அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பதால் தீமைகள் ஏற்படுமா? - நிபுணர்கள் விளக்கம் என்ன?  Twitter
ஹெல்த்

அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பதால் தீமைகள் ஏற்படுமா? - நிபுணர்கள் விளக்கம் என்ன?

NewsSense Editorial Team

'நீரின்றி அமையாது உலகு' என்ற பதத்திற்கு ஏற்றபடி மனிதர்களால் உணவு இல்லாமல் கூட இருக்க முடியும், ஆனால் நீர் இல்லாமல் இருக்க முடியாது என்பது நிரூபணமாகிறது. இப்போது கூட அடிக்கும் வெயிலுக்கு தண்ணீர் தான் பலருக்கு ஆகாரமாக இருக்கிறது.

இது தவிர நமது உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கும், உடலில் உள்ள உறுப்புகள், செல்கள் அனைத்தும் சரியாக செயல்படுவதற்கும் இந்த தண்ணீர் அவசியமாகிறது. அதனால், ஒரு மனிதன் உணவு இல்லாமல் கூட உயிர் வாழக்கூடும். ஆனால், தண்ணீர் இல்லாமல் உயிர்வாழ முடியாது.

தண்ணீரை அதிகளவு குடிப்பதால் சில தீமைகளும் ஏற்படுவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது. அதாவது, நம் ஒவ்வொருவரது உடல் எடையில் தண்ணீர் என்பது 50% முதல் 70% வரை உள்ளது.

ஆனால், அதிகமாக உழைக்கும் நபர்கள், விளையாட்டு வீரர்கள் சில நேரங்களில் வழக்கத்திற்கு மாறாக தண்ணீரை எடுத்துக்கொள்ள நேரிடும். இப்படி, அதிகளவு தண்ணீர் குடிக்கும் போது சிறுநீரகத்தால் அதிகளவு தண்ணீரை வெளியேற்ற முடியாது.

இப்படி இருந்தால் நமது ரத்தத்தில் உள்ள உப்பின் அளவு நீர்த்துப்போகும். இது ஆபத்தானது. இந்த நிலைக்கு 'ஹைபோநெட்ரீமியா' என்று பெயரிடப்பட்டுள்ளது.

அதனால் தண்ணீர் அதிகளவு குடித்தால் ஆபத்தா? என்று பயப்படத் தேவையில்லை. ஒரு நாளைக்கு உங்களது உடல் எந்த அளவுக்கு செயலாற்றுகிறதோ, உங்கள் உடல் எடையைப் பொறுத்து தண்ணீர் எடுத்துக்கொள்ளலாம். இது தவிர நாம் அருந்தும் தண்ணீரின் அளவை வானிலையும் தீர்மானிக்கிறது.

தண்ணீர் குடித்தல்

நாம் எடுத்துக்கொள்ளும் தண்ணீர் தான் நமது சுவாசம், குடல் இயக்கம். வியர்வை வெளியேற்றம் என பலவற்றிற்கு பங்களிக்கிறது. அதனால், தண்ணீரை அளவுக்கு ஏற்றப்படி எடுத்துக்கொள்வதும் அவசியமானது.

இது குறித்து நிபுணர்கள், சராசரியாக நாம் ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீரும், கோடை காலத்தில் 3.5 லிட்டர் தண்ணீரும் எடுத்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கிறார்.

அதாவது, அதிகமான அளவு நீரை வெளியேற்றுவதால் நமது சிறுநீரகங்கள் பாதிக்கப்படுகின்றன. இப்போது, அதிகமான அளவு நீரை வெளியேற்றுவதற்கு காரணம் அதிக அளவிலான தண்ணீரை உட்கொள்வது தான்.

அதிகளவு தண்ணீரை வெளியேற்றும் போது, ஹார்மோன் எதிர்வினை நிகழ்கிறது. இதனால் நீங்கள் அவ்வப்போது சோர்வாகவும், கவலையாகவும் காணப்படுவது உண்டு.

இது தவிர, உடலில் உள்ள சோடியம் மற்றும் பிற எலக்ட்ரோலைட்டுகளை நீர்த்துப்போவதால் தண்ணீரை அதிகமாக குடிக்க நேருகிறது.

இது மூலையில் உள்ள செல்கள் உட்பட மற்ற செல்களையும் பாதிக்க வாய்ப்புள்ளதாம். இந்த நோய் உயிருக்கு கூட ஆபத்து விளைவிக்கக் கூடும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?