What Are The Most Common Mental Health Problems In Women? Twitter
ஹெல்த்

பெண்களுக்கு ஏற்படும் பொதுவான மனநலப் பிரச்னைகள் என்னென்ன?

பெண்களின் உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. பெண்கள், ஆண்களை விட மனநல பிரச்னைகளால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். பெண்களைப் பாதிக்கும் பொதுவான மனநலப் பிரச்னைகள் குறித்து இந்த பதிவில் தெரிந்துகொள்ள போகிறோம்.

Priyadharshini R

மனச்சோர்வு மற்றும் பதற்றம் ஆண்களை விட பெண்களை அடிக்கடி பாதிக்கும். பெண்களின் உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. பெண்கள், ஆண்களை விட மனநல பிரச்னைகளால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

பெண்களைப் பாதிக்கும் பொதுவான மனநலப் பிரச்னைகள் குறித்து இந்த பதிவில் தெரிந்துகொள்ள போகிறோம்.

மனச்சோர்வு

ஆண்களை விட பெண்களுக்கு மனச்சோர்வு அதிகமாக ஏற்படும் என்கின்றனர் நிபுணர்கள். மாதவிடாய், கர்ப்பம் மற்றும் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ஹார்மோன் ஏற்ற இறக்கங்கள் போன்ற பல்வேறு காரணங்களால் பெண்களுக்கு மனச்சோர்வு ஏற்படுகிறது.

பெண்களுக்கு ஏற்படும் மனச்சோர்வின் அறிகுறிகள் ஆண்களிடமிருந்து வேறுபடுகின்றன. திடீர் ஆர்வமின்மை, பாலியல் தூண்டுதல் இல்லாமை, அடிக்கடி அழுகை ஆகிய உணர்வுகள் அவர்களின் மன அழுத்தத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்கின்றனர்.

கவலை

உலக அளவில் பெண்களைப் பாதிக்கும் பொதுவான மனநலப் பிரச்சினை கவலை. ஆண்களைப் போலல்லாமல், பெண்கள் எல்லா விஷயத்தையும் உள்வாங்கி மைண்டுக்கு எடுத்து சென்று கவலை கொள்கின்றனர்.

பிரசவத்திற்குப் பிறகான மனநிலை

கர்ப்ப காலத்திலும் சரி, பிரசவத்திற்கு பிறகும் சரி பெண்களின் மனநிலை சீரற்றதாக இருக்கும். ஹார்மோன் ஏற்ற இறக்கங்கள், தூக்கமின்மை மற்றும் தாய்மையின் சவால்கள், உணவுகளின் மாற்றம் போன்றவை பெண்களுக்கு ஒரு விதமான மனநல பிரச்னையாக அமைக்கிறது.

PTSD

பெண்கள் பாலியல் வன்கொடுமை மற்றும் குடும்ப வன்முறை போன்ற அதிர்ச்சிகரமான நிகழ்வுகளை சமாளிப்பதால் இளம் வயதிலிருந்தே பெண்கள் PTSDஐ ( Post-traumatic stress disorder ) அனுபவிக்கும் வாய்ப்புகள் அதிகம்.

மன உளைச்சலைச் சமாளிப்பதற்கான ஒரு வழியாக, கைகளை கீறி கொள்ளுதல், தற்கொலை அல்லாத சுய-காய நடத்தைகளில் பெண்கள் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதுவும் ஒரு வகையான மனநல பிரச்னை தான்.

அனைத்து பாலினங்களும் உணர்ச்சி மற்றும் மனநல சவால்களை எதிர்கொள்கின்றன. ஆனால் பெண்கள் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்கள் சந்திக்கும் சமூக அழுத்தங்களால் கூடுதலாக பாதிக்கப்படுகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?