Cardiac Arrest (rep) Canva
இந்தியா

நடனமாடிய போது உயிரிழந்த 21 வயது இளைஞர் - மாரடைப்பா?

Keerthanaa R

கார்பா கொண்டாட்டத்தின்போது நடனமாடிக் கொண்டிருந்த 21 வயது இளைஞர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாறி வரும் உணவு பழக்கங்கள், அதிகரித்து வரும் தேவைகளுக்காக அளவுக்கு அதிகமாக உழைப்பது, அதிக ஸ்ட்ரெஸ், உடல் பருமன் என பல காரணிகளை காட்டி மாரடைப்பு எந்த வயதினருக்கும் ஏற்படுகிறது.

நடனமாடிக்கொண்டிருந்த 21 வயது இளைஞர் ஒருவர் மயங்கி விழுந்து இறந்துள்ளார். குஜராத் மாநிலம் ஆனந்த் நகரை சேர்ந்த வீரேந்தர் சிங் ரமேஷ் என்பவர் கார்பா நடனமாடிக்கொண்டிருந்தார்.

உற்சாகமாக நடனமாடிக்கொண்டிருந்தவர் அப்படியே முன்னால் விழுந்து விட்டார். உடன் ஆடிக்கொண்டிருந்தவர்கள் அவரை எழுப்ப முயன்றனர். அவரை துரிதமாக மருத்தவமனைக்கு அழைத்து சென்றனர்.

ஆனால் கூட்டிசெல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்ததாக காவல் துறை வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும் அவர் மாரடைப்பால் இறந்திருக்கக் கூடும் என மருத்துவர்கள் சந்தேகிப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

மற்றொரு இடத்தில் இதே போல கார்பா நடனமாடிக்கொண்டிருக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டு 35 வயது நபர் ஒருவர் உயிரிழந்தார். இந்த செய்தியை கேட்டு அவரது தந்தையும் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?