Food  Twitter
ஹெல்த்

கர்ப்பப்பை பிரச்சனை தீர்க்கும் உணவுகள்- பட்டியல் இதோ

மினு ப்ரீத்தி

மாதவிலக்குச் சமயம் வருகின்ற வயிறு வலி தொடங்கிக் கர்ப்பப்பை, சினைப்பை புற்றுநோய் வரை பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகிரார்கள். பெண்களின் சிறப்பு உறுப்புகளான கர்ப்பப்பை, சினைப்பையை ஆரோக்கியமாக வைத்திருக்க நம் ஊரில் கிடைக்கின்ற உணவுகளே போதுமானது. அவ்வகையில் எந்தெந்த உணவுகளைப் பெண்கள் சாப்பிட்டால் பலன் கிடைக்கும் எனப் பார்க்கலாம்.

Pomegranate

செம்பருத்தி பூ


சீன மூலிகை மருத்துவம், இந்திய ஆயுர்வேதத்தில் செம்பருத்தி பூ மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பெண்கள் பிரச்சனையைக் குணமாக்கும் பூ இது. மேலும் இதயம், நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றை மேம்படுத்தும். ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் வயிறு வலியை தீர்க்க 48 நாட்கள் சிவப்பு நிற செம்பருத்தி பூவை சாப்பிட்டு வரலாம். இதை ஆய்வு செய்தும் நிரூபித்து இருக்கிறார்கள். செம்பருத்தி பூவை டீயாக செய்து குடிக்கலாம். அல்லது வெறுமனே மென்றும் சாப்பிடலாம். மாதவிடாய் நிற்கும் காலப் பெண்களின் ஹார்மோன் தொல்லைகளுக்கும் செம்பருத்தி பூ மருந்தாகும். நீர்க்கட்டி, நார்க்கட்டி, அதிக ரத்தபோக்கு, சீரற்ற ரத்தபோக்கு ஆகியவற்றைச் சரிசெய்யும்.

Hibiscus Tea

நட்ஸ், விதைகள்

எள், ஆளிவிதை, பூசணி விதை, சூரியகாந்தி விதை, பாதாம், வால்நட், முந்திரி ஆகியவற்றில் நல்ல கொழுப்பு நிறைந்துள்ளது. ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. நார்க்கட்டிகள் உருவாகும் வாய்ப்பைக் குறைக்கும். கர்ப்பப்பை புற்றுநோய் வருவது தடுக்கும் ஆற்றல் இதில் உள்ளது. குழந்தையின்மையால் அவதிபடுபவர்கள் காலை உணவாக, நட்ஸ் விதைகள், பழங்களை டிபனுக்கு பதிலாகச் சாப்பிட வேண்டும்.

Dry Fruits and Nuts

வாழைப்பூ

வெள்ளைப்படுதல், கர்ப்பப்பை கோளாறுகளைத் தீர்க்கும் பூ, வாழைப்பூ. இந்தப்பூவை பருப்புச் சேர்க்காமல், அவித்து தேங்காய்த்துருவலுடன் சேர்த்து சாப்பிடுவது மிகுந்த பலனைக் கொடுக்கும். ரத்தமூலம், வெள்ளைப்படுதல், மனக்குழப்பம், சிறுநீர் கடுப்பு, கை கால் எரிச்சல் ஆகியவை நீங்கும். பெண்களின் சினைமுட்டைகள் ஆகியவற்றுக்கு நல்லது. கர்ப்பப்பை வலுவாகும்.

Banana Flower

கீரைகள்

அனைத்துக் கீரைகள்: முள்ளங்கி கீரை, பீட்ரூட் கீரை, கேரட் கீரை, நூல்கோல் கீரை ஆகிய கீரைகள் சாப்பிட கர்ப்பப்பை, சினைப்பைக்கு நல்லது. உடலில் ஆல்கலைனை சமநிலைக்குக் கொண்டு வரும். ஃபோலிக் சத்துகள் இதில் உள்ளதால் பெண்கள் தொடர்பான சிக்கல்கள் வராமல் தடுக்கும்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறு தேன் கலந்து குடித்து வர கர்ப்பப்பை சுத்தமாகும், ஆரோக்கியமாகும். விட்டமின் சி இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் பெருகும். கர்ப்பப்பை தொற்றுகள், கட்டிகள் மற்ற தொந்தரவுகள் ஏற்படாமல் பாதுகாக்கும்.

Spinach

கற்றாழை

மூலிகைகளிலேயே மிக முக்கியமானது, சோற்றுக் கற்றாழை எனும் குமரி. உணவாகிய மருந்து, மருந்தாகிய உணவு எனச் சித்த மருத்துவர்கள் சொல்வார்கள். பெண் பூப்பெய்தும்போது, ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாகவும் புரோஜெஸ்ட்ரான் குறைவாகவும் இருக்கும். மெனோபாஸ் அடையும் சமயத்தில் ஈஸ்ட்ரோஜன் குறைவாகவும், புரோஜெஸ்ட்ரான் அதிகமாகவும் சுரக்கும். சமநிலை மாறாமல் இருந்தால், பிரச்சனைகள் இல்லை. சமநிலை மாறிவிட்டால், சீரற்ற மாதவிலக்கு, கருவுறுதலில் பிரச்சனை, கருக்கலைதல், கட்டி உருவாகுதல், மார்பகம் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் ஆகியவை ஏற்படும். இதற்கெல்லாம் எளிய தீர்வாக இருக்கிறது கற்றாழை. வாரம் மூன்று நாட்கள், கற்றாழையை ஜூஸாக சாப்பிட்டுவர, குணம் கிடைக்கும். கற்றாழையைத் தோல் நீக்கி, நன்கு கழுவி ஜூஸ் செய்வது முக்கியம். நன்கு கழுவாவிட்டால் பேதியாகலாம்

Aloe Vera

வெற்றிலை

வெற்றிலையிலிருந்து கால்சியம், இரும்பு போன்ற சத்துக்கள் கிடைக்கின்றன. அந்தக் காலத்தில் வெற்றிலை போடுபவர்களுக்கு கர்ப்பப்பை தொந்தரவுகள் வராது அதனால் பல பெண்கள் வெற்றிலை போடும் பழக்கத்தில் இருந்தனர்.

வெற்றிலை வெறும் வெற்று இலை அல்ல; ‘கர்ப்பப்பை வெப்ப இலை’ என்பது மருவி பேச்சு வழக்கில் மாறி கருவேப்பிலை என்று மாறியதுபோல், இதுவும் வெற்றுஇலை என்று பரப்பப்படுகிறது. வெற்றிலையைச் சாப்பிட பிடிக்காதவர்கள் வெற்றிலை டீ போட்டுக் குடிக்கலாம். பனங்கற்கண்டு வைத்துச் சுவைக்கலாம்.

Betal Leaves

வெண்ணெய் பழம் / அவகேடோ

கர்ப்பப்பை வடிவத்தைக் கொண்டிருப்பது, அவகேடோ. நல்ல கொழுப்பு நிறைந்துள்ள பழம் இது. காலைவேளையில் ஸ்மூத்தி செய்து குடித்திட பலன் கிடைக்கும். டிபனுக்கு பதிலாக அவகேடோ ஸ்மூத்தி, நட்ஸ், விதைகளைக் காலை உணவாகப் பெண்கள் சாப்பிட கர்ப்பப்பை, சினைப்பை தொந்தரவுகள் சரியாகும்.


மாதுளை

மாதுளையின் சிறப்பு அதன் நிறம். ரத்த உற்பத்திக்கு உதவும். சீரற்ற மாதவிலக்கு, கர்ப்பப்பை கட்டி, வயிறு வலி, சினைப்பை தொந்தரவுகள் நீங்க மாதுளையை அடிக்கடி சாப்பிட்டு வருவது நல்லது. இதன் துவர்ப்பு இனிப்பு சுவை கர்ப்பப்பை, சினைப்பை தொந்தரவுகளைக் குணப்படுத்தும்.

Avacado

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?