முடி உதிர்வு Twitter
ஹெல்த்

வெயில் காலத்தில் அதிகரிக்கும் முடி உதிர்வு - என்ன செய்யலாம்?

Antony Ajay R

வெயில் காலம் வந்ததும் கூடவே உடல் நலப் பிரச்சனைகளும் சருமப் பிரச்சனைகளும் வந்து விடும். முகத்துக்கு சன்ஸ்கிரீம், ஸ்கார்ஃப் எல்லாம் போட்டுப் பார்த்துக்கொள்ள வேண்டும். மற்றொரு பக்கம் உடல் சூடும் துரத்தும். இளநீர், நுங்கு, மோர் என எதாவது சாப்பிட்டு அதிலிருந்தும் காத்துக்கொள்ள வேண்டும். இவற்றுக்கிடையில் நாம் தலை முடியை பெரும்பாலும் டீலில் விட்டு விடுகிறோம். முடிவு முடியுதிர்வாக வந்து நிற்கிறது. சம்மர்ல எல்லாத்தூக்கும் ஸ்பெஷல் கேர் கொடுக்கும் நாம் முடியையும் ஈசியா மெயின்டெயின் செய்யலாம்.


முடியை பாதுகாப்பது ஏன் அவசியம்

நம் உடலில் இருக்கும் மென்மையான தோல்களுள் தலையில் உள்ள தோலும் அடங்கும். இதற்கு ஸ்கால்ப் என்று பெயர். முகத்தில் எண்ணெய் சுரப்பது போல அதிக எண்ணெய் சுரக்கக்கூடிய தோல் இது தான். அதிக வெயில் ஸ்கால்ப் பகுதியில் படும் போது ஸ்கால்ப் நேரடியாகப் பாதிக்கப்படும். ஸ்கால்பில் சுரக்கிற வியர்வை கூட அங்கிருக்கிற எண்ணெய் காரணமாக வெளியேறாமல் பாக்டீரியா தொற்றாக, அதிகப்படியான எண்ணெய்யாக, அழுக்காக தலையில் தங்கிடும்.

முடி உதிர்வு

ஸ்கால்ப் பாதிக்கப்படுவதனால் அரிப்பு, செதில்கள் ஏற்படும். இதனால் பூஞ்சை தொற்று, பாக்டீரியா தொற்று, வெள்ளை பரு, பொடுகு போன்றவை ஏற்படும். இவை எல்லாம் சேர்ந்து முடி உதிர்வை ஏற்படுத்தும்.


எப்படி பாதுகாப்பது?

வெயில் காரணமா வீக் ஆன ஸ்கால்ப் பகுதியைச் சரியாக்க எளிமையான வழிமுறை இது தான். கொஞ்சம் வெந்தையம் எடுத்து தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். அதனுடன் தேங்காய் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும். குளிப்பதற்கு முன்பு தலையை நனைத்து வெந்தையம் மற்றும் தேங்காய் கலவையைத் தடவி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்னர் தலையில் தேய்த்துக் குளித்தால் முடி சுத்தமாகவும் ஷைனாகவும் மாறிவிடும்.

ஒரு வேலை வெயிலில் முடி அதிகமாக வறண்டுவிட்டால் தலையில் எண்ணெய்க்குப் பதிலாக சீரம் உபயோகியுங்கள். முடியை அவ்வப்போது சுத்தம் செய்து கொள்ளுங்கள்.

வெயிலில் செல்லும் போது தொப்பி அல்லது ஸ்கார்ஃப் அணிந்து கொள்ளுங்கள். ஹேர் கலரிங், ஸ்மூதிங் போன்றவற்றை வெயில் காலத்தில் தவிர்க்கவும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?