கர்ப்பம் ஆகாமல் தாய்ப்பால் கொடுக்க முடியுமா? நிபுணர்கள் சொல்வதென்ன?
கர்ப்பம் ஆகாமல் தாய்ப்பால் கொடுக்க முடியுமா? நிபுணர்கள் சொல்வதென்ன? Canva
ஹெல்த்

கர்ப்பம் ஆகாமல் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியுமா? எப்படி சாத்தியம்?

Priyadharshini R

கருத்தரித்த பெண்கள் மட்டுமே தாய்ப்பால் கொடுக்க முடியும் என்று நம்மில் பலர் நினைத்துக்கொண்டிருக்கிறோம்.

ஆனால் கர்ப்பம் ஆகாமலும் தாய்ப்பால் கொடுக்க முடியும் என்றும், திருநங்கைகளும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறதா? இது எப்படி சாத்தியம் என்று இந்த பதிவில் விரிவாக தெரிந்துக்கொள்ளலாம்.

குழந்தை பிறப்பதற்கு முன்பு அதாவது கர்ப்ப காலத்தில், தாய்ப்பால் சுரப்பதைத் தடுப்பதற்காக ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரான் ஹார்மோன்களின் அளவு அதிகரிக்குமாம்.

குழந்தை பிறந்த பின்னர் தாய்ப்பால் உற்பத்தியை தூண்டுவதற்கு காரணமான புரொலாக்டின் ஹார்மோன் அதன் வேலையை செய்கிறது.

இந்த ஹார்மோன் தான் மார்பக காம்புகளின் வழியாக தாய்ப்பால் வெளியே தள்ள உதவுகிறது. இந்த உயிரியல் செயல்முறையைப் பின்பற்றி மருத்துவ சிகிச்சையின் மூலம் தாய்ப்பால் தூண்டப்படுகிறது.

இதய நோய், உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம், மார்பக புற்றுநோய் அல்லது பிற ஹார்மோன் புற்றுநோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஹார்மோன் சிகிச்சை மேற்கொள்ள முடியாது.

குழந்தை தாய்ப்பாலை உறிஞ்சினாலும் பிரெஸ்ட் ஃபீடிங் பம்ப் மூலம் பாலை எடுத்தாலும் தாய்ப்பாலை உற்பத்தி செய்யும் புரொலாக்டின் ஹார்மோன் இந்த செயல்முறைக்கு அவசியம் என்கின்றனர் நிபுணர்கள். குழந்தையை பெற்றெடுப்பவரை விட இந்த செயல்முறையால் அதிகளவு தாய்ப்பால் சுரப்பு இருக்காது என்றும் கூறுகின்றனர்.

திருநங்கைகளும் இம்முறையின் மூலம் தாய்ப்பால் கொடுக்கலாம். திருநங்கைகள் பாலூட்டும் சுரப்பியை முழுமையாக அகற்றாத வரை, பாலூட்டும் திறனைக் கொண்டுள்ளதாக கூறுகின்றனர்.

பிறக்கும் போதே பெண்களாக இருப்பவர்களுக்கு கர்ப்ப காலத்தில் ஹார்மோன்களின் அதிகரிப்பை போன்று இந்த நடைமுறையிலும் அதிகரிக்குமாம். கர்ப்பமாக இல்லாதவர்களிடமிருந்து வரும் தாய்ப்பாலின் தரம் ஊட்டச்சத்து ரீதியாக சிறப்பாக இருக்கும், இதனால் எந்த விளைவும் இருக்காது என்கின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு

தினமும் ஊறவைத்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

இந்தியன் ரயில்வேயில் பணியாற்றும் டிடிஇயின் வேலைகள் என்னென்ன?

நதி மீனை வணங்கும் பக்தர்கள்; இந்த இந்திய கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

ரயில்களில் பயணிகளுக்கு ஏன் ’வெள்ளை நிற’ பெட்ஷீட்டுகள் வழங்கப்படுகிறது தெரியுமா?