கண்ணாடியை கழற்றி வைக்க உதவும் கண் பயிற்சிகள் NewsSense
ஹெல்த்

கண்ணாடியை கழற்றி வைக்க உதவும் கண் பயிற்சிகள் : 60 + வயதிலும் கண்ணாடி அணிய தேவை இருக்காது!

பார்வைத் தொடர்பான பிரச்சனைகள் பரவலாகிவிட்டது. அது இயல்பு என்ற நிலைக்கும் மக்கள் தள்ளப்பட்டுவிட்டனர். சிறுவர்கள்கூடக் கண்ணாடி அணியும் நிலை உருவானது. ஆனால், கண்ணாடி இல்லாமல் கண் பார்வையைத் தெளிவடைய வைக்க முடியும்.

மினு ப்ரீத்தி

பார்வைத் தொடர்பான பிரச்சனைகள் பரவலாகிவிட்டது. அது இயல்பு என்ற நிலைக்கும் மக்கள் தள்ளப்பட்டுவிட்டனர். சிறுவர்கள்கூடக் கண்ணாடி அணியும் நிலை உருவானது. ஆனால், கண்ணாடி இல்லாமல் கண் பார்வையைத் தெளிவடைய வைக்க முடியும். அதற்கான உணவுமுறைகளும் வாழ்க்கைமுறைகளும் கண் பயிற்சிகளும் செய்து வந்தால் இயற்கையான முறையில் அனைத்துக் கண் குறைபாடுகளையும் நீக்க முடியும்.

கண்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கான காரணங்கள்

இரவில் நீண்ட நேரம் விழித்து இருத்தல்

தொடர்ச்சியான மொபைல், லாப்டாப் மற்றும் மற்ற சாதனங்களின் பயன்படுத்துவது

உடற்சூடு உடலில் அதிகரித்தல்

மலக்கழிவு அதிகமாக உடலில் சேர்ந்து இருத்தல்

செரிமானத் தொந்தரவு இருக்கையில் மேலும் மேலும் பசியை அறியாமலே உணவைச் சாப்பிடுதல்

என்னென்ன பிரச்சனைகள் நம் கண்களில்?

கிட்ட பார்வை, தூர பார்வை

கிளைக்கோமா

கண் வலி

கண் புரை, மாலைக் கண் போன்ற அனைத்துக் கண்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கும் இயற்கை முறையில் தீர்வு காண முடியும்.

பழங்கள் 

அனைத்துக் கண் நோய்களும் தீர இயற்கை வழிகள்

கட்டாயமாகக் காலை இயற்கை உணவும் மதியம் ஒருவேளை மட்டும் சமைத்த உணவை சாப்பிட்டு வர வேண்டும். இயற்கை உணவு என்றால் பழங்கள், நட்ஸ், விதைகள், காய்கறிகள் ஆகியவை. இவற்றைச் சமைக்கக் கூடாது.

பப்பாளிப்பழம், மாம்பழம், கேரட், பொன்னாங்கண்ணி கீரை, மற்ற கீரைகள், கறிவேப்பிலை ஆகியவை அதிக அளவில், பெரும்பாலும் சாப்பிட்டு வர வேண்டும்.

வாழைப்பழம், திராட்சைப்பழம், எலுமிச்சை ஜூஸ், ஆரஞ்சு பழம் ஆகியவையும் நல்லது.

கண் பார்வை தெளிவாகப் பெரிதும் உதவக்கூடியது பப்பாளி, மாம்பழங்களும்தான்.

சீசன் சமயம் கிடைக்கும் மா, பலா, வாழையை அவசியம் சாப்பிடுங்கள்.

கொத்தமல்லி துவையல், ஜூஸ், சாலட்டில் சேர்த்து சாப்பிடுவது பார்வைக் குறைபாட்டை நீக்கும்.

வாரத்தில் ஒருநாள் என மஞ்சள் பூ கரிசலாங்கண்ணிக் கீரை, நாட்டு நெல்லிக்காய் சாறு, ஆவாரம்பூ, முருங்கை கீரை மற்றும் பொன்னாங்கண்ணி கீரையைச் சாப்பிட வேண்டும்.

எலுமிச்சம் சாறு தேனுடன் சேர்த்து 21 நாட்கள் குடிக்க, கண் நோய்கள் தீரும். ஒரு நாளைக்கு ஒரு எலுமிச்சம் பழம் பயன்படுத்த வேண்டும்.

கண் பார்வை குறைவு நீங்க ஒருநாள் கேரட் சாறு, மறுநாள் கறிவேப்பிலை நெல்லி கலந்த சாறை நாள்தோறும் அருந்த வேண்டும். இவற்றை மாற்றி மாற்றி அருந்தலாம். சுவை தேவைப்பட்டால் மட்டுமே, தேங்காய்ப்பால், தேன் அல்லது நாட்டு வெல்லம் சேர்த்துப் பருகலாம்.

மலச்சிக்கல் உண்டாகாமல் இருக்க, பசித்த பிறகே உணவு உண்ணும் பழக்கத்துக்கு வரவேண்டும். ஒருநாளைக்கு ஒருமுறை பசித்தாலும்கூட ஒருமுறையே சாப்பிடுங்கள். இரவு 8 மணிக்கு மேல் சமைத்த உணவுகளைத் தவிர்க்கவும். பசித்தால் பழங்களைச் சாப்பிடவும்.

அசைவ உணவுகளைச் சாப்பிட விரும்பினால், மதிய வேளை மட்டும் சாப்பிடுங்கள். மாலை 6 மணிக்கு மேல் அசைவ உணவுகளைத் தவிர்க்கவும். பெரும்பாலும் மீன்களைச் சாப்பிடும் பழக்கம் நல்லது. மற்ற இறைச்சி உணவுகளைத் தவிர்க்கவும்.

கண் எரிச்சல்

கண் எரிச்சல் நீங்க

வெள்ளரி சாறை பஞ்சில் நனைத்து கண்களின் மேல் வைக்கக் கண் எரிச்சல் நீங்கும்.

Red Eye

கண் சிவப்பு மாற

சோற்றுக் கற்றாழையின் மேல் தோலைச் சீவி, உள்ளேயுள்ள கண்ணாடி போன்ற சதைப்பகுதியை கண் அகலத்துக்கு வெட்டி, அதை நன்கு கழிவிய பின், படுக்கும் முன் கண்களின் மேல் வைத்துத் துணியைக் கொண்டு 3 நாட்களுக்குக் கட்டி வரலாம். கண் சிவப்பு மாறிவிடும்.

கண் ஒளி மிக

கண் ஒளி மிக

அடுக்கு நந்தியாவட்டைப் பூக்கள் கிடைத்தால், தினமும் படுக்கும் போது, கண் மூடிய நிலையில் இரு கண்கள் மீதும் வைத்து துணியால் கட்டிக்கொண்டு படுத்து வந்தால் கண் ஒளி மிகும்.

நெல்லிக்காயை அரைத்துத் தலை உச்சியில் தேய்த்துக் குளிக்க வேண்டும் 

உடல் வெப்பம் தணிய

உடலில் வெப்பம் சேராமல் பாதுகாத்துக்கொள்வது மிக முக்கியம். இரவு 9 மணிக்குள் தூங்க செல்வது முதல் விதி.

நெல்லிக்காயை அரைத்துத் தலை உச்சியில் தேய்த்துக் குளிக்க உடல் சூடு தணியும். கண்கள் குளிர்ச்சியடையும்.

கண் கட்டி

கண் கட்டி, வீக்கம் மறைய

கண்களின் மேல் கட்டி இருந்தால், கொழுந்து இலையான கறிவேப்பிலை இலைகளை அரைத்து அதன் சாறைக் கண் கட்டி மேல் பூச சரியாகும். கட்டிகள் மறையும்.

eye wash bowl

கண் கழுவும் குவளை

கண் கழுவும் முறை, சிறந்த பலனைத் தரும். கண்ணாடியை கழற்றி வைக்கப் பெரிதும் உதவும். உள்ளங்கையில் தண்ணீரை நிரப்பி அதில் கண்களை வைத்துச் சிமிட்டலாம். 15-20 முறை வரை சிமிட்டலாம். இது எளிமையான பயிற்சி ஆனால், விரைவில் பலன் தரக்கூடிய முக்கியமான பயிற்சி. இரண்டு கண்களையும் காலை, மாலை இருவேளை எனக் கண் கழுவும் பயிற்சி முறையை அவசியம் செய்ய வேண்டும். இதை இன்னும் வசதியாக்க தற்போது ஆர்கானிக் கடைகள், இயற்கை வைத்திய கடைகளில் கண் கின்னம் கிடைக்கிறது. அதை வாங்கிப் பயிற்சி செய்வது உங்கள் வேலையை இன்னும் எளிமையாக்கும். இதன் விலை 20 ரூபாய்க்குள்தான் இருக்கும். இதனால் கண்கள் குளிர்ச்சியடைந்து பார்வை சீராகும். கல்லீரலை குளிர்ச்சியாக்கும். கல்லீரலின் செயல்பாட்டை மேம்படுத்தும். இதனால் பல்வேறு நோய் தொந்தரவுகள் மறையும்.

இந்தக் கண் கழுவும் முறையைத் தினமும் செய்து வந்தால் ஆயுள் முழுக்கக் கண் பார்வை குன்றாது. ஒருவேளை குன்றிய கண்களின் பார்வைகூடச் சரியாகும்.

wet cotton on eyes

கண் குளிர்ச்சியாக

கண் கழுவும் முறையைச் செய்ய முடியாதவர்கள், இதைச் செய்யலாம். பொதுவாகக் கண்களைக் குளிர்ச்சியாக வைத்திருத்தல் நல்லது. படுத்திருந்த நிலையில் ஈரப்பஞ்சு அல்லது ஈரத்துணி (கதர் அல்லது கைத்தறி துணியை) இரு கண்கள் மீதும் நாள்தோறும் காலையும் இரவும் 15-20 நிமிடங்கள் வரை வைக்கலாம்.

ஐ-பாம்மிங்

கண் பயிற்சி 1

தினமும் காலை சூரிய உதயத்தின் போதும், மாலையில் சூரியன் அஸ்தமனத்தின் போதும் கண் பயிற்சிகளைச் செய்ய வேண்டும். கண் கருவிழிகளை மட்டும் இடமிருந்து வலமாக கிளாக்வைஸ் சுற்றுதல். பின்னர் வலமிருந்து இடமாக ஆன்டி-கிளாக்வைஸ் சுற்றுதல். பின்னர், கருவிழிகளை மேலும் கீழும் பார்த்தல். அதன் பிறகு கண்களால் ‘ + ‘ கூட்டல் சிம்பள் வரைதல்; ‘ - ‘ கழித்தல் சிம்பள் வரைதல்; ‘ X ‘ பெருக்கல் சிம்பள் வரைதல் ; இதன் பிறகு கண்களை மூடி ஒய்வெடுத்தல். கைகளை நன்றாக சூடு பறக்க தேய்த்து கண்களின் மேல் அப்படியே வைத்து ஓய்வு எடுத்தல். இதற்குப் பெயர் ஐ-பாம்மிங் என்பார்கள். நாள்தோறும் இந்தப் பயிற்சியை இருமுறை செய்ய வேண்டும்.

throw ball on wall

கண் பயிற்சி 2

ஒரு பந்தை எடுத்துக்கொள்ளுங்கள். பந்தை தரையில் எறிந்து இடக் கையில் பிடித்தல். பின் பந்தை தரையில் எறிந்து வலக் கையில் பிடித்தல். இப்படி மாறி மாறி செய்து விளையாடலாம். இதுவே பயிற்சியாகும். 5 நிமிடங்கள் செய்யலாம். சிறுவர்களுக்கான சிறந்த பயிற்சி இது. இவ்வாறு செய்யும்போது கண் பார்வையைப் பந்தின் அசைவு மீது செலுத்த வேண்டும். பெரியவர்களும் அவசியம் செய்ய வேண்டும்.

மேற்சொன்ன இரு பயிற்சிகளுமே தொடர்ந்து செய்கையில், கண்ணாடியை கழட்டி வைத்து விடமுடியும்.

கண்ணாடி அணிந்து இருப்பவர்கள், தினமும் ஒரு மணி நேரம் கண்ணாடியை கழற்றி வைக்க வேண்டும். 15 நாட்கள் கழித்து 2 மணி நேரம் கண்ணாடியை கழற்றி வைக்க வேண்டும். ஒரு மாதம் கழித்து 3 மணி நேரம், 45 நாட்கள் கழித்து 4 மணி நேரம் கண்ணாடி கழற்றி வைக்க வேண்டும். இப்படி ஒவ்வொரு 15 நாட்களுக்கும் நேரத்தை அதிகரித்துக்கொண்டே செல்ல வேண்டும்.

மேற்சொன்ன உணவு முறை, வாழ்வியல் முறைகள், கண் பயிற்சிகள், கண் கழுவும் முறைகள் ஆகியவற்றைத் தொடர்ந்து செய்து வந்து, கண்ணாடியை கழற்றி வைக்கக் கண் பார்வைத் தெளிவாகி கொண்டே வரும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?