ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் சிறந்த FMCG பிராண்ட் எது என சில நிறுவனங்கள் ஆய்வு செய்து அறிக்கைகளாக வெளியிடும். அப்படி கன்டர் (kantar) நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலில், 10ஆவது ஆண்டாக பார்லே இந்தியாவின் நம்பர் 1 FMCG பிராண்டாக கடந்த 2021ஆம் ஆண்டிலும் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது.
சமீபத்தில் கண்டர் என்கிற நிறுவனம் 2021ஆம் ஆண்டுக்கான India's Annual Brand Footprint report என்கிற அறிக்கையை வெளியிட்டது. அதில் இந்தியாவின் FMCG பிரிவில் பார்லே முதலிடமும், அமுல் இரண்டாவது இடத்தையும், பிரிட்டானியா மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.
கிளினிக் ப்ளஸ் (4ஆவது இடம்), டாடா (5ஆவது இடம்), கடி (6ஆவது இடம்), நந்தினி (7ஆவது இடம்), கோல்கேட் (8ஆவது இடம்), ஆவின் (9ஆவது இடம்), லைஃப்பாய் (10ஆவது இடம்) ஆகிய பிராண்டுகள் அடுத்தடுத்த இடங்களைக் பிடித்துள்ளன.
ஒரு காலண்டர் ஆண்டில் வாடிக்கையாளர்கள் ஒரு பொருளை எத்தனை முறை வாங்குகிறார்கள், என்ன கால இடைவெளியில் வாங்குகிறார்கள் என்பதைப் பொறுத்து கன்ஸ்யூமர் ரீச் பாயிண்ட்ஸ் (சி ஆர் பி) வழங்கப்பட்டு, அதனடிப்படையில் இந்த பிராண்டுகள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்த பார்லே 653.1 கோடி புள்ளிகளைக் பெற்று 10ஆவது ஆண்டாக முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. பார்லே நிறுவனத்தின் சி ஆர் பி கடந்த 2020ஆம் ஆண்டை விட 2021ஆம் ஆண்டில்14 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் டாப் எஃப் எம் சி ஜி பிராண்ட் பட்டியலில் டாப் 25 இடங்களுக்குள் இந்தியாவின் பிரபல நொறுக்குத் தீனி நிறுவனமான ஹல்திராம்ஸ் முதன்முறையாக 24ஆம் இடத்தைப் பிடித்து நுழைந்துள்ளது.
இந்திய அளவில் குளிர்பானங்கள் மற்றும் சூடாகக் குடிக்கும் பானங்களின் பட்டியலில் ப்ரூக் பாண்ட் 144 கோடி சி ஆர் பி புள்ளிகளோடு முதலிடத்தைப் பிடித்துள்ளது. டாடா நிறுவனம் இரண்டாவது இடத்தையும், ப்ரூ காபி மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.
பால் பொருட்கள் துறையில் இந்தியாவில் 554 கோடி புள்ளிகளோடு அமுல் நிறுவனம் முதலிடத்தையும், கர்நாடகா மாநில அரசின் நந்தினி நிறுவனம் 227 கோடி புள்ளிகளோடு இரண்டாவது இடத்தையும், தமிழ்நாடு அரசின் ஆவின் நிறுவனம் 202 கோடி புள்ளிகளோடு மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.
உலக அளவில் FMCG துறையில் பார்த்தால் கோக கோலா 662.8 கோடி சி ஆர் பி புள்ளிகளோடு முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. கோல்கேட் இரண்டாவது இடத்தையும், மேகி நூடுல்ஸ் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.
உலக அளவில் உணவுத் துறையில் குளிர்பானங்கள் மற்றும் சூடாகக் குடிக்கும் பானங்கள் பிரிவில் கோககோலா முதலிடமும், பெப்ஸி இரண்டாவது இடமும், நெஸ்கேஃப் மூன்றாவது இடத்தையும் ப்ரூக் பாண்ட் நான்காவது இடத்தையும் ஸ்ப்ரைட் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளன.
உலக அளவில் பால் பொருட்கள் துறையில் டனோனே (Danone) என்கிற நிறுவனம் முதலிடத்தையும், ஃபிலடெல்ஃபியா என்கிற நிறுவனம் இரண்டாவது இடத்தையும் ஆக்டிவியா மூன்றாவது இடத்தையும் யாகுல்ட் நான்காவது இடத்தையும், யொப்லெய்ட் (Yoplait) ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளன.
இன்னும் இந்திய பிராண்டுகள் பல உச்சங்களைத் தொட வேண்டும் என்பதை இப்பட்டியல் உணர்த்துகிறது. தொடும் என்று நம்புவோம்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust