பித்தம் News Sense
ஹெல்த்

பித்தம் அதிகரித்தால் என்ன செய்ய வேண்டும் - எளிமையான வழிகாட்டுதல் | Nalam 360

பித்தத்தின் சமநிலை உடலின் சமநிலையைத் தீர்மானிக்கிறது. பித்தம் சீராக இருந்தாலே செரிமான மண்டலம் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலம் சீராக இருக்கும். பித்தம் சீராக இருக்க நம்முடைய உணவு முறை சரியானதாக இருக்க வேண்டும்.

Antony Ajay R

நம் உடலில் மிக முக்கியமான உள் உறுப்பு பித்தம், தன் வெப்பத்தால் உடலைக் காப்பது, ரத்த ஓட்டம், மன ஓட்டம், செரிமான சுரப்பிகள், நாளமில்லாச் சுரப்பிகள் போன்ற அனைத்தையும் இயக்கும் வேலையைப் பார்க்கிறது.

பித்தத்தின் சமநிலை உடலின் சமநிலையைத் தீர்மானிக்கிறது. பித்தம் சீராக இருந்தாலே செரிமான மண்டலம் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலம் சீராக இருக்கும். பித்தம் சீராக இருக்க நம்முடைய உணவு முறை சரியானதாக இருக்க வேண்டும்.

பித்தம் அதிகரிப்பதை எப்படிக் கண்டுபிடிப்பது?

பித்தம் சீராக இல்லாவிடில் நேரடியாக வயிற்று கோளாறுகள் மற்றும் பலவகை அசௌகரியங்களை ஏற்படுத்தும். பித்தம் அதிகமாகும் போது,

  • அஜீரணக்கோளாறு,

  • நெஞ்செரிச்சல்,

  • டயேரியா,

  • சரும எரிச்சல்,

  • சருமத்தில் அரிப்பு ஏற்படுவது,

  • அதிகமாக வியர்ப்பது,

  • அல்சர்,

  • மன அழுத்தம்

  • உயர் ரத்த அழுத்தம்

  • அதிகப்படியான தாகம்

போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம், இவை ஏற்படாமல் இருக்கப் பித்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது அவசியம்.

பித்தம்

பித்தத்தைக் குறைக்க என்ன சாப்பிடலாம்?

பித்தத்தைக் குறைக்க உணவில் காரத்தை, எண்ணெய்யைக் குறைக்க வேண்டும். அதிகமாகக் கோதுமையைச் சேர்ப்பதுகூட பித்தத்தைக் கூட்டும். அரிசி நல்லது... ஆனால் கைக்குத்தல் அரிசியாகப் பார்த்துச் சாப்பிடுவது நல்லது. கரிசலாங்கண்ணிக்கீரை, கறிவேப்பிலை, சீரகம், தனியா, எலுமிச்சை, மஞ்சள், இஞ்சி... இவையெல்லாம் பித்தம் தணிக்கும். மனத்தையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வது அவசியம்.

கசப்புத் தன்மை கொண்ட உணவுகளையும் இனிப்பு உணவுகளையும் எடுத்துக் கொண்டால், உடலில் பித்தத்தின் அளவு குறையும் என ஆயுர்வேதம் சொல்கிறது. ஆப்பிள், திராட்சை, சுச்சினி, லெட்யூஸ், வெள்ளரிக்காய், பீன்ஸ், தேங்காய், வாட்டர்மெலன், பால் ஆகிய உணவுகள் பித்தத்தைத் தணிக்க உதவும்.

பித்தத்தைக் குறைக்க வேண்டுமெனில் கோழிக்கறி சாப்பிடுவதை 100 விழுக்காடு தவிர்க்க வேண்டும். ஆல்கஹால் கூடவே கூடாது. வறுத்த உணவுகள் அதிக உப்பு காரம் உள்ளவை சாப்பிடக்கூடாது. காபி குடிக்கக் கூடாது, புளிப்பு மற்றும் எண்ணெய் பண்டங்கள் உண்பதையும் குறைக்க வேண்டும்.

பித்தம்

பித்தம் - உளவியல்

பித்தம் அதிகமாக இருப்பவர்கள் அதி மும்முரமாக வேலை செய்வார்கள். அப்படி வேலை செய்தால் அவ்வப்போது ஓய்வெடுக்கக் கற்றுக்கொள்ளுங்கள். முக்கியமாகக் கணினியில் வேலை செய்பவர்கள். இசையைக் கேளுங்கள். பிடித்த வேறு விஷயங்களில் மனதைச் சிறிது நேரம் செலுத்துங்கள். காரால நடந்து மனதை அமைதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?