இந்தியாவில் கோயில்களுக்கு பஞ்சமே இல்லை. கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற சொல்லுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு பகுதியிலும் கோயில்கள் உள்ளன.
இந்த பதிவில் ராஜஸ்தான் மாநிலத்தில் அமையவுள்ள ’ஓம்’ வடிவ கோயில் பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
ராஜஸ்தானின் பாலி நகரில், புனித சின்னமான 'ஓம்' வடிவில் ஒரு அழகான கோயில் தற்போது கட்டப்பட்டு வருகிறது. ஓம் வடிவில் வடிவமைக்கப்பட்ட உலகின் முதல் கோயிலாக இந்தக் கோயில் உருவாக உள்ளது.
இதன் கட்டடக்கலை, சுற்றுலா பயணிகளை கவர்வது மட்டுமல்லாமல், விண்வெளியில் இருந்து பார்க்கக்கூடிய ஒரு அற்புதமான காட்சி இருப்பை வெளிப்படுத்தும் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
பாலி மாவட்டத்தில் உள்ள ஜடான் கிராமத்தில், அடிக்கல் நாட்டப்பட்டு சுமார் மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு, இந்தக் கோயில் தற்போது விரைவாக கட்டப்பட்டு வருகிறது.
'ஓம் ஆகர்' என்று அழைக்கப்படும் இந்த கோயில் 250 ஏக்கர் பரப்பளவில் பரவியுள்ளது. 400 க்கும் மேற்பட்டவர்கள் இதற்காக அயராது உழைக்கிறார்கள்.
1995 இல் கோயிலின் அடிக்கல் நாட்டப்பட்டதுடன் தொடங்கியது, 2023-24 ஆண்டுகளுக்குள் அது முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகெங்கிலும் உள்ள பக்தர்களால் போற்றப்படும் சுவாமி மகேஷ்வரானந்த மஹராஜ், இந்த கோயிலின் கட்டிடக்கலையை மிகப்பெரிய சாதனை என்று பாராட்டினார்.
இந்த கோயிலின் சிறப்பு அம்சம் என்னவென்றால், இங்கு 1008 மகாதேவ் சிலைகள் மற்றும் 12 ஜோதிர்லிங்கங்கள் அதன் புனித வளாகத்தில் வைக்க முடியும்.
135 அடி உயரத்தில் 2,000 தூண்களால் தாங்கி நிற்கும் இந்த கோயில், அதன் வளாகத்தில் 108 அறைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவில் வளாகத்தின் மைய அம்சம் குரு மாதவானந்த் ஜியின் கல்லறை என்பது குறிப்பிடத்தக்கது.
கோயில் வளாகத்தின் அடியில் 2 லட்சம் டன் கொள்ளளவு கொண்ட பிரம்மாண்டமான தொட்டி கட்டப்பட்டுள்ளது.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnews