Crime Thriller படங்கள் பார்ப்பதால் நம் மூளையில் ஏற்படும் பாதிப்பு என்ன? Twitter
ஹெல்த்

Crime Thriller Series பார்ப்பதால் மன அழுத்தம் ஏற்படுமா?- இளைஞர்களை எச்சரிக்கும் ஆய்வு!

Antony Ajay R

கடந்த சில ஆண்டுகளாக குற்றவியல் படங்கள் மீதான மோகம் அதிகரித்துக் காணப்படுகிறது. நெட்ஃப்ளிக்ஸ் போன்ற ஓடிடிகளின் வளர்ச்சி இதற்கு முக்கிய காரணம்.

படங்களாக மட்டுமில்லாமல் சீரிஸ்களாக பல மணிநேரம் பார்க்கும் பழக்கமும் மக்களிடையே வளர்ந்திருக்கிறது. இளைஞர்களின் கலையை உள் வாங்கும் தன்மையானது "நைட் எல்லாம் முழிச்சி இருந்து ஒரு சீசன் பாத்தாச்சு மச்சான்" , "ஒன் வீக் கிடைக்கிற கேப் எல்லாம் பாத்து ஒரு சீரிஸ் முடிச்சேன்" என்னும் அளவுக்கு வந்திருக்கிறது.

இந்த அளவு அதிக நேரம் நம்மை திரையில் உட்கார வைப்பது பெரும்பாலும் த்ரில்லர்கள் தான். க்ரைம் த்ரில்லர், சைக்கோ திரில்லர், ஹாரர் த்ரில்லர், த்ரில்லர் ட்ராமா என பலவகையான த்ரில்லர்கள் இதில் அடக்கம்.

க்ரைம் சீரிஸ் ஆரம்பித்த முதல் எபிசோடிலேயே நம்மை குற்ற உலகத்துக்குள் கூட்டிச் சென்றுவிடும். அதன் பின் பல மணிநேரம் மொபைலோ டிவியோ பார்த்த பின்னர் மிஞ்சுவது பரபரப்பு தான்.

இவை சுழல், நவம்பர் ஸ்டோரீஸ், ஹவுஸ் ஆஃப் சீக்ரட்ஸ், சாக்ரட் கேம்ஸ் போன்ற சீரிஸ்களாகவோ டிமான்டி காலனி, சுழல் (மலையாளம்), ஆர்பன் போன்ற படங்களாகவோ இருக்கலாம். சில முழுவதும் புனையப்பட்டவை, சில உண்மை குற்ற சம்பவங்கள் அடிப்படையிலானவை.

நாள் முழுவதும் அல்லது இரவு முழுவதும் இப்படி சீரிஸ்களைப் பார்ப்பது சாதாரணமான ஒன்றாக தெரியலாம். ஆனால் இவை பொழுதுபோக்கு என்ற கட்டத்தைத் தாண்டி நம் மன நலத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்கிறது Cleveland Clinic தளம்.

நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த க்ரைம் சீரிஸ்கள் மக்களை குற்றம் செய்ய தூண்டுவதில்லை. ஆனால், குற்றம் செய்பவர்களின் மனதைத் திறந்து காட்டுகிறது. குற்றவாளிகளின் செயல்களை ரசித்துப் பார்க்கும் ரசிகர்கள் அந்த கொடூர செயல்களினால் ஈர்க்கப்படுகின்றனர்.

Vikings

மேலும் ஆய்வுகள் பெண்களே இது போன்ற உண்மை குற்ற ஆவணப்படம், படம் அல்லது சீரிஸ்களை விரும்பிப் பார்ப்பதாக கூறுகின்றன. பெண்கள் குற்றங்களுக்கு உள்ளாக அதிக வாய்ப்புகள் இருப்பதனால், அவர்கள் அதிகமாக இவற்றைக் காண்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். குற்றவியல் படங்களை விரும்பும் பெண்கள் அதிகம் விழிப்புடன் இருக்கின்றனர். ஆனால் மறுபக்கத்தில் அதிக பொசசிவானவர்களாகவும் ஓவர் ரியாட் செய்பவர்களாகவும் மாறுகின்றனர்.

மனித குலத்தின் மிக மோசமான பக்கங்களே உண்மை குற்றவியல் படங்களாக, சீரிஸ்களாக வெளியாகின்றன. இந்த மோசமான பக்கங்களையே தொடர்ந்து பார்பவர்களுக்கு மனதளவில் சக மனிதர்கள் மீதான் நம்பிக்கை இல்லாமல் போய்விடுக்கூடும்.

கொலை, பாலியல் வன்புணர்வு, வன்முறைக் காட்சிகளைக் கொண்ட படங்களை அதிகமாக பார்ப்பவர்களை, கீழ்காணும் மனதளவில் அவர் பாதிக்கின்றது.

1. எப்போது அச்சத்திலேயே இருப்பது

2. வீட்டிலும் பாதுகாப்பு இல்லாதது போல உணருவது

3. படபடப்பு (Anxiety)

4. சின்ன விஷயங்களிலும் அதிக கவனமாக இருப்பது

இது போன்ற பிரச்னைகளை உணர்ந்தால் அதற்கு நீங்கள் பார்க்கும் படங்களும் சீரிஸ்களும் கூட காரணமாக இருக்கலாம். இவற்றால் தூக்கமின்மை, இதயத் துடிப்பு அதிகரிப்பு ஏற்படலாம்.

squid game

நீங்கள் உண்மையான குற்ற சம்பவ அடிப்படையில் வெளியாகும் சீரிஸ்களை அல்லது வேறு கொடூரமான த்ரில்லர்களை பார்க்கிறீர்களென்றால் எவ்வாறு உணருகிறீர்கள் என்பதை கவனியுங்கள்.

நீங்கள் குற்றம் பின்னணியை அறிவதில் ஆர்வம் காட்டுகிறீர்களா? அல்லது பதட்டமாக, மன அழுத்தமாக , நெருக்கடியாக உணர்கிறீர்களா?

இதேப் போல உங்கள் உடல் என்ன மாதிரியான எதிர்வினைகளைத் தருகிறது என்பதையும் கண்டறியுங்கள். குற்ற அல்லது கொடூரமான காட்சிகளுக்கு நீங்கள் அடிமையாகவும் (Addiction) வாய்ப்புகளிருக்கிறது.

உங்களை நீங்களே கண்காணித்து எதிர்மறையாக உணரும் போது அது மாதிரியான படங்களைத் தவிர்த்துவிடுவது நல்லது.

என்ன இருந்தாலும் இந்த காலத்தில் சீரிஸ்களைப் பார்ப்பது தவிர்க்க முடியாதது. முடிந்த வரை அனைத்து ஜேனர் படங்களையும் பாருங்கள். எந்த படங்கள் பார்க்கும் போது நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களோ அவற்றைப் பாருங்கள். நீங்கள் படபடப்பாக உணரும் படங்களை முடிந்தவரை தவிர்ப்பது உங்கள் மனநலத்தைப் பாதுகாக்க உதவும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?