தூத்சாகர் முதல் அதிரப்பள்ளி வரை: 2023-ல் நிச்சயம் காண வேண்டிய 5 நீர்வீழ்ச்சிகள்! Representational
இந்தியா

தூத்சாகர் முதல் அதிரப்பள்ளி வரை: 2023-ல் நிச்சயம் காண வேண்டிய 5 நீர்வீழ்ச்சிகள்!

நீர்வீழ்ச்சிகள் வெறும் குளிப்பதற்கான இடங்கள் மட்டுமே இல்லை. பெரும் மலையில் இருந்து கொட்டும் நீரின் முன் நிற்கும் பொது உள்ளம் கிளர்ந்து பரவசமடைய வேண்டும். அப்படிப்பட்ட சிறந்த இடங்கள் தான் இந்த பட்டியலில் உள்ளன.

Antony Ajay R

பிறக்கப் போகும் புத்தாண்டில் நாம் என்னென்ன செய்ய வேண்டும் என்பதற்காக ஒரு பக்கெட் லிஸ்டை ஏற்கெனவே தயாராக வைத்திருப்போம்.

இன்னும் இல்லை எனில் உங்களது சுற்றுலா தளங்கள் பட்டியலில் இந்த 5 நீர் வீழ்ச்சிகளை மறக்காமல் இணைத்துக்கொள்ளுங்கள்.

அப்படி என்ன முக்கியமான நீர்வீழ்ச்சிகள் இவை? வாருங்கள் பார்க்கலாம்...

தூத்சாகர் அருவி (Dudhsagar Falls)

தூத்சாகர் அருவி கோவாவின் மாண்டோவி ஆற்றில் அமைந்திருக்கிறது.

இது இந்தியாவிலேயே உயரமான அருவியாக அறியப்படுகிறது.

இது ஒரு நான்கு அடுக்கு அருவியாகும். பார்ப்பதற்கு பூவுலக சொர்க்கம் போலாக் காட்சியளிக்கும்.

தூத்சாகர் என்றால் பால்கடல் என்று அர்த்தம். பழைய இதிகாசங்களில் இருந்து இந்த பெயர் பெறப்பட்டுள்ளது.

நவம்பர் முதல் பிப்ரவரி தான் இந்த அருவியை பார்வையிட சிறந்த பருவம்.

யானை நீர்வீழ்ச்சி (Elephant Falls)

மேகாலயா மாநிலம் இந்தியாவின் சிறந்த சுற்றுலாத்தலங்களுள் ஒன்றாக அறியப்படுகிறது.

அதன் தலைநகரான ஷில்லாங்கில் இருக்கும் இந்த அருவில் மாதம்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவியும் இடமாக இருக்கிறது.

குளிர் காலமானாலும் கோடைகாலமானாலும் இந்த அருவியை நாம் பார்வையிடலாம். கோடைக்காலத்தில் அதிக கூட்டம் இருக்கும்.

நோகலிகை நீர்வீழ்ச்சி (Nohkalikai Falls)

மேகாலயாவில் உள்ள மற்றோரு நகரமான சிரபுஞ்சியில் இந்த அழகிய அருவி இருக்கிறது.

இதுவும் நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான குளிர்காலத்தில் பார்வையிடுவதற்கு சிறந்த இடமே.

சிரபுஞ்சி உலகிலேயே அதிக மலை பெரும் இடங்களில் ஒன்று என்பது நமக்கு தெரியும். எனவே இந்த அருவியிலும் அடிக்கடி மழைப்பொழிவு இருக்கும்.

நோக்காலிகாய்... சிரபுஞ்சி அருவிக்கு இந்தப் பெயர் வந்த கொடூர கதை தெரியுமா? #NohkalikaiFalls

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி (Athirappilly Waterfalls)

கடவுளின் நகரமாக இருக்கும் கேரளாவில் நிச்சயமாக பார்வையிட வேண்டிய அருவி அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி.

கேரளாவின் மிக நீளமான அருவியுமாகும்.

இந்தியாவின் நயாகரா என்ற பெயரையும் கொண்டுள்ளது.

இந்த பகுதிக்கு சுற்றுலா சென்றால் கிரேட் ஹார்ன்பில் பறவை, வன கேன் ஆமை மற்றும் நீலகிரி லங்கூர் குரங்குகளை காணலாம்.

ஒக்கேனக்கல் நீர்வீழ்ச்சி (Hogenakkal Waterfalls)

ஒக்கேனக்கல் என்றால் புகைக்கும் பாறைகள் என்று பெயர்.

இந்த அருவியை தூரத்தில் இருந்து பார்க்கும் போது பாறைகளில் இருந்து புகை வெளியேறுவது போலத் தெரியும்.

இங்கு படகுசவாரி செய்த படி ஓய்வெடுப்பது தான் அத்தனை சுகமானதாக இருக்கும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?