லைலா மஜ்னு தொடங்கி ராம் ஜானு வரை பல காவியக் காதல் கதைகளை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் அதுவெல்லாம் கதைகளோடு முடிந்துவிட்டதா என்றால், இல்லை என காட்டியிருக்கிறார்கள் சரத் குகர்னி மற்றும் அவரது மனைவி அஞ்சலி.
தனது மனைவி அஞ்சலி உயிரிழந்த நிலையில், அவர் ஆசைப்பட்டதன் படி, தன் 60வது வயதில் எவரஸ்ட் சிகரத்தை அடைந்துள்ளார் சரத் குல்கர்னி.
சரத் குல்கர்னி மற்றும் அஞ்சலி இருவருமே மலையேற்றம் செய்பவர்கள். அவர்கள் இருவரும் இணைந்தே உலகின் 7 உயர்ந்த மலைகளை அடைய வேண்டும் என முடிவெடுத்தனர். இதற்காக இருவரும் தானே நகருக்கு இடம்பெயர்ந்தனர். இவர்களின் கனவு கிட்ட தட்ட தொடங்குவதற்கு முன்பே முடிவடைந்தது.
இந்த 7 சிகரங்களில் முதலில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறலாம் என முடிவெடுத்தனர்.
2019 மே 22ல் இவர்கள் எவரெஸ்ட் மலையேற்றத்துக்காக கிளம்பினர். ஆனால், அதே சமயத்தில் மலையேற்றம் செய்ய ஆட்கள் அதிகமாக வந்ததால், ஹிலரி ஸ்டெப் என்ற இடத்தில் கூட்ட நெரிசல் அதிகரித்தது.
இந்த ஹிலரி ஸ்டெப் என்கிற இடம் சற்றே ஆபத்து நிறைந்த பகுதியாகும். இங்கு மலை மீது ஏறுவதற்கும், இறங்குவதற்கும் ஒரே கயிறு தான் இருக்கும்.
மலையேற்றம் செய்ய குறைவாகவே நேரம் இருந்ததால், அவசரத்தில் எல்லோரும் மலையேறத் தொடங்கியுள்ளனர். அஞ்சலியும் வேகமாக மலையேறவேண்டும் என முயற்சித்ததில், அவருக்கு ஆக்சிஜன் பற்றாக்குறையாகி, உயிரிழக்க நேரிட்டது.
இதனால் சரத் அஞ்சலியின் மௌண்டெயினியரிங் கனவு சிதைந்தது.
இதனால், மீண்டும் வீடு திரும்பிய சரத், தன் மனைவி ஆசைப்பட்டபடி மௌண்ட் எவரெஸ்ட்டை அடைய கடும் பயிற்சி மேற்கொண்டார்.
60 வயதில் 4 மலைகள் ஏறினார் சரத். ஒரு வழியாக தைரியத்தையும் வரவழைத்துக்கொண்டு, எவரெஸ்ட் சிகரத்தில் ஏற முடிவெடுத்தார்.
நான்கு ஆண்டுகளுக்கு பிறகு எவரெஸ்ட் சிகரத்தை கடந்த மே 23ஆம் தேதி அடைந்தார் சரத்
இதற்கு முன் இந்தியர்கள் பலரும் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்திருந்தாலும், 60 வயதில் எவரெஸ்ட் மலைமீது ஏறிய முதல் நபர் சரத் தான்.
இதற்கு முன்னரும் சரத் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust