அலுவலகத்தில், வீட்டில், பொது இடங்களில் பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தக் கூடியது வாயுப் பிரச்சனை. நமக்கு மட்டுமல்ல சுற்றியிருப்பவர்களுக்கும் அசௌகரியத்தை ஏற்படுத்தும் என்பதால் வாயுத்தொல்லை குறித்து விழிப்புடன் இருந்து அதனை கலைய வேண்டியது அவசியம்.
வாயுத் தொல்லை எதனால் ஏற்படுகிறது? தடுப்பது எப்படி? என இப்போது தெரிந்துகொள்ளலாம்.
செரிமானத்தில் ஏற்படும் பிரச்னைகளே வாயுத் தொல்லைக்கு அடிப்படையானக் காரணமாகக் காணப்படுகிறது.
சரியாகச் செரிமானம் நடக்காமல் குடல் பகுதியில் கழிவுகள் தங்கினால் அங்கிருக்கும் பாக்டீரியாக்கள் நொதித்தலில் ஈடுபட்டு வாயு உருவாகிறது.
உணவுப் பொருட்களை முழுமையாக உட்கிரகிக்க முடியாதபோதும் வாயு ஏற்படலாம்.
கழிவுகளை உடனடியாக வெளியேற்றாத போதும் வாயு ஏற்படுகிறது.
சிறுகுடலில் பாக்டீரியாக்கள் அதிகரிக்கும் போது வாயுப் பிரச்னை ஏற்படும்.
அதிக பாக்டீரியாக்கள் அழியும் போது ஏற்படலாம்.
பீன்ஸ், முளைக்கட்டிய தானியங்கள், முட்டைகோஸ் போன்றவற்றில் இருக்கும் ராஃபினோஸ் (Raffinose), உருளைக் கிழங்கில் உள்ள ஸ்டார்ச் காரணமாக வாயுப் பெருக்கம் ஏற்படலாம். பருப்பு வகைகள், வாழைக்காய் போன்றவையும் வாயு உண்டாக்கும் வஸ்துக்களே.
வாயு நிரப்பப்பட்ட குளிர்பானங்கள், குடலில் வாயுவை அதிகளவில் சேர்ப்பதோடு வயிற்றுப் புண்களையும் உண்டாக்கும்.
பாலில் உள்ள 'லாக்டோஸ்' (Lactose) சிலருக்கு வாயுப் பிரச்னையை உருவாக்கலாம். பழங்களில் உள்ள ‘ஃப்ரக்டோஸ்’ (Fructose) மற்றும் செயற்கை சுவையூட்டிகளில் உள்ள ‘சார்பிடால்’ (Sorbitol) போன்றவற்றைச் செரிக்க முடியாத போதும் வாயுப் பெருக்கம் உண்டாகும்.
எண்ணெய்யில் பொறித்த இறைச்சி, கொழுப்பு நிறைந்த உணவுகள், செரிமானத்தைத் தாமதமாக்கி, வாயுப் பெருக்கத்திற்கு வழிவகுக்கும்.
புதினா துவையல்
அண்ணாச்சி
மோர்
வேகவைத்த பூண்டு
இஞ்சித் தேன், இஞ்சி ரசாயனம், சோம்புத் தீநீர், ஓமத் தீநீர், பஞ்ச தீபாக்கினி சூரணம் (சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம், சீரகம் சேர்ந்தது), ஏலாதி சூரணம். சீரகச் சூரணம் போன்ற மருந்துகள்
சரியாக மலம் கழிப்பது, நார்ச் சத்து மிகுந்த உணவுகளை உண்ணுவது, அதிக தண்ணீர் குடிப்பதுவும் வாயுப் பிரச்னையிலிருந்து மீள உதவும்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp