Morning Or Night? What Is The Right Time To Drink Milk Twitter
ஹெல்த்

காலையா? இரவா? பால் குடிக்க சரியான நேரம் எது? ஆயுர்வேதம் செல்வதென்ன?

Priyadharshini R

பால் நமது உடலுக்கு சத்தான உணவாக கருதப்படுகிறது. இதில் புரத சத்து மட்டுமில்லாமல், வைட்டமின்கள் தாதுக்கள் என பல சத்துகள் இருக்கின்றன.

இது தவிர, பாலில் கால்சியம், ரிபோஃப்ளேவின், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, வைட்டமின் பி12, பொட்டாசியம், மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் அயோடின் போன்ற தனிமங்கள் நிரம்பியுள்ளன.

எலும்புகள், பற்கள் மற்றும் தசைகள் ஆரோக்கியமாக இருக்க ஒவ்வொரு நாளும் ஒரு கப் பால் குடிக்க வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

ஆஸ்திரேலிய ஆய்வின்படி, சரியான அளவு பால் உட்கொள்வது இதய நோய் மற்றும் கொலஸ்ட்ரால் அபாயத்தைக் குறைக்கும். தினமும் ஒரு கப் பால் குடிப்பது பெரியவர்களுக்கு காலரா புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும். ஆனால் பால் குடிக்க சரியான நேரத்தை அறிந்து கொள்வது மிகவும் முக்கியம்.

பால் குடிப்பதற்கான சிறந்த நேரம் குறித்து பல்வேறு கருத்துக்கள் உள்ளன. குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இருவருக்கும் இது வேறுபட்டது. உண்மையில், பலரால் பாலில் உள்ள லாக்டோஸை சகித்துக்கொள்ள முடியாது.

இதன் காரணமாக, வாயு, உப்புசம் போன்ற வயிற்றுப் பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கும்.

ஆயுர்வேதத்தின் படி, இரவில் தூங்கும் முன் பால் குடிப்பது உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும்.

இரவில் பால் குடிப்பதால் உடலில் உள்ள செரிமானத்தை சமநிலைப்படுத்தும் ஓஜஸ் செயல்படுத்துகிறது. இரவில் பால் குடிப்பது நல்ல தூக்கத்திற்கு உதவும். குழந்தைகள், காலையில் பால் குடிப்பது அவசியம்.

அறிக்கையின்படி, இரவில் பால் குடிப்பதால் நெஞ்செரிச்சல், செரிமானம் போன்ற எந்த பிரச்சனையும் ஏற்படாது. மேலும் அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சிறப்பாக உறிஞ்சப்படுகின்றன. இரவில் பால் குடிப்பதால் டிரிப்டோபான் என்ற அமினோ அமிலங்கள் அதிக அளவில் வெளியாகி நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?