cow dung diyas canva
இந்தியா

மாட்டு சாணம் கொண்டு 1 லட்சம் விளக்குகள் தயாரிக்கும் சிறைவாசிகள் - விலை என்ன தெரியுமா?

Keerthanaa R

மாட்டு சாணத்தை பயன்படுத்தி விளக்குகளை தயாரித்து வருகின்றனர் ஆக்ரா சிறைவாசிகள்.

சிறைவாசிகள் தங்கள் தண்டணை காலம் முடிந்து வெளியில் செல்லும்போது அவர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள சிறையில் வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது.

கல்வி, திறன் மேம்பாடு போன்றவை சிறைவாசிகளுக்கும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் ஆக்ராவிலுள்ள சிறைவாசிகள் தீபாவளியை ஒட்டி விளக்குகள் தயாரித்து வருகின்றனர்.

இந்த விளக்குகள் மாட்டு சாணம் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்த விளக்குகளை தயாரிக்க 40 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சிறை வளாகத்தை சுற்றி 80-85 கோசாலைகள் இருப்பதனால் அங்கு அளவுக்கு அதிகமான மாட்டு சாணம் கிடைக்கிறது.

சிறை கண்காணிப்பாளர் பி டி சலோனியா ஒரு முறை அவர் அன்வாக்ஹேடா என்ற இடத்திற்கு சென்றபோது அங்கு இவ்வாறு மாட்டு சாணம் கொண்டு விளக்குகள் தயாரிக்கப்படுவதை பார்த்ததாக கூறினார். தயாரிப்பு விதிமுறைகளை அறிந்து தனது கட்டுப்பாட்டில் இருக்கும் சிறையிலும் இதை அவர் அறிமுகப்படுத்தியுள்ளார். மேலும் தீப ஒளி திருநாளுக்கு விளக்குகள் அதிகம் தேவைப்படும் என்பதாலும் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

"தற்போது வரை 25,000 விளக்குகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 25 ரூபாய் கூலி கொடுக்கப்படுகிறது. ஒரு விளக்கின் விலை 40 பைசா" என பிடிஐ செய்தி தளத்திடம் சிறை கண்காணிப்பாளர் தெரிவித்தார். மேலும் இன்னும் ஒரு லட்சம் விளக்குகள் தயாரிக்கப்படவுள்ளன. 51,000 விளக்குகள் தேவைப்படுவதாக ஆர்டர் வந்துள்ளது என அவர் தெரிவித்தார்.

"மீதமுள்ள விளக்குகள் சிறை வாசலில் விற்பனைக்கு வைக்கப்படும். ஒரு லட்சத்திற்கும் அதிகமாக விளக்குகளை தயாரித்தால், அவற்றை கொண்டு சிறையை நாங்கள் அலங்கரிப்போம்" என சலோனியா தெரிவித்தார்.

இந்த மாட்டு சாணத்தை வைத்து இவர்கள் கட்டைகளும் தயாரிக்கின்றனர். இவை இறுதி சடங்குகளில் மரக்கட்டைகளுக்கு பதிலாக பயன்படுத்தப்படுகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?