Hairfall

 

NewsSense

ஹெல்த்

Hairfall : ஏன் முடி உதிர்கிறது, அதனை தடுக்க வழிகள் என்ன? - வினாக்களும், விடைகளும்

மன அழுத்தம் தரும் வேலைகள், துரித உணவுகள் நிறைந்திருக்கும் இந்தக் காலக்கட்டத்தில் உண்மையில் முடி உதிர்வை தடுப்பது சாத்தியமா? இதற்கு துறை சார்ந்த வல்லுநர்கள் கூறுவது என்ன?

NewsSense Editorial Team

நம்மில் பலருக்கும் இருக்கும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று தலை முடி உதிர்வு. இதன் காரணமாக நாமோ அல்லது நம் நண்பர்களோ பலர் ஒருவிதமான தாழ்வு மனப்பான்மையில் உழன்று கொண்டு இருப்பதை கண்டிருப்போம்.

எதனை தின்றால் பித்தம் தெளியும் என்பது போல இயற்கை மருந்து, மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் எடுத்துக்கொள்ளும் மருந்து என பலரும் முடி உதிர்வை தவிர்க்க முயல்கின்றனர்.

மன அழுத்தம் தரும் வேலைகள், துரித உணவுகள் நிறைந்திருக்கும் இந்தக் காலக்கட்டத்தில் உண்மையில் முடி உதிர்வை தடுப்பது சாத்தியமா? இதற்கு துறை சார்ந்த வல்லுநர்கள் கூறுவது என்ன?

Hairfall

முடி உதிரும் பிரச்சனை

"தினமும் 50-80 முடிகள் உதிர்ந்தால், அது இயல்பே. அதுகூட விழக்கூடாது என்று நம்மால் எதிர்பார்க்க முடியாது. காரணம், அது முடி வளர்ந்து விழுவதின் சுழற்சி. இந்த முறையை ஆனாஜென்,கெடாஜென் மற்றும் டெலோஜென் என்று கூறுவார்கள். ஆனாஜென் என்பது, முடி வளரும் நிலை, கெடாஜென் என்பதில் முடி மேற்கொண்டு வளராது, விழவும் விழாது ஆனால், டெலாஜென் என்ற கட்டத்தை அடையும் போது முடி உதிர்ந்துவிடும். இவ்வாறு உள்ள இந்த சுழற்சியில், ஒருவருக்கு ஒரு நாளுக்கு 100 முடிகள் வரை கொட்டலாம். ஆனால் அதற்கும் மேலாக, 150 முடிகளோ அல்லது நீங்கள் ஒவ்வொரு முறையும் வாரும்போதோ முடி உதிர்ந்தால், முடியின் மீது கவனம் செலுத்தும் நேரம் வந்து விட்டது என்று அர்த்தம்" என்று ஓர் இணைய தள பேட்டியில் கூறி இருக்கிறார் அழகுக்கலை நிபுணரான வசுந்தரா.

முடி உதிர காரணம் என்ன?

"சிலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் முடி கொட்டும். உடலில் சத்துகள் சரியாக இல்லை என்றால் முடிகொட்டும். டைபாய்ட், ஜாண்டிஸ் மாதிரி நோய் வந்தவர்களுக்கு, நோய் தாக்கியபோது கொட்டாமல், முடி டெலோஜென் நிலையை அடைந்த பின்பு, அதாவது நோய் குணமான 1.5 மாதங்களில் கொட்டும். அத்தகைய நிலையில், பயப்பட எதுவுமில்லை. நிச்சயமாக முடி வளரும்" என்கிறார் அவர்.

முடி உதிர்வை தவிர்க்க ஐந்து எளிய வழிகள்:

முடி உதிர்வை தடுக்க சில எளிய வழிகளும், சில தெரபிகளும் உள்ளன. அதில் முக்கியமானது ரிலாக்ஸ் தெரபி.

ரிலாக்ஸ் தெரபி

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு இயல்பாகவே முடி உதிர்வு அதிகமாக இருக்கும். கவலை, கோபம் மற்றும் பதற்றம் ஆகியவைதான் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துபவை. ஆயில் மசாஜ் செய்துகொள்வதாலும், யோகா, மூச்சுப்பயிற்சி போன்றவற்றைத் தொடர்ந்து செய்வதாலும் உடலும் மனமும் தளர்வடையும் (ரிலாக்ஸ் ஆகும்).

அரோமா தெரபி

அரொமா ஆயில்களால் தலையில் மசாஜ் செய்யும்போது, பல வகையான பலன்கள் நமக்குக் கிடைக்கும். லாவெண்டர் ஆயில், ரோஸ்மேரி ஆயில், செடார்வுட் ஆயில், பெப்பர்மின்ட் ஆயில் ஆகியவை கூந்தல் வளர்ச்சிக்கு துணைபுரியக்கூடியவை. ஆனால் இவற்றை அப்படியே உபயோகிக்கக் கூடாது. தேங்காய் எண்ணெய், ஆலிவ் ஆயில், பாதாம் எண்ணெய் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை ஒரு டீஸ்பூன் அளவுக்கு எடுத்துக்கொண்டு, மேலே குறிப்பிட்டுள்ள அரோமா ஆயில்களில் ஒன்றை 1 சொட்டு அளவு மட்டும் சேர்த்து, தலையில் நன்கு மசாஜ் செய்ய வேண்டும். இதனால், தலைக்கு ரத்த ஓட்டம் சீராகப் பாயும். முடியின் நுனி முதல் அடி வரை எண்ணெயில் இருக்கும் ஊட்டச்சத்துக்களை இதன் மூலம் எடுத்துச் செல்லலாம். இது, முடியின் வேர்கள் பலமாகவும், சீராக வளர்வதற்கும் தூண்டும். இதற்கு சில ஸ்பாக்கள் ரூபாய் 1000 முதல் 10,000 வரை வாங்குகின்றன. விட்டமின் பா உள்ளவர்கள் அங்கு செல்லலாம்… எதற்கு அவ்வளவு செலவு என்பவர்கள், வீட்டிலேயா இதனை முயலலாம்.

வெங்காயம் மற்றும் பூண்டு

சிலருக்கு பூச்சி வெட்டால், தலையில் முடியில்லாமல் ஆங்காங்கே வழுக்கை விழுந்ததுபோலத் தோன்றும். இதற்குச் சிறந்த மருந்து, வெங்காயம்தான். வெங்காயச் சாற்றை தலையில் தேய்த்து, நன்கு மசாஜ் செய்ய வேண்டும். ஒரு மணி நேரத்துக்குப் பிறகு தலையை நன்கு அலச வேண்டும். இப்படி வாரத்துக்கு மூன்று முறை தொடர்ந்து ஆறு மாதங்களுக்குச் செய்துவர, பூச்சி வெட்டு மற்றும் பொடுகுத் தொல்லைகள் நீங்க வாய்ப்புகள் அதிகம்..

மனோவசியம்

முடி உதிர்வுக்கு மேலும் ஒரு முக்கிய காரணம், எதிர்மறை எண்ணங்கள் நிறைந்த மனரீதியான பிரச்னைகளே. ‘ஹிப்னோதெரபி’ (Hypnotherapy) எனப்படும் மனோவசியப் பயிற்சியைக் கொடுப்பதன் மூலம் ஒருவருக்கு, தன் மீது இருக்கும் மரியாதை மற்றும் நம்பிக்கையைப் பல மடங்கு அதிகரிக்கச் செய்யலாம். அதனால் மன உளைச்சல் குறையும்; முடி உதிர்வதும் குறையும்.

ஆரோக்கிய உணவு

ஊட்டச்சத்து குறைபாட்டாலும் முடி உதிர்வு ஏற்படலாம். ஆரோக்கியமான கூந்தலுக்கு புரதச்சத்து, இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் நிறைந்த உணவுகள் அவசியம். கேரட், பச்சைக் காய்கறிகள், மிளகு, எலுமிச்சை, திராட்சை, உலர் பழங்கள், மீன், முட்டை போன்ற உணவுகள் கூந்தலை அடர்த்தியாகவும் ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுபவை.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?