கோடை காலம் இப்போதுதான் தொடங்கியுள்ளது. இந்த சமர் சீசனில் நம்மை நீரேற்றமாக வைத்திருப்பது முக்கியம். தண்ணீர் அதிகமாக குடிப்பது நீரேற்றமாக இருக்க சிறந்த வழியாக இருந்தாலும், நீர் சத்து நிறைந்த பழங்களை எடுத்துக்கொள்வது இன்னும் சிறந்தது. குறிப்பாக சீசன் பழமான தர்பூசணி போன்ற பழங்களை சாப்பிடுவதும் நல்லது.
இந்த பழம் நம் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும், மேலும் இதில் 92 சதவீதம் தண்ணீர் இருப்பதால், உடலில் உள்ள நீர் இழப்பை நிரப்பி, நம்மை நீரேற்றமாக வைத்திருக்கும்.
தர்பூசணியில் லைகோபீன், ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன.
உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு இந்த பழம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் கலோரிகள் மிகக் குறைவு என்பதால், இந்தப் பழத்தை உட்கொள்வதால் வயிறு நீண்ட நேரம் நிறைந்திருக்கும்.
இப்படி பல்வேறு நன்மைகள் இருக்கும் இந்த பழத்தை அதிகமாக உட்கொண்டால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஊட்டச்சத்து நிபுணர் டிடி நிஷா பகிர்ந்து கொண்டுள்ளார்.
வயிற்றுப்போக்கு
தர்பூசணியில் தண்ணீர் மற்றும் இயற்கை சர்க்கரைகள், குறிப்பாக பிரக்டோஸ் அதிகம் உள்ளது. அதிக அளவு தர்பூசணியை உட்கொள்வது இரைப்பை குடல் கோளாறு மற்றும் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தக்கூடும், குறிப்பாக உணர்திறன் வாய்ந்த செரிமான அமைப்பு உள்ளவர்களுக்கு இந்த பிரச்னை ஏற்படக்கூடும்.
இரத்த சர்க்கரை
தர்பூசணியில் இயற்கையாகவே சர்க்கரைகள் உள்ளன. இதனை அதிக அளவில் உட்கொள்ளும் போது இரத்தத்தின் சர்க்கரை அளவு விரைவாக அதிகரிக்கக்கூடும். குறிப்பாக நீரிழிவு நோய் அல்லது இன்சுலின் எதிர்ப்பு உள்ளவர்களுக்கு இந்த விளைவு அதிகமாக இருக்கலாம்.
செரிமான பிரச்னை
தர்பூசணியினை அதிகமாக உட்கொண்டால் அதில் இருக்கும் நீர் மற்றும் நார்ச்சத்து காரணமாக வீக்கம், வாயு மற்றும் வயிற்று அசௌகரியம் ஏற்படலாம்.
ஒவ்வாமை
இது அரிதாக இருந்தாலும், சிலருக்கு தர்பூசணி ஒவ்வாமையை ஏற்படுத்தும். அரிப்பு மற்றும் படை நோய் போன்ற லேசான அறிகுறிகளிலிருந்து சுவாசிப்பதில் சிரமம், அனாபிலாக்ஸிஸ் போன்ற கடுமையான எதிர்வினைகள் வரை ஏற்படுத்தலாம்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnews