4 Reasons Why Jammu Is Worth A Visit This Winter  Canva
இந்தியா

Travel : இந்த குளிர்காலத்திற்கு ஏன் நிச்சயம் 'ஜம்மு' செல்ல வேண்டும்?

இங்கு இயற்கை அழகு, வளமான கலாச்சாரம், வரலாறு மற்றும் கட்டிடக்கலை என பார்ப்பதற்கு பல விஷயங்கள் இருக்கின்றன. இந்த சீசனில் ஏன் ஜம்முவை நிச்சயம் பார்க்க வேண்டும் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Priyadharshini R

இந்த குளிர்காலத்திற்கு எங்கு செல்லலாம் என்று யோசிப்பவரா நீங்கள் அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கானது. இந்த நேரத்தில் ஜம்மு & காஷ்மீர் செல்வது சிறந்த தேர்வாக இருக்கும்.

இங்கு இயற்கை அழகு, வளமான கலாச்சாரம், வரலாறு மற்றும் கட்டிடக்கலை என பார்ப்பதற்கு பல விஷயங்கள் இருக்கின்றன. இந்த சீசனில் ஏன் ஜம்முவை நிச்சயம் பார்க்க வேண்டும் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

பாட்னிடாப்பில் பனிச்சறுக்கு

இந்த குளிர்காலத்திற்கு பாட்னிடாப்பில் பனிச்சறுக்கு செல்லலாம்.

பனிச்சறுக்கு பிரியர்களுக்கு இது சிறந்த இடம் என்று சொல்லலாம், அதுமட்டுமில்லாமல் மலை ஏற விரும்புபவர்களுக்கும் இது சிறந்த இடம். இப்பகுதியில் காணப்படும் இயற்கை ஊற்றுகளை கண்டு மகிழலாம்.

பாக்-இ-பாஹு

தாவி ஆற்றின் கரையில் அமைந்துள்ள பாக்-இ-பாஹு ஜம்மு நகரில் உள்ள ஒரு அழகான மாடி தோட்டமாகும்.

பசுமையான புல்வெளி, அற்புதமான நீர் ஊற்று என இங்கிருக்கும் இயற்கை வளங்களை கண்டு நீங்கள் திகைப்பீர்கள்.

தோட்டத்தில் இருக்கும் செயற்கை ஏரி மற்றும் நிலத்தடி மீன்வளத்தின் அழகையும் கண்டு வியப்படுவீர்கள்.

ஹெலிகாப்டர் பயணம்

ஜம்முவை பக்கத்திலிருந்து பார்ப்பதை விட வானத்தில் இருந்து பார்த்தால் எப்படி இருக்கும்? அழகான பனிப்பொழிவு நகரத்தை நீங்கள் ஹெலிகாப்டரில் இருந்து பார்க்கலாம்.

இந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்ய வேண்டும் என்றால் முன்பதிவு செய்ய வேண்டும்.

இந்த குளிர்காலத்தில் ஹெலிகாப்டரில் சென்றால் பனி மூடிய சிகரங்களின் காட்சிகளைக் கண்டு பள்ளத்தாக்கின் வழியாக பறக்கலாம்.

மன்சார் ஏரியில் படகு சவாரி

ஜம்முவில் இருந்து சில மணி நேரங்களில் பசுமையான காடுகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது மன்சார் ஏரி. ஜம்முவிலிருந்து தொடங்கும் இந்த பயணம் ஒரு சிறந்த மறக்க முடியாத பயணமாக இருக்கும்.

அமைதியான ஏரியின் குறுக்கே படகு சவாரி செய்து மகிழலாம் அல்லது மீன் பிடிக்கும் ஆர்வம் இருந்தால் அதனை முயற்சி செய்யலாம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?