10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிவிட்டு ரிசல்ட்டுக்காக மாணவர்கள் காத்திருக்கும் சூழலில் ஐஏஎஸ் அதிகாரி ஒருவரின் மதிப்பெண்கள் இணையத்தில் பரவி வருகிறது.
துஷார் டி சுமேரா எனும் அந்த அதிகாரி கணிதம் மற்றும் ஆங்கிலப்பாடத்தில் முறையே 36, 35 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்திருக்கிறார். ஆனால் தற்போது அவர் குஜராத் மாநிலத்தின் பருச் மாவட்டத்தின் ஆட்சியராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மாணவர்களின் வாழ்க்கையில் முக்கிய கட்டமாக பார்க்கப்படுகிறது. இதனால் அவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்கிற கட்டாயத்துக்குள் தள்ளப்படுகிறார்கள்.
குறைந்த மதிப்பெண் எடுக்கும் அல்லது தேர்வில் தோல்வியைத் தழுவும் மாணவர்கள் இதனால் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
ஆனால் பரிட்சையும் மதிப்பெண்களும் மட்டுமே ஒருவரின் வாழ்வை முடிவு செய்யப்போவதில்லை. மாறாக துஷார் டி சுமேரா போன்று ஒவ்வொரு மாணவரும் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்தாலும் வாழ்வில் வெற்றி பெற முடியும் என்பதை கூறும் வண்ணம் இந்த மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதனை அவானிஷ் சரண் என்ற மற்றொரு ஐஏஎஸ் அதிகாரி தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
அவானிஷ் அவரது பதிவில், "துஷார் டி சுமேரா, 10ம் வகுப்பில் பாஸ் ஆகும் அளவு மட்டுமே மதிப்பெண் பெற்றார். மொத்த கிராமும், மொத்த பள்ளியும் அவரால் எதுவுமே செய்ய முடியாது எனக் கூறியது" என்று குறிப்பிட்டுள்ளார்.
துஷார் டி சுமேரா கடந்த 2012ம் அண்டு ஐஏஎஸ் தேர்ச்சி பெற்றார். கலைக்கல்லூரி ஒன்றில் படித்து முடித்த அவர், ஆசிரியராக பணியாற்றிக்கொண்டே UPSC தேர்ச்சி பெற்று ஐஏஎஸ் அதிகாரியானார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp