Thyroid

 

Facebook

ஹெல்த்

மருந்தில்லாமல் தைராய்டு தொந்தரவுகளைச் சரிசெய்ய எளிய வழிகள்

பெண்களுக்கு அதிகம் காணப்படுகின்ற பிரச்சனையில், தைராய்டும் ஒன்று. சர்க்கரை நோய் போல இதய நோய் போல, டைராய்டு தொந்தரவும் பரவலாகக் காணப்படுகிறது.

மினு ப்ரீத்தி

பெண்களுக்கு அதிகம் காணப்படுகின்ற பிரச்சனையில், தைராய்டும் ஒன்று. சர்க்கரை நோய் போல இதய நோய் போல, டைராய்டு தொந்தரவும் பரவலாகக் காணப்படுகிறது. வேகமாக, பலருக்கு இருக்கின்ற ஒரு வகையாக, ஹைபோ தைராய்டிசம் (Hypothyroidism) என்று சொல்லப்படுகிற தைராய்டு சுரப்பியின் தொந்தரவு… கழுத்தில் எந்த வீக்கமும் இல்லாமல் ரத்த பரிசோதனையில் மட்டும் TSH - Thyroid Stimulating Hormone கூடுவதால் இத்தொந்தரவு ‘ஹைபோ தைராய்டிசம்’ என்று அலோபதி மருத்துவத்தால் சொல்லப்படுகிறது.

உடல் பருமனாகுதல்

அறிகுறிகள்

இதன் அறிகுறிகள் என்னென்ன எனப் பார்க்கலாம்.

உடல் பருமனாகுதல்

ரத்த சோகையாகக் காணப்படுதல், வெளிரி போன நிறத்துடன் இருப்பது

உடல் சோர்வாக இருத்தல்

பெண்களுக்கு மாதவிலக்குச் சுழற்சியில் பாதிப்பு ஏற்படுதல்

எதிலும் எந்த விஷயத்திலும் ஆர்வம் இல்லாமல் இருத்தல்

முடி மெலிதல், கொட்டுதல்,அடர்த்திக் குறைந்து போதல்

ரத்தம் அழுத்தம் கூடுதலாகக் காண்பித்தல்

இந்த அறிகுறிகள் தென்பட்டால் ‘ஹைபோ தைராய்டிசம்’ தொந்தரவுகள் இருக்கலாம். ஆனால், மருந்துகளை வாழ்நாள் முழுக்க உட்கொண்டால் மேற்சொன்ன தொந்தரவுகள் மறக்கடிக்கச் செய்யும். தற்காலிகமாக மறைந்து போகும். இது அலோபதி மருந்துகளை உட்கொள்வதால் ஏற்படும். ஆனால், உண்மையில் உடலின் தொந்தரவுகள் குணமாக வேண்டுமா? அல்லது தற்காலிகமாக நீங்கி பெரிய தொந்தரவுகளாக வேறு வடிவில் திரும்ப வரவேண்டுமா என்ற முடிவை தாங்கள்தான் எடுக்க வேண்டும். எந்த ஒரு உடல் தொந்தரவுகளையும் ரசாயன மருந்துகளால் குணப்படுத்தவே முடியாது. பின்னர், எப்படி அறிகுறிகள் மறைகிறது? மருந்துகள் அதை உணரவிடாமல் மறக்கடிக்கச் செய்கிறது. அல்லது தற்காலிகமாக நீக்குகிறது. நிரந்தரத் தீர்வை நோக்கி பயணிப்பதே இதற்கான சரியான வழி.

மாவு வகைகள்

என்ன செய்ய வேண்டும் தொந்தரவுகள் தீர?

மாவு வகைகள்

ரீஃபைண்டு மாவு உணவுகளை அவசியம் தவிர்க்க வேண்டும். கடையில் வாங்கும் கோதுமை மாவு, மைதா மாவு, அரிசி மாவு போன்ற பல மாவு வகைகள். சப்பாத்தி செய்ய வேண்டுமெனில் கோதுமையை வாங்கி அரைத்துக்கொள்ளவும்.

மேற்கத்திய உணவுகள்

மேற்கத்திய உணவுகள்

பேக்கரி உணவுகள், ஹோட்டல் உணவுகளைக் கட்டாயம் தவிர்ப்பது அவசியம். காபி, டீயை பாலும் வெள்ளை சர்க்கரை போட்டுக் குடிக்கக் கூடாது. பதிலாக, பால் சேர்க்காத காபி, டீ குடிக்கலாம். இனிப்புக்கு தேன் சேர்க்கலாம். மேற்கத்தில் வழிமுறையில் காபி, டீ தயாரிக்காமல், நம் பழக்கமுறைகளில் தயாரிக்கப்படும் தேநீர்களை அருந்தலாம்.

நெத்திலி

உணவுகள்

புரதச் சத்துக்கள் தைராய்டு ஹார்மோன்களை திசுகளுக்கு எடுத்துச்செல்ல உதவுகிறது. எனவே, முட்டையின் வெள்ளைகருவை சாப்பிடலாம். அது நாட்டுக்கோழி முட்டையாக இருப்பதே நல்லது.

சிறிய மீன்களான நெத்திலி, நெய் சுதும்பு, காரப்பொடி போன்ற சிறிய மீன்களைச் சாப்பிடுவது நல்லது.

கொட்டைகள் எனச் சொல்லக்கூடிய நட்ஸ் வகைகளைச் சாப்பிடலாம். விதைகளையும் சாப்பிடலாம். ஆளிவிதை, சூரியகாந்தி விதை, வெள்ளரி விதை, பூசணி விதை, தர்பூசணி விதை, எள்ளு போன்றவை நல்லது.

நல்ல கொழுப்பு

நல்ல கொழுப்பு

கொழுப்பு என்றாலே பயம் என்ற அளவுக்குத் தவறான புரிதல் மக்களிடம் நிலவி வருகிறது. உண்மையில் ஹார்மோன்கள் உருவாவதற்கும் செயல்படுவதற்கும் கொழுப்பு மிகவும் அவசியம். கொழுப்பு உணவுகள் நல்லது. ஆனால், அது நல்ல கொழுப்பாக இருக்க வேண்டும். நட்ஸ், விதைகளில் நல்ல கொழுப்பு உள்ளது. தேங்காய் நல்ல கொழுப்புப் பட்டியலில் உள்ளது. நல்லெண்ணெய், நெய், அவகேடோ பழம், மீன், தேங்காய், தேங்காய்ப் பால், ஆலிவ் எண்ணெய் போன்றவை நல்ல கொழுப்புள்ள உணவுகள். இவற்றைத் தேவையான அளவுக்குச் சாப்பிடுவது நல்லது.

காளான்

இயற்கை உப்பு

தாது உப்புகள் குறைபாடும் ‘ஹைபோ தைராய்டிசம்’ உருவாக ஒரு காரணம். இதனுடன் விட்டமின் டி, இரும்புச்சத்து, துத்தநாகம், செம்பு, விட்டமின் ஏ, பி, அயோடின் உப்பு இதெல்லாம் தேவை. இதெல்லாம் பொதுவாகக் கடல்வாழ் உயிரினங்களில் காணப்படுகிறது. கடல் மீன்கள், நண்டு ஆகியவற்றைச் சாப்பிடலாம். அயோடின் உப்பு இயற்கையாகவே கிடைக்கக் கடல் உணவுகளைச் சாப்பிடுவது சிறந்த வழி. முட்டை, காளான், பூண்டு, பீன்ஸ் ஆகியவையும் நல்லது.

சத்துகள்

சத்துகள்

ஒமேகா 3 அமிலம் சத்து, தைராய்டு தொந்தரவுகளைத் தீர்க்க உதவும். வால்நட், மீன்கள் குறிப்பாக மத்தி மீன்களில் இச்சத்துகள் அதிகம் காணப்படும். இவற்றைத் தேவையான அளவு அடிக்கடி சாப்பிட்டு வருவது நல்லது.

ஆன்டி ஆக்ஸிடன்ட் சத்து, நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும். அடர்பச்சை நிற காய்கறிகளைச் சாப்பிடுவது, புரோக்கோலி, காலி ஃப்ளவர், அவகேடோ பழம், அனைத்து வகைப் பழங்கள் குறிப்பாகத் திராட்சை போன்றவற்றைச் சாப்பிட வேண்டும்.

புரோக்கோலி, காலிஃப்ளவர், முட்டைக்கோஸ் ஆகியவற்றை ஒருவாரத்துக்கு ஒரு வகை எனச் சாப்பிட்டாலே போதுமானது. அதிகளவில் சாப்பிடாமல் தவிர்க்கலாம். மாதம் ஒரிருமுறை எனச் சாப்பிடலாம்.

கைக்குத்தல் அரிசியைத் தினசரி உணவாகச் சாப்பிட வேண்டும். வெள்ளை அரிசியை முழுவதுமாக விட்டுவிடவும். முளைக்கட்டிய தானியங்களை சாலட்டாகவும் சாப்பிடலாம்.

ரசாயனம் உரம் சேர்க்காத இயற்கையில் விளைந்த காய்கறிகள், பழங்கள், கீரைகள், தானியங்கள் நல்லது.

கடல் பாசி, சிறு மீன்கள், புதினா, கொத்தமல்லி, முட்டை வெள்ளைக்கரு அடிக்கடி சாப்பிடலாம்.

மேற்சொன்ன அனைத்து தாவர விதைகள் மற்றும் பருப்பு வகைகளும் நல்லது.

சோயாபால் அரை டம்ளர் அளவுக்கு வாரம் ஒரு முறை குடித்து வரலாம்.

உணவில் மஞ்சள் தூள் சேர்ப்பது நல்லது.

அடர்பச்சை நிற காய்கறி, பழங்கள் போலவே மஞ்சள் நிற காய்கறிகளும் பழங்களும் சாப்பிட வேண்டும்.

யோகா பயிற்சி

யோகா பயிற்சி

தினசரி யோகா பயிற்சி செய்வதும் நல்லது. சர்வாங்காசனம், அர்த்த மத்ஸ்சியாசனம் செய்வது மிகவும் சிறப்பு.

வர்ம பயிற்சி

வர்ம பயிற்சி

கட்டை விரலின் அடிப்பாகத்தில் அமைந்திருக்கும் மேடான பகுதிதான், இத்தொந்தரவுகளைச் சீராக்கும் இடம். இந்த மேடான பகுதியை மிதமாக அழுத்திவிடவும். வலது உள்ளங்கை மேட்டை, இடது கை கட்டை விரலால் 120 முறை அழுத்திவிடவேண்டும். அதே போல, இடது கை மேட்டை, வலது கட்டை விரலால் 120 முறை அழுத்தி விடவும். இது வர்ம பயிற்சியாகும்.

உணவுப்பழக்கம்

உணவுப்பழக்கம்

எந்த உணவைச் சாப்பிட்டாலும் பசித்த பின் சாப்பிடுவதே மருந்தாகும். பசிக்காமல் சாப்பிடும் உணவுகள், உடலில் சேர்ந்து கழிவாகும். மலச்சிக்கல் உண்டாகும். செரிமானத் தொந்தரவுகளை உருவாக்கும்.

sleepless

வாழ்வியல் பழக்கம்

இரவு 9.30 மணிக்குள் தூங்க செல்வது முக்கியம். எல்லாவித ஹார்மோன்களையும் சீராக தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஒரே வைத்தியம், உங்களது தூக்கம் மட்டுமே. தூக்கத்தைத் தவறவிட்டால் ஹார்மோன்கள் தன் கட்டுபாடுகளை இழக்கும். ஹார்மோன் தொந்தரவுகளுக்குத் ‘தூக்கம்’ என்ற ஒற்றை மருந்தே போதுமானது.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?