ஒரு நாளைக்கு இவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும். அவ்வளவு தண்ணீர் அருந்த வேண்டும் என்ற கருத்து பரவலாக இருக்கிறது. மலைப்பகுதி, குளிர் நாடுகளில், பனிக்காலத்திலும் இதே அளவு தாகம் இருக்குமா? இங்குச் சொல்லப்படும் 2-3 லிட்டர் தண்ணீர் அனைவருக்கும் பொருந்துமா? வெயில் அதிகம். உழைப்பு அதிகம். வியர்வை வருவது அதிகம் என இருப்பவர்களுக்கு 8 டம்ளர் நீர் போதுமா? எல்லோரும் ஒரே மாதிரி அல்ல. ஒரே இடத்தில் வாழும் சூழலில் இல்லை. ஒரேவித பணியும் இல்லை. உடலுழைப்பும் இல்லை.
வாகன ஓட்டிகளுக்குச் சூடு அதிகம் அவரின் தாகம் மாறுப்படும். ஏசியில் இருப்போருக்குத் தாகம் இருக்காது. மலைப்பகுதியில் ஓட்டும் டிரைவருக்கும் நகர்புறத்தில் ஓட்டும் டிரைவர்களுக்குமே தாகத்தில் மாறுப்படும். அப்படி இருக்க 2-3 லிட்டர் தண்ணீர் குடிங்க எனப் பொதுவாகச் சொல்வது எப்படி எல்லோருக்கும் சரியாக இருக்கும். நிச்சயம் அது தவறான அறிவுரை. எந்த மருந்துவர் அப்படிச் சொன்னாலும் அது தவறுதான். உங்கள் உடலே உங்களுக்கான மருத்துவர் என்பதை மறவாதீங்க.
தண்ணீர் அதிகளவு குடித்தால் உடலுக்கு நல்லது எனச் சொல்வது பொய்யானத் தகவல். இதில் எந்த நல்லதும் இல்லை. கெடுதல்தான் உடலில் நடக்கும். தேவையான அளவில் குடிப்பதே உடலுக்கு நல்லது.
அப்போ தேவையை எப்படிக் கண்டுபிடிப்பது? அது உங்க உடலுக்குத் தெரியும். உங்கள் உடலே பிரமாதமான மருத்துவர். உங்க உடலை விடச் சிறந்த மருத்துவர் உலகில் இல்லை. இது இயற்கை சொல்லும் உண்மை. உங்கள் உடலில் ஏற்படும் தாகத்தைக் கவனியுங்கள். தாகம் தீர தண்ணீர் அருந்துங்கள். அதுதான் உங்களுக்கான அளவு... 8 டம்ளர், 2 லிட்டர், 3 லிட்டர் என்ற அளவோ கணக்கோ கிடையாது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே தாகத்தைப் பொறுத்துதான் தண்ணீர் குடிக்க வேண்டும்.
Drinking Water
உங்கள் வேலை, வாழும் இடம், சூழல், தட்பவெட்ப நிலை இதைப் பொருத்து தண்ணீரின் அளவு மாறுப்படும். தாகம் அறிந்து தண்ணீர் குடித்தால் நீரே மருத்துவமாகும். உங்க உடலுக்கு நீரே மருந்தாகிவிடும். பஞ்ச பூதத்தில் நீர் பூதம் சரியாக, சீராக உடலில் செயல்படும்.
Hot Water
‘கொதிக்க வைத்த நீர் நல்லது’ எனச் சொல்வது தவறு. சூடு செய்த தண்ணீரில் உயிர்த்தன்மை நீங்கிவிடும். சாதாரணச் சூடு படுத்தாத தண்ணீரிலே உயிர்த்தன்மை இருக்கும். கஷாயம் செய்கையில் நீரை கொதிக்க விடுகிறோம். இது மருந்தின் தயாரிப்பு முறை. இது நாள்தோறும் நாம் குடிப்பதில்லை. நாள்தோறும் குடிப்பது நீர்தான் எனவே நீர் சூடாக அருந்த கூடாது.
குளோரின் கலந்த நீரை சுத்தப்படுத்துவது
ஹம்சோதகம் செய்து சுத்தப்படுத்தலாம். அதாவது, தண்ணீருக்குள் சில இலைகளையோ பூவின் இதழ்களையோ போட்டு வைக்கலாம். துளசி, ரோஜா, அருகம்புல் ஆகியன போடலாம்.
குளிர்ந்த நீர்
ஐஸ் கியூப்ஸ் போட்டு அல்லது குளிர்ந்த நீர் குடிப்பதால் செரிமானம் மிகையாகப் பாதிக்கும். பற்கள் வலுவிழந்து போகும்.
எப்படி நீர் குடிப்பது?
நீரை குடிக்கக் கூடாது. உண்ண வேண்டும் என்பார்கள். அதாவது தீர்த்தம் போல மெதுவாக உண்ண வேண்டும். தாகம் பொறுத்து தேவையான அளவு தண்ணீர் உண்ணலாம்.
Thirsty
தாகம் தொண்டையிலும் வாயிலும்தான் ஏற்படுகிறது. அதனால் மடமடவெனத் தண்ணீரை குடிக்காமல், சிப் செய்து… சிப் பை சிப்பாக குடித்தால்தான் வாயிலும் தொண்டையிலும் உள்ள தாகம் தணியும். எனவே, தண்ணீரை அதிக நேரம் வாயில் வைத்து சுவைத்து உமிழ்நீர் கலந்து குடிப்பதே நல்லது. அதாவது உண்ண வேண்டும் எனச் சொல்லபடுகிறது. ஒரே தடவையில் அதிகமாகச் சொம்பு நிறையக் குடித்தால் இதயத்துக்கும் சிறுநீரகத்துக்கும் அதிகப் பளு ஏற்படும்.
நேரம் - காலம்
அவரவர் சூழ்நிலை இடம் பொறுத்து மாறும். பொதுவாகக் காலை, மதியம், மாலை தாகம் ஏற்படலாம். இரவில் அதிகத் தாகம் ஏற்படாது. ஆனால், இது அனைவருக்கும் பொருந்துமா என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. உங்கள் தாகத்தை மட்டும் கவனியுங்கள்.
காலை உணவு - நீர் உணவு
காலை உணவு நீர் கலந்த உணவாக இருக்க வேண்டும். ஜூஸ், நீராகாரம், கஞ்சி, கூழ் போன்றவை... டிபன் வகைகள் உண்ண கூடாது. தாகத்தை உண்டாக்காத உணவுகள் சிறந்தவை. டிபன் வகைகள் தாகத்தை அதிகளவு உண்டாக்கும். தோசை, இட்லி, பூரி, சப்பாத்தி வறண்டுபோகும் உணவுகள். குடலுக்குள் செல்லும்போது தன்னிடம் உள்ள நீரை எளிதில் இழந்து வறண்டு அதிகத் தாகத்தையும் பின்னர் மலச்சிக்கலையும் தலைவலியையும் மந்தத்தன்மையையும் உருவாக்கும். டிபன் சாப்பிடுபவர்களுக்கு மலச்சிக்கல் வருவது உறுதி. மலச்சிக்கல் வந்தால் தலைவலி ஃப்ரீ…
தாகத்துக்கு நீரே பெஸ்ட்
தாகம் என வந்துவிட்டால் உங்களது முதல் சாய்ஸ், தண்ணீராக இருக்க வேண்டும். இது இயற்கை விதி. தண்ணீர் கிடைக்காவிட்டால் இளநீர், வெள்ளரி, தர்பூசணி, சாறுள்ள கனிகளைச் சுவைக்கலாம்.