நிறையப் பேருக்கு நரை முடி தொந்தரவு இருக்கிறது. கெமிக்கல் டைகளை பயன்படுத்தப் பயம், காரணம் கெமிக்கல்களால் புற்றுநோய்கூட வரும் ஆபத்துகள் உள்ளன. அதற்கு மாற்றாக, இயற்கை முறையில் நரை முடியைக் கருப்பாக்கலாம். வீட்டிலே ஹென்னா தயாரித்து முடியில் பூசிக் கொள்ளலாம். நரை முடி கருப்பாக மாற பிளாக் ஹென்னா தயாரிப்பு முறையைப் பற்றிப் பார்க்கலாம்.
தேவையானவை
ஹென்னா - ஒரு கப்
சூடான பிளாக் காபி - பேஸ்ட்டாக மாற்றுவதற்குத் தேவையான அளவு
எலுமிச்சைச் சாறு - ஒரு பழம்
ஆப்பிள் சிடர் வினிகர் 2 ஸ்பூன்
ப்ளைன் யோகர்ட் - 2 அல்லது 4 ஸ்பூன்
இண்டிகோ (அவுரிப் பொடி அல்லது அவுரி இலை) - 1 1/2 கப்
ஹென்னா பொடியுடன், சூடான பிளாக் காபி கலந்து பேஸ்ட்டாக்கிக் கொள்ளுங்கள். பிறகு எலுமிச்சைச் சாறு, ஆப்பிள் சிடர் வினிகர் கலந்து, 6 மணி நேரம் ஊறவையுங்கள். இரும்பு பாத்திரத்தில் அல்லது கண்ணாடி பவுலில் வைக்கலாம். பிளாஸ்டிக், ஸ்டீல், அலுமினியம் பாத்திரங்களைத் தவிர்க்க வேண்டும்.
எப்போது பயன்படுத்துகிறீர்களோ, அதற்கு முன் யோகர்டையும் ஹென்னாவில் கலந்து கூந்தலில் பூசுங்கள். இரண்டு மணி நேரம் கழித்து, கூந்தலை அலசி நன்கு உலர்த்துங்கள். ஷாம்பு போடுவதைத் தவிர்க்க வேண்டும்.
மறுநாள், இண்டிகோவை வெந்நீரில் காய்ச்சி அதைத் திக்கான பேஸ்ட்டாக மாற்றி, அதைக் கூந்தலில் பூசுங்கள். மீண்டும் இரண்டு மணி நேரம் கழித்து, கூந்தலை அலசுங்கள். கருகரு கூந்தல், மென்மையாகவும், அழகாகவும் இருக்கும்.
டார்க் பிரவுன் ஹென்னா தயாரிக்கும் முறையைத் தற்போது பார்க்கலாம். இது பார்க்க நேச்சுரலாக இருக்கும். ஒருநாளிலே செய்து முடிக்கலாம். கருப்பாக மாற, இரண்டு நாள் செய்ய வேண்டி இருக்கும். டார்க் பிரவுனாக மாற ஒருநாள் போதுமானது.
தேவையானவை
ஹென்னா - ஒரு கப்
பட்டைப் பொடி - கால் கப்
சூடான பிளாக் காபி மற்றும் திராட்சை சாறு , பேஸ்டாக மாற்றுவதற்குத் தேவையான அளவு
எலுமிச்சைச் சாறு - ஒரு பழம்
ஆப்பிள் சிடர் வினிகர் - 2 ஸ்பூன்
ப்ளைன் யோகர்ட் - 2 முதல் 4 ஸ்பூன்
இண்டிகோ (அவுரிப் பொடி) - 3/4 கப்
ஹென்னா பொடியுடன், பட்டைப் பொடியைக் கலந்து சூடான பிளாக் காபி மற்றும் திராட்சை சாறு கலந்து, பேஸ்ட்டாக மாற்ற வேண்டும். பிறகு, எலுமிச்சைச் சாறு, ஆப்பிள் சிடர் வினிகர் கலந்து 6 மணி நேரம் ஊறவையுங்கள்.
பயன்படுத்துவற்கு முன்பு, இண்டிகோவை தண்ணீரில் பேஸ்ட்டாகக் கலந்து ஹென்னா பொடியுடன் கலந்துவைக்கவும். பிறகு யோகர்ட்டை ஹென்னாவில் கலந்து, உடனே கூந்தலில் பூசிவிடுங்கள். இரண்டு மணி நேரம் கழித்து, கூந்தலை அலசுங்கள். டார்க் பிரவுன் கூந்தலுடன் நீங்கள் வலம் வரலாம். ஷாம்பு போடுவதைத் தவிர்க்க வேண்டும்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com