சீரக தண்ணீர் Twitter
ஹெல்த்

சீரக தண்ணீர் : இந்த 7 பலன்கள் தெரியுமா? | Nalam 360

NewsSense Editorial Team

இயற்கை நமக்கு அளித்துள்ள ஏராளமான கொடைகளில் முதன்மையானது சீரகம். கேரளாவில் நீங்கள் தண்ணீர் வேண்டும் என்று கேட்டாலே அவர்கள் நமக்கு பொதுவாக அளிப்பது சீரக தண்ணீரை தான். சீரகத்தின் பயன்களை உணர்ந்தவர்கள் கேரள மக்கள்.

வெறும் வயிற்றில் சீரக தண்ணீர் குடிப்பதால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது. சீரக தண்ணீரை குடித்து வந்தால், இருதயத்தில் தங்கி இருக்கும் சளியை அகற்றுவதோடு, நம்மை சீராக சுவாசிக்கவும் உதவுகிறது. இது சளியையும் குணப்படுத்தும் தன்மையுடையது. இது ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது.

இவ்வளவுதான் நன்மைகளா? இல்லை இன்னும் பல நன்மைகள் உள்ளன. அவற்றில் முதன்மையான 9 பயன்களை மட்டும் இங்கே பார்ப்போம்.

சீரக தண்ணீரின் பயன்கள்

  • வெறும் வயிற்றில் சீரகம் கலந்த தண்ணீரை குடித்து வருவது முகம், கூந்தல் அழகுக்கும் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும்.

  • தண்ணீரில் சிறிது சீரகத்தைப் போட்டுக் கொதிக்க வைத்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர வயிற்றுக்கு மிகவும் நல்லது. அஜீரணத்தில் இருந்து நிவாரணம் அளிக்கும். வயிற்றுவலிக்கும் தீர்வு தரும்.

  • சீரகத்தில் நார்ச் சத்து உள்ளதால் மலச் சிக்கலை தீர்க்கும். ரத்த அழுத்தம் உள்ளவர்கள் சீரக நீரை குடித்து வந்தால் சிறப்பான முன்னேற்றத்தைக் காணலாம்.

  • கொரோனா காலங்களில் சீரகத் தண்ணீரானது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. சீரகத் தண்ணீரில் அதிக அளவு இரும்பு சத்தும் நார்ச்சத்தும் உள்ளன.

  • இது உங்கள் நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகரிக்க உதவுகிறது. எளிதில் எந்த நோயும் உங்களைத் தாக்காது காக்கிறது.

  • சீரகத்தின் இரும்புச் சத்து இரத்த சோகைக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. இரும்புச்சத்து உடலின் மிக முக்கியமான கனிமங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது, ஏனெனில் சீரகத் தண்ணீரானது சிவப்பு இரத்த அணுக்களை உருவாக்குவதிலும், இரத்த ஓட்டத்தில் ஆக்ஸிஜன் கொண்டு செல்லும் ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது

  • சளி பிரச்னை உள்ளவர்கள், சீரக நீரை குடித்தால் சுவாசக் குழாயில் உள்ள கிருமிகள் அழிக்கப்பட்டு பிரச்னைக்கு தீர்வு உண்டாகும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?