ஒவ்வொரு இரவும் தூக்கத்தின் போது ஒவ்வொரு நபருக்கும் கனவுகள் வருவது இயல்பான ஒன்று. அந்த வகையில் வரும் கனவுகள் 15 முதல் 40 நிமிடங்கள் வரை நீடிக்கும் என கூறப்படுகிறது.
பொதுவாக கனவுகளில் வரும் காட்சிகளுக்கு அறிவியல் ரீதியிலான காரணங்களை தற்போது பார்க்கலாம்.
யாராவது உங்களை துரத்துவது போன்று கனவு வந்தால் வாழ்க்கையில் உங்களுக்கு பயம் அல்லது கவலையை ஏற்படுத்தும் ஏதோவொன்றிலிருந்து நீங்கள் ஓடிவிடுகிறீர்கள் என்று அர்த்தம். பிரச்சினைகளைச் சமாளிப்பதற்குப் பதிலாக, அதிலிருந்து ஓடிப்போகும் போக்கு உங்களிடம் இருப்பதாக இது குறிக்கிறது.
நீங்கள் கழிப்பறையைக் கண்டுபிடிக்க முடியாத ஒரு கனவைக் கண்டால், இது உங்கள் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் உங்கள் தேவைகளை வெளிப்படுத்த நீங்கள் சிரமப்படுவதை குறிப்பதாக கூறப்படுகிறது.
உங்களுடைய கனவானது பரிட்சைக்குத் தயாராக இல்லை என்பன போன்ற கனவுகள் வந்தால் நீங்கள் அதிக மன அழுத்ததுடன் உள்ளதாக கூறப்படுகிறது.
இன்றைய இளைஞர்களில் குறைந்தது 5 பேரில் 1 நபராவது தங்கள் வாழ்க்கையில் தேர்வுக் கனவை காண்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
சில சமயம் உங்கள் கனவுகளில் நீங்கள் மிகவும் கடினபட்டு பறப்பது போல் கனவு வந்தால் உங்கள் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்குச் செல்வது தடைபடுவதை குறிப்பதாக கூறப்படுகிறது.
அந்த கனவில் உங்களால் பறக்க முடியாவிட்டால், உங்களுக்காக நீங்கள் நிர்ணயித்த உயர்ந்த இலக்குகளை அடைய நீங்கள் சிரமப்படுவீர்கள் என்றும் கூறப்படுகிறது.
உங்களுக்கு அடிக்கடி நீங்கள் ஏதோ ஒரு பகுதியிலிருந்து விழுவது போன்று கனவு வந்தால் அது நீங்கள் செய்யும் வேலையின் பாதுகாப்பின்மையினை குறிக்கும். மேலும் நீங்கள் செய்ய தவறிய நிகழ்வினை ஞாபகப்படுத்தும் நினைவுகளாக கூட இருக்கலாம் என கூறப்படுகிறது.
உங்கள் கனவில் நீங்கள் பயணிக்கும் வண்டி கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாக கனவு கண்டால் உங்கள் வாழ்க்கை பாதை சரியாக செல்லவில்லை என்பதை குறிக்கின்றது . ஆகவே உங்கள் முடிவுகளை யோசித்து பொறுமையாக எடுங்கள்
இது நீண்டகாலமாக பொதுமக்களால் விவாதிக்கப்படும் ஒன்றாகும். இதற்கு நவீன மனோதத்துவ ஆய்வாளர் கருத்தின் படி மனதிற்குள் எழும் அடக்குமுறை , நாம் சந்திக்கும் ஒடுக்குமுறை இவற்றால் உங்கள் கனவு பகுதியில் உருவாகும் வேதியல் மாற்றத்தின் தொகுப்பு என கூறுகின்றனர். பல காலமாக நம்மை பயமுறுத்தி வருகிறது இந்த பாம்பு கனவு
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust