இதன் நிறம், கரும்பழுப்பு நிறமுடைய உறுப்புகளாக இருக்கும்.இடது சிறுநீரகத்தைவிட வலது சிறுநீரகம் சற்று உயரத்தில் அமைந்திருக்கும். சிறுநீரகங்களைப் பொதுவாகக் கழிவு நீக்க உறுப்புகள் என்றே சொல்வார்கள். சிதை மாற்றத்தில் உருவாகும் யூரியா, யூரிக் அமிலம், கிரியேட்டினின் ஆகிய கழிவுப் பொருட்களைச் சிறுநீரகங்கள் ரத்தத்தில் இருந்து பிரித்து எடுத்து வெளியேற்றுகின்றன.மேலும், உடலில் நீர்ச்சத்து விகிதத்தையும் சிறுநீரகங்கள் பராமரிக்கின்றன. உடலில் மிக முக்கியமான கழிவு நீக்க உறுப்புகளில் சிறுநீரகங்களும் ஒன்று.
kidney stone
பொதுவாகச் சிறுநீரகங்கள் தொடர்பாக மூன்று வகை பிரச்சனைகளே பெரும்பாலும் வருகின்றன. அவை சிறுநீரகக் கற்கள், யூரினரி டிராக்ட் தொற்று, சிறுநீகச் செயலிழப்பு.
கற்கள் இருப்பதற்கான அறிகுறிகள்
கடுமையான வயிற்று வலி வரும்
வயிற்று வலி முதுகுப்பக்கமாக இருந்து, அங்குத் தொடங்கி அப்படியே முன் பக்கமாக அடிவயிறுவரை இருக்கும்
ஒருவேளை சிறுநீரகக் கற்களானது சிறுநீர்க்குழாயில் இருந்தால், அந்தக் கற்கள் முன்னும் பின்னும் அசைவதால் பிரசவ வலிப்போல இருக்கும். துடித்துப்போவார்கள் வலியால்… விட்டு விட்டு வலி வரும்.
சிறுநீர்ப்பாதையில் கிருமித்தாக்கம் இருந்தால், சிலருக்கு சிறுநீர் கழிக்கும்போது எரிச்சலும் வலியும் ஏற்படும். சிலருக்கு, சிறுநீர்ப்பாதை கடுக்கின்ற மாதிரியான உணர்வும் தெரியும்.
சிலருக்கு வயிற்று வலியோடு வாந்தி வருவதும் மயக்கம் வருவதும் போன்ற தொந்தரவுகளும் இருக்கும்.
மேற்சொன்ன எல்லா அறிகுறிகளும் சிலருக்கு ஒருசேரவும், ஒரு சிலருக்கு ஏதாவது ஓரிரு அறிகுறிகளோ தொந்தரவுகளோ இருக்கலாம்.
Water Drinking
தண்ணீர் தாகம் எடுக்கும்போது, போதுமான அளவில் தண்ணீர் குடிக்காமல் இருப்பது. கடுமையான உடல் உழைப்பினாலும் வெப்பம் மிகுதியான இடங்களில் இருப்பது. அதிகமான வியர்வை சுரப்பவர்களுக்குத் தாகம் அடிக்கடி எடுத்தால், தாகத்தைப் புறக்கணித்துவிட்டுத் தண்ணீர் குடிக்காமல் இருப்பது.
சிலர் தேவைக்கும் அதிகமாகத் தண்ணீர் குடிப்பதாலும் சிறுநீரோடு தாது உப்புக்கள் இழப்பு ஏற்பட்டு நரம்பு மண்டலம், ரத்த மண்டலம் மற்றும் தசை மண்டலத்தில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.
விளையாட்டு வீரர்கள், கடுமையான உடலுழைப்புச் செய்பவர்கள், வண்டி நீண்ட நேரம் ஓட்டுபவர்கள், ஜிம் செல்பவர்களுக்குத் தாகம் அதிகமாக ஏற்படலாம். அதற்கு ஏற்றது போலத் தாகத்தைத் தணிக்கத் தேவையான அளவை தண்ணீரை அருந்த வேண்டும். இதைப் பின்பற்ற சிலர் தவறுவதால் சிறுநீரகக் கற்கள் உருவாகின்றன.
ஒருவருக்கும் இன்னொருவருக்கும் தண்ணீரின் தேவை மாறுபடும். அவரவரின் வாழ்வியல் சூழலை பொறுத்து தாகமும் மாறுபடும். தாகத்தைக் கவனித்தாலே போதுமானது. தன் உடலின் நீர்த்தேவையைப் பூர்த்திச் செய்யலாம். அதை விட்டுவிட்டு 2 லிட்டர் குடிப்பது 4 லிட்டர் குடிப்பது போன்ற முயற்சிகள் சிறுநீரகங்களைப் பாதிக்கவே செய்யும்.
சென்னையில், மருத்துவர் சொல்லும் “2 லிட்டர் தண்ணீர் குடியுங்கள்’ என்ற அறிவுரை… ஊட்டி, கோயம்பத்தூர் பகுதி மக்களுக்குச் சரியானதாக இருக்காது. எனவே, அவரவர் உடல் கூறும் தேவையைப் பொறுத்து தண்ணீரை அருந்தினால் எந்தத் தீங்கும் நேராது.
சிறுநீரகக் கற்கள்
சிறுநீர் அதிக அடர்த்தி அடைவதாலும் சிறுநீரை அதிக நேரம் அடக்கி வைப்பதாலும் சிறுநீரகக் கற்கள் உருவாகின்றன. கால்சியம் மாத்திரைகளை சாப்பிடுவதாலும் கற்கள் உருவாகின்றன. பால் மற்றும் பால் பொருட்களை உண்பதாலும் கற்கள் உருவாகின்றன.
சிறுநீரகக் கற்கள் பொதுவாக உப்புக்கற்களாகவே இருக்கும். பெரும்பாலும் கார்பனேட் கற்கள், ஆக்ஸ்லேட் கற்கள் மற்றும் பாஸ்பேட் கற்கள் உருவாகின்றன.
மூலிகை வைத்தியம்
சிறுகண்பீளை அல்லது கண்ணுபூலாச்செடி சமூலம், சீரகம். இவை இரண்டையும் எடுத்து 3:1 என்ற விகித அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். மூலிகை 3 பங்கு அதன் ஒரு பங்கு சீரகம் என்பதே அளவு. இதை ஒன்றாக அரைக்கவும். ஒரு எலுமிச்சம் பழ அளவுக்கு அரைத்ததை, தினமும் காலையில் சாப்பிட வேண்டும். சிறுகண்பீளை உலர்ந்ததாகக் கிடைத்தால், கசாயம் செய்து மூன்று வேளை குடிக்கலாம்.
இரண்டு இளநீர் தினமும் குடிக்க வேண்டும். இதை ஒரு வேளை உணவாக எடுத்துக்கொள்ளலாம். கற்கள் இருப்பவர்கள் மட்டும், வழுக்கையைச் சாப்பிட வேண்டாம்.
அசைவ உணவுகள், பால் மற்றும் பால் பொருட்கள், உணவில் உப்பைக் குறைத்துக் கொள்ளவேண்டும். உப்புக்கள் கலந்த எண்ணெய் உணவுகள், பாக்கெட், பதப்படுத்தி உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust