Blocked Twitter
இந்தியா

38 Youtube சேனல்களை முடக்கிய மத்திய அரசு - காரணம் என்ன?

Antony Ajay R

பாகிஸ்தானிலிருந்து செயல்படும் 6 கணக்குகள் உட்பட 16 யூடியூப் சேனல்களை நேற்று முடக்கியுள்ளது மத்திய அரசு. இவை தவறான தகவல்களை வெளியிடுவதாகக் கூறி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதே போன்ற காரணங்களால் ஏற்கெனவே இந்த மாதம் 22 சேனல்கள் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக அரசு தரப்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், "இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு, வெளிநாட்டு உறவுகள் மற்றும் பொது ஒழுங்கு தொடர்பான தவறான தகவல்களைப் பரப்பியதற்காக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் 16 யூடியூப் செய்தி சேனல்களை முடக்கியுள்ளது." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முடக்கப்பட்ட சேனல்கள் 68கோடி பார்வையாளர்களைக் கொண்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. “தடைசெய்யப் பட்டுள்ள இந்த யூடியூப் சேனல்கள் இந்தியாவில் பீதியை உருவாக்கவும், மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கவும், பொது ஒழுங்கை சிதைக்கவும் தவறான, சரிபார்க்கப்படாத தகவல்களைப் பரப்பி வருகின்றன" என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Youtube

இந்த மாத தொடக்கத்திலிருந்து முடக்கப்பட்டுள்ள 38 சேனல்களில்

  1. AjTak Pakistan

  2. Discover Point

  3. Reality Checks

  4. Kaiser Khan

  5. The Voice of Asia

  6. Bol Media Bol

  7. DuniyaMeryAagy

  8. Ghulam NabiMadni

  9. HAQEEQAT TV

  10. HAQEEQAT TV 2.0

ஆகியவை பாகிஸ்தானைச் சேர்ந்தவை என அரசு கூறியிருக்கிறது. பாகிஸ்தானை சேர்ந்த இந்த சேனல்கள், இந்திய ராணுவம், ஜம்மு காஷ்மீர், உக்ரைனில் விவகாரம், இந்தியாவின் வெளிநாட்டு உறவுகள் போன்ற பல்வேறு விஷயங்களில் தவறான கருத்துக்களைப் பரப்புவதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இவை செய்தி தளங்களின் லோகோ மற்றும் டெம்ப்ளேட்டுகளை பயன்படுத்தியிருப்பதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவைச் சேர்ந்த இதர சேனல்கள், நாடுமுழுவதும் கோவிட் - 19 பரவுவதைத் தொடர்ந்து மீண்டும் லாக்டவுன் அறிவிக்கப்படும் என்று பொய்யான செய்தியைப் பரப்பியதாகக் கூறப்படுகிறது.

இவற்றுடன் பேஸ்புக் கணக்கு ஒன்றையும் மத்திய அரசு முடக்கியிருக்கிறது. இன்னும் பல தளங்களில் தவறான செய்திகள் தொடர்ந்து வெளிவருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. டிஜிட்டல் யுகத்தின் இந்தப் பிரச்சனைகளிலிருந்து மக்களாகிய நீங்களே விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அங்கீகாரம் பெற்ற செய்தி நிறுவனங்களிலிருந்து வரும் செய்திகளை மட்டுமே நம்ப வேண்டும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?