நம் உணவுப் பழக்கங்கள் தான் பெரும்பாலும் நம் உடல்நிலையை கணிக்கின்றன. உரிய நேரத்தில், அளவான, சத்துள்ள உணவுகளை சாப்பிட்டு வந்தால் நோய்வாய்படாமலும், நல்ல ஆரோக்கியத்துடனும் வாழலாம்.
தற்போது உள்ள நிலையில், பெரும்பாலும் கிடைக்கும் நேரத்தில், கிடைக்கும் உணவை பசிக்கிறதே என்று சாப்பிட்டு விடுகிறோம். குறிப்பாக இரவு நேரங்களில். இது ஜங்க் ஃபுட் ஆகவே இருக்கிறது.
அப்படி இரவு உணவு முடித்த பிறகும் நள்ளிரவில் பசித்தால், ஆரோக்கியமற்ற உணவை நாடிச் செல்லவேண்டாம்.
அதற்கு மாற்றாக சில ஆரோக்கியமான உணவு வகைகளை இதில் தொகுத்துள்ளேன். அதனை சாப்பிடுங்கள்
பெர்ரி வகைகளில் கொஞ்சம் அனைவருக்கும் ஃபேவரெட்டாக இருப்பது ஸ்ட்ராபெர்ரி பழங்கள். இது புரதம், கார்போஹய்டிரேட், நாற்சத்து நிறைந்தது. வைட்டமின்கள் சி, பி9 உள்ளன.
இரவில் பசிக்கிறது என்றால், ஒரு பௌல் ஸ்ட்ராபெர்ரி பழங்களை சாப்பிட்டால், வயிறும் நிரம்பும், விரைவில் உறங்கவும் உதவும்
செரிமானம், எலும்புகள் வலுவாக, இருதய ஆரோக்கியம் காக்க என பல வகைகளில் நல்ல குணங்களை கொண்டுள்ளது வாழைப்பழங்கள். இதிலுள்ள மெலடோனின் உறக்கத்தை வரவழைக்கவல்லது.
பெயர் கேட்க வித்தியாசமாக இருக்கலாம். ஆனால் உணவுவகை அல்ல. பாதாம், பிஸ்தா, வால்நட், முந்திரி, உலர் திராட்சை போன்ற டிரை ஃப்ரூட் கலவையை தான் டிரயல் மிக்ஸ் என்கின்றனர்.
இரவில் பசித்தால் இந்த டிரயல் மிக்ஸை சாப்பிடலாம்
அதிகம் சாப்பிட இயலாது, சாப்பிடவும் வேண்டாம். ஆனால் இந்த பூசணி விதையானது பல நற்குணங்களை அடக்கியது. இவற்றை இரவு உறங்குவதற்கு முன் சிறிதளவு சாப்பிட்டால், இதிலுள்ள ட்ரிப்டோபன் மற்றும் அமினோ அமிலங்கள் நல்ல உறக்கத்தை தூண்டும்
இதில் இயற்கையாகவே மெக்னீசியம் அதிகம். இது நம் நரம்புகளை அமைதியடைச் செய்யும். மேலும் மெலடோனின் சுரக்க செய்து உறக்கத்தை தூண்டும்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust