உதய்பூர் சூரிய ஆய்வகம் Twitter
இந்தியா

இந்தியாவின் வசீகரமான 4 வானியல் ஆய்வகங்கள் பற்றி தெரியுமா?

Priyadharshini R

இந்தியா, வானவியலில் ஆழமான வரலாற்றைக் கொண்டுள்ளது. பண்டைய காலங்களிலிருந்து, நவீன வானியல் நோக்கங்களை வடிவமைப்பது வரை முக்கிய பங்குகளைக் கொண்டுள்ளது. நாடு முழுவதும் பரந்து விரிந்து கிடக்கும் பல்வேறு வானியல் ஆய்வகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் முக்கிய சான்றாக உள்ளது.

இந்த ஆய்வகங்கள் விஞ்ஞான சிறப்பின் மையமாக இருப்பதை தாண்டி, பிரபஞ்சத்தின் மர்மங்களை அவிழ்க்கும் மையமாக உள்ளது. அப்படி இந்தியாவின் மிகவும் கவர்ச்சிகரமான நான்கு வானியல் ஆய்வகங்கள் குறித்து இங்கே ஆராய்வோம்.

ஹன்லே, லடாக்

லடாக்கின் வசீகரமான நிலப்பரப்புகளுக்கு மத்தியில் 4,500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஹன்லேயில் உள்ள இந்திய வானியல் ஆய்வுக்கூடம் உலகின் இரண்டாவது மிக உயர்ந்த ஆப்டிகல் ஆய்வகமாக உள்ளது.

இந்திய வானியற்பியல் நிறுவனத்தால் இது இயக்கப்படுகிறது. விஞ்ஞான முக்கியத்துவத்திற்கு அப்பால், இந்த ஆய்வகம் மலைப்பகுதியின் பிரமிக்க வைக்கும் காட்சியை வழங்குகிறது.

இந்த ஆய்வுக்கூடம், வானியல் அதிசயம் மற்றும் இயற்கை அழகு ஆகியவற்றின் கலவையாக உள்ளது.

வைனு பாப்பு ஆய்வகம்

தமிழ்நாட்டின் காவலூரில் அமைந்திருக்கும் வைனு பாப்பு ஆய்வகம் இந்திய வானியற்பியல் கழகத்தின் ஒரு மூலக்கல்லாகும்.

ஆசியாவிலேயே மிகப் பெரிய 2.3 மீட்டர் வைனு பாப்பு தொலைநோக்கி உட்பட பல்வேறு தொலைநோக்கிகளின் தாயகமாக இந்த ஆய்வுக்கூடம் உள்ளது.

இந்த ஆய்வுக்கூடம் வார இறுதி நாட்களில் பொதுமக்களுக்கு திறந்திருக்கும். அங்கு இருக்கும் தொலைநோக்கிகள் மூலம் நட்சத்திரங்கள் மற்றும் கோள்களைப் பார்க்க முடியும்.

உதய்பூர் சூரிய ஆய்வகம்

உதய்பூர் நகரத்தில் உள்ள இந்த ஆய்வகம், சூரியன் பற்றிய ஆய்வில் சிறப்பாக செயல்படுகிறது. 1975 இல் நிறுவப்பட்ட இந்த ஆய்வுக்கூடத்தினை இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம் இயக்குகிறது.

இது மல்டி-அப்ளிகேஷன் சோலார் டெலஸ்கோப் போன்ற மேம்பட்ட கருவிகளைக் கொண்டுள்ளது. இது சூரியனின் மேற்பரப்பு மற்றும் வளிமண்டலத்தின் உயர் தெளிவுத்திறன் படங்களைப் பிடிக்கிறது.

GMRT ஆய்வகம்

மகாராஷ்டிர மாநிலம், கோதாத் கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ளது மெட்ரேவேவ் ரேடியோ டெலஸ்கோப் (ஜிஎம்ஆர்டி) ஆய்வகம்.

இது வானொலி வானியல் துறையில் ஒரு மகத்தான முயற்சியாக உள்ளது. 25 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 45 மீட்டர் விட்டத்துடன் 30 ஆண்டெனாக்களைக் கொண்ட GMRT ஆய்வகம் உலகின் மிகப்பெரிய உணர்திறன் வாய்ந்த வானொலி ஆய்வகமாக அறியப்படுகிறது.

இது ரேடியோ வானியற்பியல் தேசிய மையத்தால் இயக்கப்படுகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?