குடித்த பிறகு எவ்வளவு நேரம் வரை உடலில் ஆல்கஹால் இருக்கும்? NewsSense
ஹெல்த்

குடித்த பிறகு எவ்வளவு நேரம் வரை உடலில் ஆல்கஹால் இருக்கும்?

மது அருந்தும் போது ஆல்கஹால் நம் உடலில் எங்கெங்கு பயணித்து என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்துகிறது? எந்தெந்த உறுப்புகளில் எவ்வளவு நேரம் தங்குகிறது ஆகியவற்றைக் காணலாம்.

மினு ப்ரீத்தி

ஆல்கஹால் குடித்ததும் அவை உடலுக்குள் சென்று எவ்வளவு நேரம் வரை இருக்கும் என்பது பலரது கேள்வி. இதற்கான பதில் சரியாக, குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. அவரவரின் உடல்நிலை, மெட்டபாலிஸம் இயக்கம், வயது, எடை ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும். உணவுப் பழக்கம், வாழ்வியல் பழக்கம் சீராகக் கடைப்பிடிப்பவருக்கும் கடைப்பிடிக்காதவருக்கும் மாறுபாடுகள் ஏற்படத்தான் செய்யும்.

உடலுறுப்புகளில் எவ்வளவு காலம் வரை ஆல்கஹால் இருக்கும்?

மது குடித்ததும், ஆல்கஹால் வயிறு வழியாக ரத்த ஓட்டத்தில் சேரும். ஒரு நபர் குடிக்கும் மதுவில் 20 சதவிகிதம் வயிற்றின் வழியாக ரத்த ஓட்டத்தில் வேகமாக உறிஞ்சப்படுகிறது. மேலும் 80 சதவிகிதம் ஆல்கஹால் சிறுகுடலால் உறிஞ்சப்படுகிறது.

ஆல்கஹால் ரத்த ஓட்டத்தை அடைந்தவுடன், அது கல்லீரலுக்குச் சென்று வளர்சிதை மாற்றமடைகிறது. ஆல்கஹால் மூலக்கூறுகளை உடைக்கும் நொதிகளைக் கல்லீரல் உற்பத்தி செய்கிறது.

வளர்சிதை மாற்றமடையாத (மெட்டபாலிஸம் ஆகாத) ஆல்கஹால் உடலில் மீதம் இருக்கும். எஞ்சிய அனைத்தும் வியர்வை, சிறுநீர் மற்றும் உமிழ்நீர் மூலம் உடலை விட்டு வெளியேறுகிறது.

ஆல்கஹாலின் விளைவுகள் ரத்தம், உடல் திசுக்களிலிருந்து வருகின்றன.

ஒருவர் மிக விரைவாக மது அருந்தும்போது, கல்லீரலால் அனைத்து ஆல்கஹாலையும் ஒரே விகிதத்தில் செயல்படுத்த முடியாது. வளர்சிதை மாற்றமடைய வைக்க முடியாமல் போகும். அதனால் அது உடலில் இருக்கும். உடலிலேயே தங்கும்.

வயது குறைவானவர்களைவிட வயதானவர்கள் மது குடித்தால், ‘ஆல்கஹால்’ கல்லீரலில் நீண்ட காலம் வரை இருக்கும். ரத்த ஓட்டம் மெதுவாக இருக்கலாம். மேலும் வயதானவரின் கல்லீரலை வெகு சீக்கிரம் பாதிக்கும்.

ஆல்கஹால் ரத்தம், சிறுநீர், சுவாசத்தில்கூடக் கண்டறியப்படலாம். உங்கள் மூச்சு, சிறுநீர் மற்றும் உமிழ்நீரில் சுமார் 12-24 மணிநேரம் வரை ஆல்கஹால் இருக்கலாம்.

சிறுநீர்

தற்போதைய சிறுநீர் பரிசோதனையில், ஒரு நபர் கடைசியாகக் குடித்த பிறகு, 80 மணிநேரம் அல்லது 3 முதல் 4 நாட்கள் வரை மது அருந்தியதைக் கண்டறியும் ஒரு சோதனை உள்ளது.

எச்சில் / உமிழ்நீர்

கடைசியாகக் குடித்த 10-24 மணி நேரத்திற்குப் பிறகு எச்சிலில் ஆல்கஹால் அளவு கண்டறியப்படலாம்.

ரத்தம்

மது அருந்திய பிறகு ரத்தத்தில் 6 மணி நேரம் வரை மதுவைக் கண்டறிய முடியும்.

முடி

ஆல்கஹால் உட்படப் பல்வேறு பொருட்களின் பயன்பாட்டைக் கண்டறிய முடி சோதனை பயன்படுத்தப்படலாம். மதுபானத்தை உட்கொண்ட பிறகு சுமார் 90 நாட்களுக்கு முடியில் ஆல்கஹால் கண்டறியப்படலாம். அதாவது, தலை முடியில் 90 நாட்கள் வரை ஆல்கஹால் கலந்து இருக்கும். கடைசியாகக் குடித்த பிறகு 3 மாதங்கள் வரை முடி இழைகளில் ஆல்கஹால் கண்டறியப்படலாம்.

தாய்ப்பால்

ஆல்கஹால் ரத்தத்தில் இருக்கும் வரை தாய்ப்பாலிலும் இருக்கும். ஆல்கஹால் ரத்தத்தை விட்டு வெளியேற்ற, சில தாய்மார்கள் தாய்ப்பாலை தாய்ப்பால் பம்ப் மூலம் வெளியேற்றுவார்கள். இப்படி வெளியேற்றினாலும், ஆல்கஹால் தாய்ப்பால் மூலமாக வெளியேறாது. அது ரத்தத்தில் எப்படிக் கலந்துள்ளதோ அதுபோலத் தாய்ப்பாலிலும் கலந்து இருக்கும். தாய்ப்பாலை பம்ப் செய்வதால் பாலிலிருந்து மதுபானம் விரைவில் வெளியேறாது.

பரிசோதனைகள் - காலம்

ரத்தம் - 6 மணி நேரம்

சிறுநீர் - 12 - 24 மணி நேரம், 72 மணி நேரம் புதிய பரிசோதனை

சுவாசம் - 12 - 24 மணி நேரம்

உமிழ்நீர் - 12 - 24 மணி நேரம்

தலை முடி - 90 நாட்கள்

ஒவ்வொரு பானத்திலும் எவ்வளவு ஆல்கஹால் உள்ளது?

ஒவ்வொரு பானத்திலும் உள்ள ஆல்கஹால் சதவீதம் பற்றி இதோ ஒரு பட்டியல். நீங்கள் எத்தனை யூனிட்களை உட்கொண்டீர்கள் என்பதைக் கண்காணிக்க உதவும்.

ஓட்கா: 40-95% ஆல்கஹால் உள்ளது

ஜின்: 36-50% ஆல்கஹால்

ரம்: 36-50% ஆல்கஹால்

விஸ்கி: 36-50% ஆல்கஹால்

டெக்யுலா: 50-51% ஆல்கஹால்

மதுபானங்கள்: 15% ஆல்கஹால்

ஃபார்டிஃபைட்டு ஒயின் : 16-24% ஆல்கஹால்

அன்ஃபார்டிஃபைட்டு ஒயின் : 14-16% ஆல்கஹால்

பீர்: 4-8% ஆல்கஹால்

மால்ட் பிவரேஜ்/ பானம் : 15% ஆல்கஹால்

எவ்வளவு ‘ஆல்கஹால்’ உடலில் கலந்தால் மரணம் நிகழும்?

ரத்தத்தில் ஆல்கஹால் எந்த அளவுக்குக் கலந்து இருக்கிறது என்பதற்கான செறிவு பட்டியல் பற்றிப் பார்க்கலாம். (BAC) அளவுகோல் உங்கள் ரத்த ஓட்டத்தில் எவ்வளவு ‘சுத்தமான ஆல்கஹால்’ கலந்து உள்ளது என்பதைக் காட்டுகிறது. உதாரணமாக, உங்களிடம் .10 BAC இருந்தால், உங்கள் ரத்த ஓட்டத்தில் .1% ஆல்கஹால் உள்ளது என்று அர்த்தம்.

0.04 இல், பெரும்பாலான மக்கள் நிம்மதியாக உணர ஆரம்பிக்கிறார்கள்.

0.08 என்பது பெரும்பாலான மாநிலங்களில் சட்டப்பூர்வமான போதை நிலை. இருப்பினும், 0.02 க்கு குறைவான BAC களால் வாகனம் ஓட்டுவது பாதிக்கப்படலாம்.

0.12 அளவுக்கு உடலில் ஆல்கஹால் கலந்து விட்டால், பெரும்பாலான மக்கள் வாந்தி எடுக்க வேண்டும் என்று உணர்கிறார்கள்.

0.30 அளவுக்கு உடலில் ஆல்கஹால் கலந்து விட்டால், பலர் சுயநினைவை இழக்கிறார்கள்.

0.40 அளவுக்கு உடலில் ஆல்கஹால் கலந்து விட்டால், பெரும்பாலான மக்கள் சுயநினைவை இழக்கிறார்கள். 80 - 90 % மக்கள் சுயநினைவை இழக்க வாய்ப்புகள் அதிகம்.

பிஏசி 0.45 என்பது பொதுவாக மரணத்திற்குரிய அளவு இது.

உடலுக்குள் ஆல்கஹால் சென்று ரத்தம் முதல் உமிழ்நீர், தாய்ப்பால், முடி வரை கலக்க ஆரம்பிக்கும். பல்வேறு உடல் பாதிப்புகளை உண்டாக்கும். சிலருக்கு மரணமும் நிகழலாம். எனவே, ஆல்கஹால் குடிப்பதைத் தவிருங்கள்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?