"குளிர்கால பிரச்னைகளை தீர்க்கும் நெல்லிக்காய்" - என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? Canva / Amla
ஹெல்த்

"குளிர்கால பிரச்னைகளை தீர்க்கும் நெல்லிக்காய்" - என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?

நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடல் எடையை சமன்செய்யவும் செரிமானத்தை மேம்படுத்தவும், முடி மற்ற்றும் சரும பராமரிப்பிலும் உதவும். வயதாகும் வேகத்தைக் குறைக்கவும் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கவும் நெல்லிகாய் உதவும் என்ற கருத்தும் நிலவுகிறது.

Antony Ajay R

நெல்லிக்காய் என அழைக்கப்படும் பெரிய கொட்டையும் மினுங்குக் பச்சை நிற மேற்புறமும் உள்ளங்கை அளவும் உள்ள பழம் இந்திய நிலங்கள் எங்கும் பரவி வளரக்கூடியது. இதை ஒருவகையில் நாம் வரமாக கருதலாம்.

ஏனென்றால் நெல்லிக்காய் ஊட்டச்சத்துகளின் பெட்டகமாக இருக்கிறது. ஊட்டச்சத்து சி மிகுந்துள்ளது மட்டுமல்லாது பல ஆண்ட்ஆக்ஸிடன்ட்களும் (ஆக்ஸிஜனேற்றிகள்) இரும்பு, கால்சியம் உள்ளிட்ட முக்கிய தாதுக்களும் இருக்கின்றன.

நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடல் எடையை சமன்செய்யவும் செரிமானத்தை மேம்படுத்தவும், முடி மற்ற்றும் சரும பராமரிப்பிலும் உதவும். வயதாகும் வேகத்தைக் குறைக்கவும் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கவும் நெல்லிகாய் உதவும் என்ற கருத்தும் நிலவுகிறது.

வைட்டமின் சி அதிகமிருப்பதால் இந்த கனி குளிர்காலத்தில் சாப்பிடுவது சிறப்பு வாய்ந்தது. குளிரினால் காய்ச்சல் மற்றும் ஜுரம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்பதனால் நோய் எதிர்ப்பு சக்திதரும் நெல்லிக்காய் உடலுக்கு நல்லது. நெல்லிக்காயை குளிர்காலத்தில் சாப்பிடுவதனால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என இந்த பதிவில் காணலாம்.

பொதுவாக குளிர்காலத்தில் ஏற்படும் காய்ச்சல், சளியில் இருந்து காக்க நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும் வைட்டமின் சி நெல்லிக்காய் உண்பதனால் கிடைக்கும்.

சுவாசப்பிரச்னைகளில் இருந்து காக்க நெல்லிக்காய் உதவும். ஆஸ்துமா, மூச்சுக்குழல் அழற்சியில் இருந்து நாம் தப்பிக்க நெல்லிக்காயை குளிர்காலத்தில் உட்கொள்ளலாம்.

அமிலத்தன்மை மற்றும் அஜீரணத்தில் இருந்து விடுவித்து மலச்சிக்கல் இல்லாமல் இருக்க செரிமானத்தை மேம்படுத்தும் நெல்லிக்காயை உண்ணலாம்.

நெல்லிக்கனி பாக்டீரியா மற்றும் வைரஸ் எதிர்ப்புத்தன்மையுடையது. இதனால் சளி காய்ச்சலில் இருந்து நாம் விலகியிருக்கலாம்.

நெல்லிக்காயில் உள்ள ஆண்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி முடி உதிர்வைத் தடுத்து முடி வளர வழிவகைச்செய்யும்.

நம் சருமத்தை பளபளப்பாக்கவும் பிரச்னைகளில் இருந்து காத்திடவும் நெல்லிக்கனியை தினமும் சாப்பிடலாம்.

இரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக வைக்க நெல்லிக்கனி உதவும். குளுகோஸ் மற்றும் வளர்சிதை மாற்றத்தை சமநிலையில் பேனவும் இது உதவும்.

தொடர்ந்து நெல்லிக்காய் சாப்பிட்டால் நம் கண்பார்வை மேம்படும்.

நெல்லிக்காயில் கால்சியம் அதிகமாக இருப்பதனால் எலும்புகள் வலுபெற உதவும்.

நெல்லிக்காயில் இருக்கும் கால்சியம் சி எப்போதும் இளமையாக இருக்க உதவும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?