இந்தியாவின் சாலையோர கடைகளில் கிடைக்கும் உணவுகளுக்கு தனிச்சிறப்பு உள்ளது. நம் நாட்டைப் போலவே மிகவும் கலர்ஃபுல்லான உணவு வகைகளை எல்லா இடங்களிலும் பார்க்கலாம்.
வேறுபட்ட நிலப்பரப்புகளுக்கு ஏற்ற பல வகை உணவுகளை நாம் இந்தியாவில் காணமுடியும். இதனால் இந்தியர்களுக்கு டயட் மெயிண்டயின் செய்வது மிகவும் சவாலான காரியமாக இருக்கிறது.
இந்தியாவில் சிறப்பான சாலையோர உணவுகள் கிடைக்கும் 5 நகரங்கள் பற்றி பார்க்கலாம்.
பஞ்சாப் மாநிலத்தில் பல முக்கிய சுற்றுலாத்தளங்களைக் கொண்டுள்ள அம்ரித்சர் சமையல் கலைக்கும் சிறப்பு பெற்ற நகரமாக இருக்கிறது.
தண்ணீர் போல நெய்யை செலவு செய்து சமைக்கும் பஞ்சாப் உணவுகளை நினைக்கும் போதே வாயில் நீர் சுரக்கும்.
மிருதுவான சிக்கன் டிக்கா, பருத்த ஷம்மி கெபாப் முதல் அம்ரித்சாரி மீன் வரை அசைவ உணவுகளை வெளுத்து வாங்கலாம்.
சைவ உணவுகளும் அம்ரித்சரில் அடிபொளி தான்!
இந்தியாவின் சமையல் தலைநகரம் என்றால் நாம் கொல்கத்தாவைத் தான் குறிப்பிட வேண்டும். தெருவோர உணவுகளில் பானி பூரி தான் கொல்கத்தாவின் ஸ்பெஷல்.
அவர்களது கலாச்சாரத்துடன் கலந்த உணவு பானிபூரி.
உருளைக் கிழங்கு, தக்காளி, சுண்டல் பயிறு வகைகள் கொண்டு தயாரிக்கப்படும் ஆலி காப்லி, சுர்முர் எல்லாம் தேடித் தேடி சாப்பிட வேண்டிய உணவுகள்.
பரபரப்பான தெருக்களில் உலாவி ஆவி பறக்கும் உணவுகளை உண்ணுவது யாருக்குத் தான் பிடிக்காது!
இந்தூரின் தெரு உணவுகள் மத்திய பிரதேசம் மட்டுமல்லாமல் மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத் போன்ற பக்கத்து மாநிலங்களில் சுவையையும் தன்னகத்தே வைத்திருக்கும்.
இரவு நேரங்களில் சரஃபா பஜார் போன்ற பரபரப்பான தெருக்களுக்குள் நுழைந்தால் நம் வயிற்றை முழுவதுமாக நிரப்பிக்கொண்டு வரலாம்.
டாங்கி கட்டா சமோசாஸ், கோப்ரா பட்டீஸ் முதல் தயிர் படாஸ் வரை இந்தூரின் சிறப்பு உணவுகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.
நன்றாக வருத்த மல்புவாஸ், பெரிய ஜிலேபி என நிச்சயம் சாப்பிட வேண்டிய ஐட்டங்கள் இந்தூர் முழுவதும் இருப்பதைப் பார்க்கலாம்.
தலை நகராக இருப்பதனால் சில சிறப்பான சாலையோர உணவுகளை வழங்குகிறது டெல்லி. சாட், சோலே பட்டூரே மற்றும் புகழ்பெற்ற பட்டர் சிக்கன் என டெல்லியின் சுவையான உணவுகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.
நிஹாரி, தவுலத் கி சாட், மோத் கச்சோரி மற்றும் புத்துணர்ச்சியூட்டும் கேசர் லஸ்ஸி என நிச்சயமாக ஒருமுறையாவது சுவைத்துப்பார்க்க வேண்டிய உணவுகள் ஏராளம் இருக்கின்றன.
டெல்லியின் மூலை முடுக்குகளில் கிடைக்கும் உணவுகள் உங்கள் சுவை உணரிகளை ஈர்த்துக்கொண்டே இருக்கும்.
சென்னையின் சாலையோர உணவுகளையும் அவற்றின் சிறப்புகளையும் குறித்து சொல்லித்தெரியவேண்டியதில்லை.
உணவுப் பிரியர்கள் எல்லாரும் வாழ்வதற்கு ஒரு நகரம் வேண்டுமென்றால் அதற்கு சென்னை தான் சரியான தேர்வு.
சீன உணவுகள், ஐரோப்பிய உணவுகள், பர்மா உணவுகள் எல்லாவற்றையும் சென்னையில் சுவைக்கலாம்.
முருக்கு முதல் மொயிங்கா வரை சென்னையில் கிடைக்காத ஸ்ட்ரீட் ஃபுட்டே இல்லை எனலாம்.
தமிழ் நாட்டில் சென்னையைத் தவிர மதுரையும் சாலையோர உணவுகளுக்கு பெயர் பெற்ற ஊர் என்பதை நாம் அறிவோம்!
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust