Covid 19 Twitter
ஹெல்த்

கோவிட்-19 : மீண்டும் ஒரு அலையை இந்தியா தாங்குமா?

மினு ப்ரீத்தி

இந்தியாவில் கோவிட்-19 பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இயற்கையாகவோ செயற்கையாகவோ நோய் எதிர்ப்பு சக்தி இந்திய மக்களிடம் அதிகரித்துள்ளதா, மீண்டும் ஒரு கோவிட் அலையை இந்தியா தாங்குமா?

கடந்த வாரத்தில் நாட்டில் கோவிட் -19 கேஸ்கள் அதிகரித்துள்ளன. இதனால் இந்திய நாட்டில் கோவிட் தொற்றுநோயின் நான்காவது அலை வருமா என்பது பற்றிய அச்சத்தை மக்களிடம் தூண்டி இருக்கிறது.

ஜூலை 1885 இல், பிரெஞ்சு வேதியியலாளர் லூயிஸ் பாஸ்டர் தனது பாரிஸ் கிளினிக்கில் ஜோசப் மெய்ஸ்டர் என்ற ஒன்பது வயது சிறுவனும் அவனது தாயாரையும் சந்தித்தார். ஒரு வெறி நாய் ஜோசப்பை 14 முறை கடித்து இருந்தது. ரேபிஸ், ஒரு வைரஸ் நோய்; பாதிக்கப்பட்ட நோயாளிகளில் பெரும்பாலானவர்களைக் கொல்லும் என்று அந்தக் காலத்தில் அறியப்பட்டது. அப்போது, பாஸ்டர் வெறி நாய்க்கடிக்கு எதிரான தடுப்பூசியைப் பரிசோதித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது ஆராய்ச்சிகளில் நாய்கள் மற்றும் முயல்கள் மட்டுமே இருந்தன. ஜோசப்பின் தாய் தனது மருத்துவமனைக்கு வருவதற்கு முன்பே அவர் சுமார் 50 நாய்களைக் குணப்படுத்தி இருந்தார். மருத்துவம் செய்ய உரிமம் பெறாத லூயிஸ் பாஸ்டர், ரேபிஸ் நோயால் இறந்த மனிதர்களின் உலர்ந்த முதுகுத்தண்டின் பொடியிலிருந்தும் ரேபிஸால் இறந்த முயல்களிலிருந்தும் தடுப்பூசியை உருவாக்கினார்.

லூயிஸ் பாஸ்டர்

அந்தத் தாயை தன் மகனுக்குத் தடுப்பூசியைப் போடுவதற்கு ஒப்புக்கொள்ள வைக்கத் தனது மருத்துவ நண்பரின் உதவியை நாடினார் லூயிஸ் பாஸ்டர். புதிய தடுப்பூசி தனது மகனைக் காப்பாற்றுவதற்கான கடைசி நம்பிக்கை என்று அந்தப் பெண்ணை நம்பவைத்தார்.

பின்னர், லூயி பாஸ்டரின் மருத்துவ நண்பர் ஒருவர் அந்த ஜோசப்பிற்கு தடுப்பூசியைப் போட்டார். அவரது உயிர் காப்பாற்றப்பட்டது. பின்னர் அவர், 1940 இல் நாஜி ஜெர்மன் படைகள் லூயிஸ் பாஸ்டர் ஆய்வகத்தை ஆக்கிரமிக்கும் வரை அதன் பாதுகாவலராகவே பணியாற்றினார். ஆக்கிரமிப்பாளர்களிடம் சாவியை ஒப்படைக்க மறுத்து மெய்ஸ்டர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டார். நவீன அறிவியலில் தடுப்பூசி மூலம் நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்ததன் முதல் அடையாளமே இந்த நிகழ்வுதான்.

வெறி நாய்க்கடிக்கு சிகிச்சையளிப்பதற்கான முன்பு, நோய் எதிர்ப்புச் சக்தி என்பது இயற்கையாகவே இருந்தது. லூயிஸ் பாஸ்டர் பரிசோதனைக்குப் பின், நோய் எதிர்ப்புச் சக்தி செயற்கையாகத் தடுப்பூசியின் மூலம் கிடைத்தது என நம்பப்படுகிறது. அதாவது, ஒரு நோய்க்கிருமி (நோயை உண்டாக்கும் உயிரினம்) ஒரு நபரைத் தாக்கும். உயிர் பிழைத்தவர்கள் அடுத்த தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் திறனை வளர்த்துக் கொள்வார்கள். ஒரு நோய் பரவுவதை நிறுத்துவதற்கு நீண்ட காலம் எடுக்கும்.

தடுப்பூசி

தடுப்பூசிகளின் வளர்ச்சி மனிதர்களுக்கும், சில விலங்குகளுக்கும் பாதுகாப்புத் தருவதாக நம்பப்பட்டன. தடுப்பூசி போடப்பட்டவருக்கு எதிர்காலத்தில் நோய்க்கிருமி தாக்குதல்களை எதிர்த்துப் போராடும் திறனை வழங்குகிறதாகச் சொல்லப்படுகிறது. தடுப்பூசி போடப்பட்டால் மக்கள் தொகையில் தொற்று பரவுவதைத் தடுக்கும் எனச் நம்பப்படுகிறது. மக்களுக்குள் பரவும் தொற்றுநோயைத் தடுக்க உதவும். இப்படித்தான் உலகளாவிய தடுப்பூசி மூலம் போலியோ அல்லது பெரியம்மை ஒழிப்பை நோக்கி உலகம் நகர்ந்தது எனச் சொல்கிறார்கள்.

கோவிட்-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராட உலகளாவிய தடுப்பூசியின் அதே கொள்கைதான் இன்றும் பயன்படுத்தப்படுகிறது. 2020 ஆம் ஆண்டில், SARS-CoV-2 ஆல் ஏற்பட்ட பாதிப்புகள், கோவிட்-19 வைரஸ் போன்ற கண்டங்களை நாம் கடந்து வந்தோம். 60-70 சதவீத மக்கள் பாதிக்கப்பட்டிருந்தால் அல்லது தடுப்பூசி போடப்பட்டிருந்தால், நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கலாம் என்று அறிவியல் சமூகம் நம்பியது.

வைரஸ்

கோவிட்-19 நோயால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்திய மக்களிடையே SARS-CoV-2 இன் சரியான ஊடுருவல், அதாவது பரவிய எண்ணிக்கை உறுதியாகத் தெரியவில்லை. பல மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலான கோவிட்-19-ஆல் பாதிக்கப்பட்டதும் பதிவு செய்யப்படவில்லை. நாட்டில் எந்த மாநிலமும், மாவட்டமும் அல்லது எந்தக் கிராமமும் SARS-CoV-2 இலிருந்து தப்பவில்லை. கூடுதலாக, 18+ வயது வந்தவர்கள் 98 சதவீதத்திற்கும் அதிகமானோர் கோவிட்-19 தடுப்பூசியின் குறைந்தபட்சம் ஒரு டோஸாவது போட்டிருக்க வேண்டும் என அரசு சொன்னது.

இந்நிலையில் இயற்கையாகவோ செயற்கையாகவோ நோய் எதிர்ப்புச் சக்தியை இந்திய மக்கள் பெற்றிருக்கலாம். ஆயியென்றும்கூட, கடந்த வாரத்தில் நாட்டில் கோவிட் -19 கேஸ்கள் அதிகரித்துள்ளன. இந்திய நாட்டில் தொற்றுநோயின் நான்காவது அலை பற்றிய அச்சத்தைத் தூண்டவே செய்கிறது. மத்திய அரசு திங்கள்கிழமை காலையில், தினமும் சுமார் 90 சதவீதம் அதிகரித்துள்ளதாக அறிவித்தது.

கொரோனா

தடுப்பூசி போட்டிருந்தும் எப்படி மீண்டும் மீண்டும் வைரஸ் நம்மைப் பாதிக்கிறது?

இந்தக் கேள்விக்கான பதில் வைரஸின் அடிப்படைத் தன்மையில் உள்ளது. வைரஸ்கள் தன்னைதானே மாற்றிக்கொள்கின்றன எல்லா நேரங்களிலும் மாற்றமடைகின்றன. உருமாற்றம் நடைபெறுகிறது. உதாரணமாகச் சொன்னால், ஒவ்வொரு ஆண்டும் பொதுவாக வரக்கூடிய வைரஸ் காய்ச்சல் மாதிரி… ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு மாதிரி வருகின்றன. இதை அழிக்கவெல்லாம் முடியாது. நாம் நோய் எதிர்ப்புச் சக்தியை வளர்த்துக்கொள்வதுதான் நிரந்தரத் தீர்வாக அமையும்.

கோவிட்-19-ஐ பொறுத்தவரை, இந்தியாவில் தொற்றுநோயின் இரண்டாவது அலை முக்கியமாக SARS-CoV-2 இன் டெல்டா மாறுபாட்டால் ஏற்பட்டது. மூன்றாவது அலை Omicron மற்றும் அதன் மாறுபாடுகளான BA.1 மற்றும் முக்கியமாக BA.2 உடன் வந்தது. SARS-CoV2 இன் ஓமிக்ரானுடன் இன்னும் சில வேரியன்ட்களும் உள்ளன. பொதுவாகச் சொல்லப்படுபவை BA.1.1, BA.3, BA.4 மற்றும் BA.5 எனப் பெயரிடப்பட்டுள்ளன.

BA.1.1 என்பது BA.1 இன் சகோதரிதான். ஒரே குடும்பத்தின் வேரியன்ட் எனச் சொல்லப்படுகிறது. BA.3 பல நாடுகளில் கண்டறியப்பட்டாலும், அவை அதிக பரவும் தன்மையாக இருந்தாலும் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை.

BA.4 ஜனவரியிலிருந்து சுமார் 6-க்கும் மேற்பட்ட நாடுகளில் பதிவாகியுள்ளது. தென்னாப்பிரிக்கா, டென்மார்க், போட்ஸ்வானா, ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

BA.5 முதலில் தென்னாப்பிரிக்காவிலும் பின்னர் போட்ஸ்வானா பகுதியிலும் கடந்த ஆண்டு நவம்பரில் Omicron வேரியன்டும் முதலில் பதிவாகியிருந்தது.

WHO பலமுறை எச்சரித்துள்ளது. பல நாடுகள், குறிப்பாக ஆப்பிரிக்க கண்டத்தில் ஏழை உள்ள நாடுகள், தடுப்பூசிகளைப் போடவில்லை என்று. எனினும் தடுப்பூசி 2 டோஸ்கள் போடப்பட்டவர்களுக்கும் வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. தடுப்பூசி போட்டவருக்கும் கோவிட் பாதிப்புகள் வருகின்றன.

XE மாறுபாடு முதன்முதலில் இங்கிலாந்தில் ஜனவரியில் கண்டறியப்பட்டது, அதன் பின்னர் இது இந்தியா, சீனா மற்றும் தாய்லாந்தில் அடையாளம் காணப்பட்டது. UK இல் XQ, டென்மார்க்கிலிருந்து XG, பின்லாந்திலிருந்து XJ மற்றும் பெல்ஜியத்திலிருந்து XK போன்ற recombinant variants வகைகள் புழக்கத்தில் உள்ளன. அவற்றின் பரவும் தன்மையும் நோய்த்தொற்றும் பற்றித் துல்லியமாக அறியப்படவில்லை, ஆனால் XE மாறுபாடு சில ஆய்வுகளில் 20 சதவீதம் வரை அதிகமாகத் தொற்றக்கூடியது என கண்டறியப்பட்டுள்ளது.

புதிய வகைகளான BA.4 மற்றும் BA.5 ஆகியவற்றால் பாதித்த பெரும்பாலானவர்கள் முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டவர்களிடமிருந்து பதிவாகியுள்ளன. BA.4 மற்றும் BA.5 ஆகியவை பெரும்பாலும் லேசான கோவிட் நோயைத்தான் நோயாளிகளுக்கு ஏற்படுத்தியதாக WHO சொல்கிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?