ஒரு இந்திய குடும்பத்துக்கு கார் வாங்க வேண்டுமானால் என்ன மாதிரியான் கார் வாங்குவார்கள். மாருதி 800, செலிரியோ, டாடா டியாகோ போன்ற சிறிய கார்களை வாங்குவார்கள்.
கொஞ்சம் பணக்காரர்கள், ஐடியில் வேலை பார்க்கும் உயர் அதிகாரிகள் என்றால் டொயோட்டா ஃபார்டியூனர், ஃபோர்ட் எண்டீவர் போன்ற கார்களை வாங்குவார்கள்.
ஊரிலேயே பெரிய பணக்காரர் ரேஞ்சில் இருப்பவர்கள் பென்ஸ், ஆடி போன்ற பிராண்டுகளில் விலை மலிவான கார்களை வாங்குவர். ஆனால் இங்கு சில பணக்காரர்கள், பல கோடி ரூபாய் செலவழித்து பிரமாண்ட கார்களை வாங்கியுள்ளனர். அவர்கள் வாங்கி இருக்கும் கார்களின் விவரங்களைத் தான் இந்தக் கட்டுரையில் பார்க்கவிருக்கிறோம்.
சமீபத்தில் மெர்சிடிஸ் பென்ஸ் கார்களை தன் பாதுகாப்பு கான்வாயாகச் சேர்த்துக் கொண்ட முகேஷ் அம்பானி, ரோல் ராய்ஸ் கல்லியன் காரையும் வாங்கி வைத்துள்ளார். இதற்கு சுமார் 7 கோடி ரூபாய் விலை கொடுத்தாராம். ஆன்ரோட் விலை சுமார் 9 கோடியாம். தன் காருக்கு ஒரு தனி வித பெயின்ட் அடித்துள்ளார் முகேஷ் அம்பானி. இதனால் அவரது கார் சூரிய ஒளி படும் போது பிங், வயலெட், நீலம், சிவப்பு... என பல வண்ணங்களில் மின்னும்.
உலகின் அதிவேக கார்களில் ஒன்றான ஏ எம் எஸ் நிஷான் ஜிடி - ஆர் 1,750 பி ஹெச் பி சக்தி கொண்டது. இது பூனாவாலாக்களின் கார் சேகரிப்புகளில் ஒன்றாக இருக்கிறது.
மெர்சிடிஸ் எஸ் 350 காரை வாங்கி, தனக்குப் பிடித்தது போல் பல மாற்றங்களைச் செய்து வைத்திருக்கிறார் அதார் பூனாவாலா. இந்த கார் 1.1 கோடி ரூபாய் முதல் 8.9 கோடி வரை காரின் ரகத்தைப் பொருத்து விலை மாறுபடும். தன் மெர்சிடிஸ் காரை தனக்குப் பிடித்தாற் போல வடிவமைக்க இ எம் டி (Executive ModCar Trendz) என்கிற நிறுவனத்தை பணிக்கு அமர்த்தினார். இது போக பூனாவாலாவிடம் ஃபெராரி 360 ஸ்பைடர், ரோல்ஸ் ராய்ஸ் ஃபேன்டம், போர்ஷ் கேன், பி எம் டபிள்யூ 7 சீரிஸ், பென்ஸ் எஸ் 600, பென்ட்லி கான்டினென்டல் ஃப்ளையிங் ஸ்பர் எனப் பல கார்களை வைத்துள்ளார்.
பெங்களூரில் உள்ள ஒரு பிரபல பொழுது போக்கு பூங்காவை நிறுவியரின் மகன் சன்னி சபர்வால். அவர் சொந்தமாகப் பச்சை நிற லாம்போர்கினி கல்லர்டோ ஐ எஸ் எஸ் காரை வைத்துள்ளார். இக்காரை சில ஆண்டுகளுக்கு முன் ஒரு காவல்துறை உதவி மையத்தில் மோதியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
உலகில் தயாரிக்கப்பட்ட மொத்த லம்போர்கினி கல்லர்டோ குரோம் ரேப் கார்களின் எண்ணிக்கை 250 மட்டுமே என்கிறது ஜி க்யூ இந்தியா வலைதளம். அப்படிப்பட்ட கார்களில் ஒன்றை யோஹன் பூனாவாலா வாங்கினார். வாங்கிய பின், அக்காருக்கு மஞ்சள் நிறமடித்தார்.
ரேமண்ட் ஆடை நிறுவனத்தின் தலைவர் கெளதம் சிங்கானியா ஒரு பெரிய கார் ஆர்வலர். இவர் பி எம் டபிள்யூ எம் 3, ஸ்கைலைன் ஜி டி - ஆர், ட்வின் டர்போ லம்போர்கினி கல்லர்டோ போன்ற பல சொகுசு கார்களை வைத்துள்ளார்.
இந்தி சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அபிஷேக் பச்சன், தன் தந்தை அமிதாப் பச்சனைப் போல கார்கள் மீது தனி காதல் கொண்டவர். அவர் பென்ட்லி கான்டினென்டல் ஜிடி, மெரிசிடிஸ் பென்ஸ் எஸ் 350 டி... எனப் பல கார்களை வைத்துள்ளார். அவர் சமீபத்தில் ஆடி ஏ 8 எல் ரக காரை பிரத்யேகமாக தனக்கென வடிவமைத்து வாங்கியுள்ளார்.
ஆடி ஏ8 எல் கார் 4.2 லிட்டர் வி8 இன்ஜின் கொண்டது. 345 பி ஹெச் பி திறனை வெளிப்படுத்திம். 0 - 100 கிலோமீட்டர் வேகத்தைத் தொட 5.9 நொடிகள் போதுமானது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp