நமது வளமான வரலாற்றுக்கு அடையாளமாக எஞ்சியிருப்பவை கோட்டைகள் மட்டுமே. பழங்கால பாடல்களிலும், கலைப்படைப்புகளிலும் மக்களை விட மன்னர்களைப் பற்றியே அதிகமாக பேசப்பட்டிருக்கும்.
இதனால் மன்னர்களின் வாழ்க்கையை அறிந்துகொள்வதில் நாம் அதிக ஆர்வம் காட்டுவோம். மன்னர்களைப் பற்றி என்னதான் படித்து தெரிந்துகொண்டாலும் வரலாற்றுத் தலங்களை நேரில் சென்று பார்ப்பது நமக்கு அற்புதமான உணர்வைத் தரும்.
நீங்கள் ஒரு வரலாற்று பிரியராக இருந்தால் நிச்சயம் இங்கு குறிப்பிடப்படும் கோட்டைகளை சென்று பார்வையிட வேண்டும். இந்த கோட்டைகளின் ஒவ்வொரு அங்குலமும் கதைகளை வைத்திருக்கிறது.
பிரம்மாண்டமான கோட்டைகளுடன் கடற்கரையின் அழகும் இணைந்தால்… இந்தியாவின் கடற்கரைகளில் இருக்கும் 5 அரசர் காலத்து கோட்டைகளைத் தான் பார்க்கப் போகிறோம்.
இந்தியாவின் போர்ச்சுகீசிய பகுதிகளை நிர்வகித்து வந்த கடற்படை அதிகாரி Nuno da Cunha 1535ல் இந்த கோட்டையைக் கட்டினார். போர்ச்சுகீசிய வடிவமைப்பில் இருக்கும் இதற்கு Fortaleza de So Tomé என்று பெயரிடப்பட்டது.
இந்த கோட்டை டையூவில் 5.6 ஹெக்டேகர் பரப்பில் அமைந்துள்ளது. கடற்கரையை ஒட்டிய வெளிப்புறச்சுவர், துப்பாக்கி ஏந்திய வீரர்களின் பாதுகாப்புடன் உட்புற சுவர் இருந்திருக்கிறது.
உட்புற சுவரில் கிறிஸ்தவ புனிதர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
இந்த பெயர் ஜிஸெரா (zizera) என்ற அரபு வார்த்தையில் இருந்து பெறப்பட்டது. இதற்கு “தீவு” என்று அர்த்தம். இந்த கோட்டை 22 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது.
இதனை ராஜா ராம் ராவ் படில் கட்டியிருக்கிறார். கோலீஸ் கடற்கொள்ளையர்களிடம் இருந்து விலகி அமைதியாக வாழ்வதற்காக இந்த கோட்டையைக் கட்டினார்.
இந்த கோட்டையில் 19 கோபுரங்கள் இருக்கின்றன. இங்கு பீரங்கி முதலான ஆயுதங்கள் உள்ளன. இந்த கோட்டை மராட்டியர்கள், முகலாயர்கள், போர்த்துகீசியர்கள் மற்றும் பிரிட்டிஷ் உடன் நீண்ட போர் வரலாற்றைக் கொண்டது.
இந்த கோட்டைக் கட்டப்பட்ட காலம் தெரியவில்லை. சிரக்கல் ராஜாக்களின் ஆரம்ப காலத்தில் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது. திப்பு சுல்தானின் ஆட்சிக்காலத்தில் அவரது வீரர்களின் முக்கிய இராணுவ நிலையமாக கருதப்பட்டது இந்தக் கோட்டை.
44 ஏக்கர் பரப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த கோட்டையை 1664ல் சத்திரபதி சிவாஜி கட்டினார். இதன் பெயருக்கு கடலின் கோட்டை என்று அர்த்தம்.
இந்த கோட்டையில் இருந்து கடல்வழியாக ரகசிய சுரங்கப்பாதை இருப்பதாகக் கூறப்படுகிறது. மகாராஷ்டிராவில் நிச்சயமாக பார்க்க வேண்டிய இடம் இந்தக் கோட்டை.
கோவாவில் வரலாற்றுப் பூர்வமான இடங்கள் நம் கண்ணில் படுவதே இல்லை. பனாஜியில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்தக் கோட்டை.
இஸ்லாமிய ஆட்சியாளர் அடில் ஷாவால் கட்டப்பட்ட போது ஷாபுரா என்று அழைக்கப்பட்டது இந்தக் கோட்டை. பின்னர் போர்ச்சுகீசியர்களால் பெயர் மாற்றப்பட்டது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust