மொபைலில் அதிக நேரம் செலவழிப்பவரா நீங்கள்? குறைக்க 7 டிப்ஸ் canva
இந்தியா

மொபைலில் அதிக நேரம் செலவழிப்பவரா நீங்கள்? குறைக்க 7 டிப்ஸ்

மொபைல் ஃபோனுக்கு நீங்கள் அடிமையாக இருக்கிறீர்கள் என்று உங்களுக்கு பட்டால், அதிலிருந்து வெளிவர சில டிப்ஸ் இதோ!

Keerthanaa R

தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நம்மை பொருளாதார ரீதியாக முன்னகர்த்தி சென்றிருக்கிறதுதான். ஆனால், மனித இணக்கத்தை, இணைப்பை மட்டுப்படுத்திவிட்டது.

இதற்கு ஒரு முக்கிய காரணம் மொபைல் ஃபோன். கைக்கு அடக்கமாக இருக்கும் இந்த கருவி நாம் இருக்கும் இடத்திற்கே நம் தேவைகளை கொண்டு தருகிறது. இதனால், பலரின் உடல், சுறுசுறுப்பான செயல்பாடுகளை மறந்தேவிட்டது எனலாம்.

சிலர் தேவைக்கு என்றபோது மட்டும் மொபைலை பயன்படுத்துவோம். சிலர் சர்வகாலமும் ஃபோனில் மூழ்கி கிடப்பார்கள். சுற்றும் முற்றும் என்ன நடக்கிறது என்று கூட தெரியாமல்.

இப்படி மொபைல் ஃபோனுக்கு நீங்கள் அடிமையாக இருக்கிறீர்கள் என்று உங்களுக்கு பட்டால், அதிலிருந்து வெளிவர சில டிப்ஸ் இதோ!

அலாரம்

காலையில் சீக்கிரம் எழ வேண்டும், இந்த நேரத்துக்கு ஒரு பணியை செய்து முடிக்கவேண்டும் என நமக்கு நினைவுப்படுத்த அலாரம் வைக்கும் வழக்கம் நம்மில் பலரிடையே இருக்கிறது. செல்ஃபோன்களில் இந்த அலாரம் வைக்கும் வசதி இருப்பதால் அதற்கும் கை மொபைலிடம் தான் செல்லும்.

தூங்கலாம் என்று மொபலை கீழே வைத்திருப்போம். அட அலாரம் வைக்க மறந்துட்டனே என்று மீண்டும் போனை எடுப்போம், அப்படியே இன்ஸ்டாவை ஸ்க்ரால் செய்ய ஆரம்பித்துவிடுவோம்.

அதனால், போனில் அலாரம் வைப்பதற்கு பதிலாக, ஒரு அலாரம் கிளாக்கை வாங்கிக்கொள்ளலாம்

சார்ஜிங் பாயின்ட்

நாள் முழுக்க கைப்பேசியை பயன்படுத்தி, அதன் பேட்டரி கிட்டதட்ட சாகும் வரை பயன்படுத்திவிட்டு விட்டு சார்ஜ் போடுவோம். சிலர் சார்ஜ் போட்டும் அருகில் நின்று மொபைல் பயன்படுத்துவார்கள். அல்லது, கட்டிலுக்கு பக்கத்திலேயே சார்ஜிங் பாயின்ட் இருக்கும்.

சுத்தம்!

அதனால், சார்ஜ் பாயின்ட்டை கொஞ்சம் கட்டிலிடமிருந்து தூரமாக வையுங்கள். பவர் பேங்க், ஜங்க்ஷன் பாக்ஸ் என எதையும் பயன்படுத்தவேண்டாம்.

சார்ஜ் போட்டு ஃபோன் பயன்படுத்துவது உடல்நலத்துக்கும் ஆபத்து, ஃபோனையும் சீக்கிரமாக பழுதாக்கிவிடும்.

இந்த கொஞ்ச நேரத்தில் வேறு ஏதாவது வேலை செய்யலாம்

தேவையில்லாத ஆப்களை டெலீட் செய்யலாம்

உங்கள் நேரத்தை விரயம் செய்யும் கேம்கள், ஷாப்பிங் ஆப்கள், அல்லது எந்த செயலியில் நீங்கள் தேவையில்லாமல் உங்கள் டைமை கடக்கிறீர்களோ, அந்த செயலிகளை ஃபோனில் இருந்து அகற்றுவிடுங்கள்.

கொஞ்ச நாட்களுக்கு கைகள் நடுங்கும் தான் (!) பரவாயில்லை, பழகிகொள்ளலாம்.

நோட்டிஃபிகேஷன்ஸ்

படித்துக்கொண்டிருக்கும்போது, ஏதாவது முக்கியமான பணியில் இருக்கும்போது, குறிப்பாக உறங்கும்போது, உங்கள் ஃபோனில் வரும் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்து வையுங்கள்.

டிங், டிங் என்ற அந்த சத்தம் நம் கவனத்தை எளிதில் சிதறடித்துவிடும். சுற்றியிருப்பவர்களையும் எரிச்சலடையச் செய்யலாம்

என்ன தேவை?

நீங்கள் எங்கிருந்தாலும், வீடோ, அலுவலகமோ, சுற்றுலாவோ, அது எந்த இடமானாலும், என்ன தேவை இருக்கிறதோ அதற்கு மட்டுமே ஃபோனை பயன்படுத்துங்கள். வேலை முடிந்ததும் ஆஃப் செய்து அருகில் வைத்துவிடுங்கள்.

மொபைல் ஃப்ரீ டே

மாதத்தில் ஒரு நாளாவது, முழுக்க மொபைலை பயன்படுத்தாமல் இருக்க முயற்சிக்கலாம். சற்று சவாலான விஷயம் தான், யாருக்காவது கால் செய்யவேண்டும் என்றாலும் ஃபோன் தேவை தான். மெல்ல இந்த பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளலாம்

வெளியில் செல்லும்போது ஃபோன் வேண்டாம்

வீட்டிற்கு அருகில் இருக்கும் இடங்களுக்கு செல்லுகையில் கையில் மொபைல் இல்லாமல் சென்று வரலாம். என்ன வேலைக்காக செல்கிறோம் எவ்வளவு நேரம் எடுக்கும் என்பதை கணித்து அதற்கேற்றார்போல வெளியில் சென்று வரலாம். மொபைல் வேண்டாம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?