வேதிப் பொருட்கள் நிறைந்த காஸ்மெட்டிக்ஸ் பயன்படுத்துவதால், உடனடியாக இல்லாவிட்டாலும், நாளடைவில் அது நமது சருமத்தை பாதிக்கலாம்.
அதனால், கெமிக்கல்கள் அல்லாத, இயற்கையான நற்குணங்கள் கொண்ட இந்த பொருட்களை சருமத்திற்கு பயன்படுத்தினால், ஆரோக்கியமும் பாதுகாக்கப்படும், சரும பொலிவும் மேம்படும்.
நாம் பொதுவாக ஃபேசியல் போன்றவை செய்துகொள்ளும்போது முதலில் செய்வது க்ளென்சிங். இதற்கென்று பிரத்யேகமாக நாம் கடைகளில் எதுவும் வாங்க வேண்டாம். காய்ச்சாத பச்சையான பால் சிறந்த க்ளென்சர்.
சிறிதளவு பச்சை பாலை எடுத்து முகத்தில் தேய்த்துக்கொண்டு கொஞ்சம் மசாஜ் செய்துகொள்ளுங்கள். பின்னர் தண்ணீரில் முகத்தைக் கழுவிக்கொள்ளுங்கள். சருமம் மென்மையாகும்.
இப்போது மாய்ஸ்டரைசர் பயன்படுத்தும் வழக்கம் மக்களிடையே அதிகமாகிவிட்டது. இயற்கையான தேங்காய் எண்ணை சிறந்த மாய்ஸ்சரைசர். இது சருமத்தை மென்மையாக்குவது மட்டுமல்லாமல், வாசனையாகவும் இருக்கும். குளிர்காலத்தில் நிச்சயமாக பயன்படுத்துங்கள்.
கற்றாழையின் அம்சங்கள் நிறைந்த க்ரீம்கள் கடைகளில் நிறைய கிடைக்கும். இயற்கையாகவே கற்றாழை உட்கொள்ளவும், அதே சமயத்தில் நமது சருமத்திற்கும் நல்லது. கற்றாழை முடி வளருவதற்கும் சிறந்த தீர்வு
முகத்திற்கு, சருமத்திற்கு ஸ்கரப் பயன்படுத்துபவர்களாக இருந்தால், அதற்கு சிறந்த இயற்கை மாற்று சர்க்கரை. சர்க்கரை பயன்படுத்த நீங்கள் விரும்பாவிடில், காபி தூளை பயன்படுத்தலாம். இவை வாசனை மிகுந்ததாகவும் இருக்கும்.
தயிர் நமது தலைமுடிக்கு ஒரு சிறந்த கண்டிஷனர். மற்றும் சருமத்தை மென்மையாக வைத்திருக்கவும் உதவும். வெறும் தயிரை பயன்படுத்தலாம். அல்லது தயிருடன் சேர்த்து சிறிது கடலை மாவு, மஞ்சள், தேன் கலந்தும் முகத்தில் பேக் போல தேய்த்துக் கொள்ளலாம். இது உலர்ந்த பின்னர் முகத்தை கழுவினால், சருமம் பளபளக்கும்.
உதடுகள் வறண்டு போகாமல் இருக்க லிப்ஸ்டிக், லிப் பாம் போன்றவற்றை பயன்படுத்துவது வழக்கம். வேதிப் பொருட்கள் நிறைந்த லிப் ஸ்கர்ப்கள் பயன்படுத்துவதற்கு பதிலாக, பிரவுன் சுகர் பயன்படுத்தலாம்.
சீராக தண்ணீர் குடிப்பது இதற்கு முக்கிய தீர்வு.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust