உங்கள் குழந்தைகளுக்கு Smartphone வழங்க சரியான வயது எது? Twitter
ஹெல்த்

உங்கள் குழந்தைகளுக்கு Smartphone வழங்க சரியான வயது எது?

ஸ்மார்ட் போனுக்கு அடிமையாகாமல் குறைந்த அளவு மட்டும் உபயோகிக்க குழந்தைகளுக்கு சில விதிமுறைகளை வகுத்து அவற்றைச் சரியாக கடைபிடிக்கச் செய்ய வேண்டியது அவசியம். இந்த விதிமுறைகளை புரிந்துகொண்டு சீரியஸாக கடைபிடிக்கும் பக்குவம் குழந்தைக்கு இருக்க வேண்டும்.

Antony Ajay R

இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலான குழந்தைகள் கையில் மொபைல் வைத்திருக்கின்றனர். மொபைலில் பாடல்கள் அல்லது வீடியோக்களைக் காட்டி குழந்தைகளுக்கு சோறு ஊட்டும் தாய்மார்களைக் காண முடியும்.

தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பதற்கு இணங்க குழந்தைகள் ஸ்மார்ட் உடனே வளர்கின்றனர். ஆரம்பத்தில் குழந்தைகள் பெற்றோர்களின் மொபைலை அதிகமாக பயன்படுத்த... ஒரு கட்டத்தில் அது தொல்லையாக மாறி குழந்தைகளுக்கு சொந்த மொபைல் வாங்கிக்கொடுக்கும் பெற்றோர்கள் இங்கு இருக்கின்றனர்.

குழந்தைகள் மொபைலில் ஒரு விளையாட்டுக்கோ செயலிக்கோ அடிமையாகும் போது அதனை கவனமாக தவிர்க்க வேண்டியது பெற்றோரின் கடமை.

ஒரு கேமை சரியாக விளையாடும் வயதைக் கூட எட்டாத குழந்தைகளுக்கு பாதுகாப்பு கருதி மொபைல் போன்கள் கொடுக்கப்படுகின்றது. இப்படி மொபைலுடன் இருக்கும் குழந்தைகளின் உடல் மற்றும் மனநலத்தை பாதுகாப்பது பெற்றோரின் கடமை.

இந்த மொபைல் மூலம் குழந்தைகள் இணையத்தை முழுவதும் பார்க்க முடிகிறது. முகம் தெரியாதவர்களுடன் பேசவும் பழகவும் முடிவதுடன் தங்கள் இருப்பிடத்தையும் பலருடன் பகிர முடிகிறது.

இணையத்தில் இருக்கும் ஆபத்துகள், பாலியல் குற்றங்கள், சைபர் மோசடிகளிலிருந்து உங்கள் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க நீங்கள் நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதைத் தாண்டி, உங்கள் குழந்தைகள் மொபைலை பயன்படுத்தும் பக்குவம் பெற்றிருப்பது அவசியம்.

ஸ்மார்ட் போனுக்கு அடிமையாகாமல் குறைந்த அளவு மட்டும் உபயோகிக்க குழந்தைகளுக்கு சில விதிமுறைகளை வகுத்து அவற்றைச் சரியாக கடைபிடிக்கச் செய்ய வேண்டியது அவசியம். இந்த விதிமுறைகளை புரிந்துகொண்டு சீரியஸாக கடைபிடிக்கும் பக்குவம் குழந்தைக்கு இருக்க வேண்டும்.

சமீபத்தில் குழந்தைகள் மொபைல் பயன்படுத்துவது குறித்து நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று 10.3 வயது குழந்தைகளுக்கு மொபைல் கொடுக்க குறைந்தபட்ச வயது என்று கூறியுள்ளது. அந்த ஆய்வு வளர்ந்த நாடுகளில் 12 வயது குழந்தைகள் 50% மொபைல் வைத்திருப்பதாகவும், அதில் பெரும்பாலானோர் இன்ஸ்டாகிராம் அல்லது பேஸ்புக்கில் கணக்கு வைத்திருப்பதாகவும் கூறுகின்றது.

இந்த ஆய்வ சராசரியாக ஒரு வயதைக் குறிப்பிட்டிருந்தாலும் எல்லாக் குழந்தைகளும் அந்த வயதில் பக்குவமடைந்து விட்டார்கள் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

பெற்றோர்கள் தங்கள் குழந்தை பொறுப்புடன் மொபைல்போனை பயன்படுத்தும் பக்குவமடைந்துவிட்டனர் என்று கருதும்போது அவர்களுக்குக் கொடுக்கலாம்.

குழந்தை பருவம் என்பது எல்லார் வாழ்க்கையிலும் மிக முக்கியமான ஒன்று அதனை சிறப்பானதாக அமைக்க ஸ்மார்ட்போன்கள் தடையாக இருந்துவிடக் கூடாது.

குழந்தைகளுக்கு டிஜிட்டல் வெல்பீயிங் குறித்து கற்றுக்கொடுப்பதுடன் மொபைல் பேரன்டல் கன்ட்ரோலில் இருக்க வேண்டியதும் அவசியம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?