளவுதான். கொஞ்சமாவது உடல் செய்யும் மிகப்பெரிய வேலைக்குக் கொஞ்சம் ஒத்துழைப்புத் தாருங்கள் என்பதே உடல் உங்களிடம் கேட்கும் விஷயம். அதைப் புரிந்துகொண்டு உடலுக்கு உதவுங்கள். உடல் செய்யும் ரியாக்‌ஷனை அனுமதியுங்கள். அதுதான் நீங்கள் உடலுக்குச் செய்யும் உதவி. உங்களுக்கு உடல் செய்வது, பேருதவி. அதை மறந்துவிடக் கூடாது.

Not Hungry

சளி இருக்கையில் பசிக்குமா?

சளி வெளியேறும் நாட்களில் உங்களுக்குப் பசிக்கிறதா எனக் கவனியுங்கள்… ‘பசி உணர்வு’ வந்தால் சாப்பிடுங்கள். பசி உணர்வு வரவில்லை என்றால் சாப்பிடாதீர்கள். பசி உணர்வு வந்து உங்களுக்குக் குறிப்பிட்ட சுவையில் ஏதேனும் சாப்பிட தோன்றுகிறதா எனக் கவனியுங்கள். பொதுவாக ஒரு விஷயம் இங்கே சொல்ல வேண்டும். சளி வெளியேறும் சமயத்தில் பெரும்பாலானோருக்கு சற்றுக் காரமாகச் சாப்பிட பிடிக்கும் என்பது பொதுச் செய்தி. இது 100% எல்லோருக்கும் பொருந்தாது. சிலருக்கு மாறலாம். காரமாக சாப்பிடத் தோன்றினால் மிளகு ரசம், இஞ்சி டீ, துளசி டீ, பூண்டு மிளகு குழப்பு, வத்தக்குழம்பு போன்றவை சாப்பிடலாம். இந்தச் சுவையைக் கேட்டது யார்? நம் உடல். இந்த உணவுகளைக் கொடுத்தது யார்? நீங்கள்தான்.

மிளகு ரசம் 

எந்த உணவுகள் ஏற்றது?

‘சளி’ என்கிற கழிவுகள் வெளியேறும் சமயங்களில் பொதுவாக எளிதில் செரிமானம் ஆகக் கூடிய உணவுகளைச் சாப்பிடுவது நல்லது. ஏனென்றால், கழிவு வெளியேற்றம் எனும் ‘சளி வெளியேறுதல்’ நடந்துகொண்டிருக்கிறது. அதற்குப் பாதிச் சக்தி தேவைப்படும். மீதி சக்தியை வைத்து நீங்கள் உண்ணும் மிளகு ரசத்தை உடலானது செரிமானம் செய்ய வேண்டும். ஒரே நேரத்தில் இரண்டு வேலைகள். இதுமட்டுமில்லாமல் தானியங்கியாக உடலினுள் இதயம் துடிக்கும், சிறுநீர் வெளியேறும் வேலை நடக்கும். மலம் கழியும். இன்னும் பல உள்ளுறுப்புகள் தானியங்கியாக வேலை செய்துகொண்டிருக்கும். இவ்வளவு வேலையுடன் கழிவு நீக்கமான சளியும் வெளியேறுகிறது. ஆகையால், உடலின் மேல் கொஞ்சம் பரிதாபம் காட்டி, கரிசனம் காட்டி எளிமையான உணவுகளைச் சாப்பிடுங்கள் எனக் கெஞ்சுகிறது, உங்கள் உடல்.

Cold 

சளி எவ்வளவு நாட்கள் வெளியேறும்?

உடலின் இந்தச் செயல்பாடுகளையெல்லாம் மனதில் கொண்டு, நீங்களும் உடல் கேட்ட (உணர்த்திய) கார சுவையில் எளிமையான உணவை கொடுத்தாயிற்று. நல்லது… உடனே, சளி வெளியேறுவது நின்றுவிடுமா? இதற்குப் பதில் சொல்ல வேண்டியது உங்க உடல்தான். உதாரணத்தில் 6 அழுக்குகள் உங்களது உடலில் இருந்தால், அதை வெளியேற்ற 4 நாட்கள் தேவைப்பட்டால் அதுவரை சளி வெளியேறும். சிலருக்கு 3 நாட்கள் ஆகலாம். சிலருக்கு 2 நாட்கள்கூட ஆகலாம். சிலருக்கு 7 நாட்கள்கூட ஆகலாம். இது அவரவர் உடலில் சேர்ந்துள்ள கழிவைப் பொறுத்து மாறுபடும். எவ்வளவு கழிவு இருக்கிறதோ அதன்படி சளி வெளியேறும். உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியின் திறன் பொறுத்து அதற்கான காலமும் ஆகும்.

Eat Fruits

சளி எங்கு உள்ளது? எங்கிருந்து வருகிறது?

சளி வெளியேறிக் கொண்டிருக்கிற சமயத்தில், பசி உணர்வு ஏற்பட்டுப் பழங்களைச் சாப்பிட உங்களுக்கு விருப்பம் வந்தால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? அய்யோ பழங்களா ‘சளி பிடிச்சிக்கும்’ எனச் சொல்வீர்களா? அல்லது பழங்களைச் சாப்பிடுவீர்களா? ஒன்றை நன்றாக புரிந்து கொள்ளுங்கள்.

பழங்களில் சளி இருக்கிறதா? உடலில் சளி இருக்கிறதா? உடலில்தான் சளி இருக்கும். பழங்கள் சாப்பிட்டால் சளி பிடிக்காது. கழிவு உடலில் இருந்தால், சளி கட்டாயமாக வெளியேறும். பசி உணர்வு வந்து, பழங்களைச் சாப்பிட விருப்பப்பட்டால் தாராளமாக நீங்கள் பழங்களைச் சாப்பிடலாம். பழங்கள் சாப்பிட உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் விட்டுவிடுங்கள். பிடிச்ச மிளகு ரசமோ, நண்டு ரசமோ, வத்தக்குழம்போ சாப்பிடுங்கள்.

நிறையப் பேர் மழைக்காலத்தில் பழங்களைச் சாப்பிடலாமா? சளி இருக்கும்போது ‘பழங்கள்’ சாப்பிடலாமா? தலைக்குக் குளித்திருக்கிறேன் இன்று இளநீர் குடிக்கலாமா? இப்படி விதவிதமாகக் கேள்வி கேட்பார்கள். எல்லாக் கேள்விக்கும் ஒரே பதில்தான். உணவுகளில், தண்ணீரில் ‘சளி’ இல்லை. உங்கள் உடலில் கழிவு இருந்தால் அதை வெளியேற்றத்தான், ‘சளியை’ உங்கள் உடல் உருவாக்குகிறது. சளி பிடிக்காது, சளி வெளியேறுகிறது. இதைத்தான் நாம் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறோம். கொய்யா சாப்பிட்டால் அய்யோ ‘சளி’ பிடிக்கும். கொய்யாவில் ‘சளி’ இல்லை. எனக்கு சைனஸ் தொல்லை, நான் தர்பூசணி சாப்பிடமாட்டேன். சளி பிடிக்கும். இதுவும் தவறு… சளி வெளியேற இயற்கை பிரபஞ்ச சக்தி அதிகமுள்ள பழங்களில் இருந்து ஆற்றலை உடல் பெற்று, கழிவை வெளியேற்ற உடல் முயற்சிக்கிறது. இது நல்ல செயல். பலமில்லாத உடலுக்கு, பழங்கள் உதவுகின்றன. கழிவுகளை வெளியேற்ற உடலுக்குப் பழங்களின் ஆற்றல் உதவுகின்றன. சளி வெளியேற அனுமதிப்பதே சிகிச்சை… சளி வெளியேறவிடாமல் மருந்து சாப்பிட்டுத் தடுப்பது சிகிச்சையல்ல, கெடுதி. உங்கள் உடலுக்கு நீங்களே செய்யும் துரோக பணி.

தலைக்கு ஊற்றினால், பழங்கள் சாப்பிட்டால், சில்லென்ற தண்ணீரில் குளித்தால், இளநீர் குடித்தால், பூசணிக்காய் கூட்டு சாப்பிட்டால், வெள்ளரிக்காய் சாப்பிட்டால், முள்ளங்கி சாப்பிட்டால், புடலங்காய் பொரியல் சாப்பிட்டால்… இப்படி நீர் காய்களோ, நீர் கனிகளோ, இளநீரோ, தலைக்கு ஊற்றினாலோ சளி பிடிக்காது... உங்கள் உடலில் கழிவு இருந்தால் சளி வெளியேறும். கழிவு இல்லையென்றால் சளி வெளியேறாது. உங்கள் உடலில் கழிவு இருந்து நீங்கள் மேற்சொன்ன காய், கனிகளைச் சாப்பிட்ட பிறகு சளி வந்தால், உங்கள் உடலுக்கு இதுவரை ஆற்றல் கிடைக்காமல் இருந்திருக்கிறது. இப்போதுதான் பழங்கள் போன்ற நல்ல இயற்கை உணவுகள் மூலமோ நல்ல தண்ணீர் குளியல் மூலமோ உடலில் இருந்து கழிவை வெளியேற்ற சளி உருவாகி வெளிவருகிறது என்று அர்த்தம். இதுதான் மனிதன் பிறந்தது முதல் நடக்கின்ற இயற்கையான நிகழ்வு. உடலின் செயல்பாடு. அதுவும் இந்த கொரோனா காலத்தில் ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டிய உண்மை. சளி வந்தால் மருந்து சாப்பிட்டுக் கழிவு வெளியேற்றத்தை தடுக்காதீர்கள் என உங்களது நோய் எதிர்ப்பு சக்தி தீர்மானித்து உங்களது உடல் உங்களிடம் பேசுகிறது… உடல் பேசுவதைக் கவனியுங்கள்…

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?