Health: காலை பிரேக் ஃபாஸ்ட்க்கு சாப்பிடக்கூடாத உணவுகள் என்னென்ன? ட்விட்டர்
ஹெல்த்

Health: காலை பிரேக் ஃபாஸ்ட்க்கு சாப்பிடக்கூடாத உணவுகள் என்னென்ன?

Keerthanaa R

நாம் தினசரி சாப்பிடும் உணவுகளில் பிரேக் ஃபாஸ்ட் ம்கவும் அவசியமானது. நாள் முழுவதும் சாப்பிடாமல் இருந்தாலும், காலை உணவை நாம் தவிர்க்கக்கூடாது.

காலை உணவின்போது, முடிந்தவரை புரதம், வைட்டமின் என அனைத்து ஊட்டச்சத்தும் கிடைக்கும் உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம்.

பிரேக் ஃபாஸ்ட்க்கு சாப்பிடக் கூடாத உணவுகள் என்னென்ன?

சீரியல்கள்

கார்ன் ஃபிளேக்ஸ், சாக்கோஸ் போன்ற சீரியல்களை காலை உணவுக்கு எடுத்துக்கொள்வதை தவிர்க்கவேண்டும். இதில் அதிக அளவில் சர்க்கரைத் தன்மையும் சுத்தீகரிக்கப்பட்ட கார்ப்போஹைடிரேட்களும் உள்ளதால் அது உடல் நலத்துக்கு கேட் தரும்

சாசேஜ்

சாசேஜ்களில் அதிக அளவில் கொழுப்புச்சத்து இருக்கும். காலையில் வெறும் வயிற்றில் இருக்கும்போது எண்ணெய் போன்ற விஷயங்கள் அதிகமாக இருக்கும் உணவுகளை தவிர்க்கலாம்

மஃபின்

மஃபின் என்பது கப் கேக் வகைகள். இவை பெரும்பாலும் மைதாமாவினால் செய்யப்பட்டிருக்கும், அளவுக்கு அதிகமாக சர்க்கரையும் இருக்கும். இதனால் காலை உணவுக்கு இந்த் கேக்குகள் வேண்டாம்.

இனிப்பாக சாப்பிட நினைத்தால் வேறு ஏதேனும் ஸ்வீட்களை, கொஞ்சமாக எடுத்துக்கொள்ளலாம்

ஜூஸ்

இயற்கையாக வீட்டில் தயாரிக்கப்படும் கேரட், ஆரஞ்சு போன்ற ஜூஸ் வகைகள் அருந்தலாம். ஆனால் இப்போது காலில் சக்கரம் கட்டி ஓடிக்கொண்டிருக்கும் சமயத்தில் நாம் பேகேஜ் ஜூஸ்களை நாடுகிறோம். இவற்றில் செயற்கையான சர்க்கரை, புரதம் போன்றவை தான் இருக்கும் என்பதால், காலை உணவில் சேர்க்காமல் இருப்பதே சிறந்தது

வாஃபில்

இவற்றையும் பெரும்பாலும் மைதா மாவினால் செய்கிறோம் நாம். வாஃபில்களோடு பெர்ரி பழங்கள், சிரப்கள், தேன் போன்றவற்றை சேர்த்து சாப்பிடுவது வழக்கம். ஆனால் பெருமளவில் வாஃபிலே இருக்கும் என்பதால் காலை உணவுக்கு இது சிறந்த உணவு அல்ல

மேலே குறிப்பிடப்பட்டுள்ள உணவு வகைகள் பெரும்பாலும் மேல் நாட்டு பழக்கங்களை சார்ந்தவை. இன்று நம் ஊர்களிலும் இந்த உணவு வகைகள் கிடைக்க ஆரம்பித்துள்ளதால், பலரும் ஹெல்த் கான்சியஸ் ஆக இருப்பதாக நினைத்து, உணவுப் பழக்கங்களை மாற்றியுள்ளோம்.

நம் ஊரில் கிடைக்கும் உணவு வகைகளே சரியான அளவில் சாப்பிட்டலே நாம் ஹெல்தி ஆக இருக்கலாம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?