மூலிகை குளியல் NewsSense
ஹெல்த்

சாதாரண குளியலை எப்படி மூலிகை குளியலாக மாற்றித் தோலை ஆரோக்கியமாக்குவது?

மினு ப்ரீத்தி

சோப் கவரில் பாருங்கள் என்னென்னமோ கெமிக்கல் பெயர்கள் இருக்கும். இறுதியில் சின்னதாக டாய்லெட் சோப் என எழுதி இருக்கும். நிறைய சோப்கள் மனித சருமத்துக்கு ஏற்றதல்ல. இயற்கை, நேச்சுரல், ஆர்கானிக் என என்னென்னமோ கலர் கலரான சோப்புகள் விற்கின்றன. ஆனால், அதிலும் கெமிக்கல்கள்தான் உள்ளன.

சோப் என்றாலே அது கெமிக்கல்தான். அது ஆர்கானிக்கோ, கெமிக்கலோ, நேச்சுரலோ, ஹெல்பலோ நுரைவரும் தன்மைக் கொண்ட எல்லாவற்றிலும் கெமிக்கல் தான் கலக்கப்படுகிறது.

தேங்காய் எண்ணெய் சோப், ஹாண்ட் மேட் சோப், ஹோம் மேட் சோப் என விற்பார்கள் அதுவும் பயன்படுத்துவதற்கு உகந்தது அல்ல. நமக்கு ஃப்ரெஷ்ஷான இயற்கையான விஷயங்கள் நம்மை சுற்றி கொட்டிகிடக்கும்போது நாம் ஏன் கெமிக்கல்களைத் தேடி செல்ல வேண்டும்?

herbal - health

சோப்புக்கு பதிலாக… என்னென்ன பயன்படுத்தலாம்?

அரைத்த தேங்காய் விழுதையோ, மிச்சம் இருக்கும் தேங்காய் பாலையோ தேய்த்து குளிப்பதால் சருமத்துக்குக் குளுமை உண்டாகும். மகாராஷ்ட்ரா மாநிலத்தைச் சேர்ந்த மகர் இன மக்களின் கலாச்சாரத்தில், தேங்காய்ப்பால் குளியல் முக்கியமான இடம் பெறுகிறது. தேங்காய்ப்பால் குடிப்பது ஆரோக்கியம். மிச்சம் இருந்தால் அதைக் குளிக்கப் பயன்படுத்தி ஆரோக்கியம் என்கிறார்கள். தேங்காய்ப்பாலை விட உலகில் வேறு எந்த கிரீம் கெமிக்கல்களும் உங்கள் சருமத்துக்கு நன்மை செய்திடாது.

செம்பருத்தி இலைகள், பூக்களை அரைத்துக்கொண்டு, உடல் முழுதும் தேய்த்துக்குளித்தால் கண்களுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கும். தலைமுடி ஆரோக்கியமாகும்;

மாதுளை, ஆரஞ்சு, சாத்துக்குடி, பப்பாளி, மாம்பழம், எலுமிச்சை போன்ற பழங்களின் தோலை நாம் குளிக்கும் நீரில் இரவிலேயே ஊறப்போட்டு விட்டுக் காலையில் அதனை உடலில் தேய்த்துக் குளிக்கலாம். அல்லது மிக்ஸியில் இட்டு அரைத்து கூழாக்கி குளிக்கலாம்.

herbal health
  • செவ்வாழை, நேந்திரம் போன்ற பழங்களின் தோலை மட்டுமே ஊறவைத்து குளிக்கலாம். அரைக்கத் தேவையில்லை. அரப்பு பொடி கடைகளில் கிடைக்கும். அதை வாங்கித் தேய்த்துக் குளிக்கலாம். கடலைமாவு, பாசிப்பயறு மாவும் போட்டுக் குளிக்கலாம்.

  • மீதுபோன பருப்போ பயறோ இருந்தால் அதனுடன் ஊறவைத்த பாதாம் பிசின் சேர்த்துக் குளிக்கச் சருமம் மென்மையாகும்.

  • வேப்பம் பிசின், முருங்கை பிசினை ஊறவைத்து பிசைந்து அல்லது மிக்ஸியில் அரைத்துக் குளிக்கலாம். பெஸ்ட் ரிசல்ட்ஸ் நீங்கள் பார்ப்பது கண்கூடு.

  • வேப்பம் பிசினால் குளித்தால் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும், சரும வறட்சி உள்ளவர்களுக்கும் நல்ல பலனைக் கொடுக்கும்.

  • முருங்கை பிசின் நரம்பு மண்டலப் பிரச்சனை உள்ளவர்களுக்குக் கூடுதல் பலனைத் தரும். முருங்கை மரம் அதிகமாகவே பிசின் கொடுக்கும். சுமார் 50 கிராம் எடுத்து ஒரு கப்பில் ஊறப்போட்டால் அதனை ஒரு வாரத்துக்கு மேல் பயன்படுத்தலாம்.

herbal bath
  • துளசி, புதினா, வேப்பிலை இலைகளை நீரில் ஊற வைத்துக் குளிக்கும்போது அந்த நீர் அதிகக் குளிர்ச்சியைத் தரும்.

  • வீட்டில் செடிகளில் பூக்கும் ரோஜாப்பூ, செம்பருத்தி, சாமந்தி, மல்லி, முல்லை போன்ற பூக்கள் வாடி கீழே உதிர்வதை, சேகரித்துப் பொடியாக்கி குளிக்கும் போது பயன்படுத்தலாம். வீட்டு சமையலுக்குப் போக, மீறும் புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலையை அரைத்துக் குளியலுக்குப் பயன்படுத்தலாம்.

  • வெள்ளரிக்காயை அரைத்து உடலில் தேய்த்து பூசி குளிக்க உடலுக்கு அப்படி ஒரு குளிர்ச்சி கிடைக்கும். அழுகிய பழங்களை, அழுகிய இடத்தில் நீக்கிவிட்டு மீதம் உள்ளதை தூக்கி எறியாமல் அதனைக் கூழாக்கி உடலில் தேய்த்துக் குளிக்கலாம்.

  • புளித்துப் போன இட்லி மாவை கீழே கொட்டாமல், அதை குளிக்கும் போது ஸ்கரப்பர் போன்று பயன்படுத்தலாம். உடலில் ஸ்கரப்பராக தேய்ந்து இறந்த செல்களை நீக்கும். குளித்த பின் சருமத்தைத் தொட்டுப் பாருங்கள். அவ்வளவு மென்மையாக இருக்கும்.

  • மழை நீரில் நனைவது, மழை குளியல். இதன் நன்மைகள் ஏராளம். வள்ளுவர் சொன்னார், ‘மமையை அமிழ்தம்’ என்று… மழை போன்ற நன்னீர் உலகில் உண்டா? தீராத துக்கத்தைகூடப் போக்க மழைநீர் உதவும். அந்தளவு மழைநீரில் பிரபஞ்ச ஆற்றல் உள்ளது.

    முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?