2001 Parliament Attack: நாடாளுமன்ற தாக்குதலில் இருந்து எம்.பிக்களை காத்த "ஹீரோ" தெரியுமா? Twitter
இந்தியா

2001 Parliament Attack: நாடாளுமன்ற தாக்குதலில் இருந்து எம்.பிக்களை காத்த "ஹீரோ" தெரியுமா?

பாகிஸ்தான் தீவிரவாதிகள் நாடாளுமன்ற வளாகத்திற்குள் துப்பாக்கிகளுடன் நுழைந்தனர். அன்றும் மத்தியில் பாஜக ஆட்சி நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

Antony Ajay R

இன்று நாடாளுமன்றத்தில் இரண்டு நபர்கள் பார்வையாளர் பகுதியில் இருந்து குதித்து புகைவரும் பொருளை வீசியுள்ளனர். நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இருவரும் மைசூர் பாஜக எம்.எல்.ஏவின் உள்நுழைவுச் சீட்டை வைத்திருந்துள்ளனர்.

இந்த சம்பவம் இதே நாளில் தான் 2001ம் ஆண்டு நாடாளுமன்ற தாக்குதல் நடைபெற்றது. பாகிஸ்தான் தீவிரவாதிகள் நாடாளுமன்ற வளாகத்திற்குள் துப்பாக்கிகளுடன் நுழைந்தனர்.

9 பாதுகாப்பு வீரர்களை பலிகொண்ட அந்த தாக்குதல் பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த தாக்குதல் பாகிஸ்தான் உதவியுடன் லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது (Lashkar-e-Taiba and Jaish-e-Mohammad) என்ற இரண்டு அமைப்புகளால் நடத்தப்பட்டது என அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் லால் கிருஷ்ணா அத்வானி தெரிவித்திருக்கிறார்.

அன்றும் மத்தியில் பாஜக ஆட்சி நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. அன்று காலை 11:30 மணி அளவில் வெள்ளை அம்பாசிடர் கார் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தது. அதில் இருந்தவர்கள் போலி விஐபி அட்டைகளைப் பயன்படுத்தி உள்ளே வந்தனர்.

அவர்கள் 5 பேர். அனைவரும் ஆயுதமேந்தியிருந்துள்ளனர். நாடாளுமன்றம் தொடங்கியது பிரதமராக இருந்த அடல் பிகாரி வாஜ்பாயி மற்றும் எதிர்கட்சித்தலைவர் சோனியா காந்தி அவையை விட்டு வெளியேறிவிட்டனர்.

பாதுகாப்புத்துறை அமைச்சர் அத்வானி உள்ளிட்ட 100 எம்.பிக்கள் அவையில் இருந்தனர். அவைத் தொடங்கி சரியாக 40 நிமிடங்களில் வளாகத்தில் இருந்த அப்போதைய துணை குடியரசுத் தலைவர் கிருஷ்ண காந்தின் வாகனத்தை மோதியது.

அந்த மோதல் அடுத்ததாக அரங்கேறிய எதிர்பாராத மோதலுக்கு துவக்கமாக அமைந்தது. காரில் இருந்து வெளியேறியவர்கள் தங்களது ஏகே 47 ரக துப்பாக்கியால் சுடத்தொடங்கியுள்ளனர். வெடி குண்டுகளையும் வீடியுள்ளனர்.

பாதுகாப்புப்படையினரும் பதில் தாக்குதல் நடத்த அரை மணிநேரத்துக்கும் மேலாக மோதல் நீடித்தது. இறுதியில் 5 தீவிரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஆறு பாதுகாப்புப் பணியாளர்கள், இரண்டு நாடாளுமன்ற பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் ஒரு தோட்டக்காரர் என 9 பேர் அந்த மோதலில் உயிரிழந்தனர்.

ஒரு தீவிரவாதி நாடாளுமன்றத்தின் பிரதான நுழைவு வாயில் வரை சென்று தன்னைத்தானே வெடிக்கச் செய்துகொண்டார். எப்படியாவது நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து எம்.பிக்களை கண்மூடித்தனமாக தாக்குவதுதான் தீவிரவாதிகளின் திட்டம் எனக் கூறப்பட்டது.

விசாரணையில் 5 பேரும் பாகிஸ்தான்காரர்கள் என்றும் லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புகளின் தற்கொலைப்படையைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

முன்னாள் JKLF தீவிரவாதி முகமது அஃப்சல், அவரது உறவினர் ஷாகத் ஹுசைன் குரு, ஹுசைனின் மனைவி அஃப்சன் குரு மற்றும் டெல்லி பல்கல்கைக்கழக அரபு பேராசிரியரான கீலானி ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.

அஃப்சனுக்கு ஆரம்பத்தில் தூக்குதண்டனை அளித்த நீதிமன்றம் 2005ம் ஆண்டு அதனை ரத்து செய்தது. அஃப்சல் குரு 2013ம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார்.

இந்த தாக்குதலால் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் எழும் சூழல் நிலவியது. கிட்டத்தட்ட 5,00,00 இந்திய படையினரை பாகிஸ்தான் எல்லையில் நிறுத்தியது இந்திய இராணுவம். அணுஆயுத போர் எழும் அச்சம் உலகைப் பற்றியது.

அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் டபிள்யூ புஷ் தலியிட்டு இருநாட்டு தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு மோதல் முடிவுக்கு வந்தது.

மேற்குலக நாடுகள் பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுத்தன. பாகிஸ்தான் பிரதமராக இருந்த முஷாரஃப் இந்திய நாடாளுமன்ற தாக்குதலை கண்டித்ததுடன் தாக்குதல் நடத்திய இரண்டு இயக்கங்கள் தவிர 5 ஜிகாதி இயக்கங்களுக்கு தடை விதித்தார்.

இந்த தாக்குதலில் தீவிரவாதிகளை துணிந்து எதிர்த்த ஒவ்வொருவரும் கொண்டாடப்பட வேண்டியவர்கள். இந்த சம்பவத்தில் நாயகனாக மிளிர்ந்த இளம் வீரர் சந்தோஷ் குமார்.

உத்தரபிரதேசத்தை சேர்ந்த சந்தோஷ் அவரின் தந்தை காலடித்தடத்தைப் பின்பற்றி மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் இணைந்தார். 21 வயதில் அவர் பணியில் சேர்ந்த 6 மாதத்திலேயே நாடாளுமன்ற காவலில் ஈடுபடுத்தப்பட்டார்.

5 தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் 3 பேரை இவரே சுட்டு வீழ்த்தினார்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?