Anand Mahindra News Sense
இந்தியா

"தேவை தான் கண்டுபிடிப்புகளுக்கு தாய்" - ஆனந்த் மகிந்திராவை அசரவைத்த வீடியோ எது?

சாலையில் ஆறுபோல தேங்கியுள்ள தண்ணீரில், நனையாமல் ஒரு இளைஞர் நடந்து செல்லும் வீடியோவைப் பார்த்து, மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா வெகுவாக Impress ஆகியுள்ளார்.

Keerthanaa R

சாலையில் தேங்கியிருக்கும் தண்ணீரில் நடக்க, இளைஞர் ஒருவர் பிளாஸ்டிக் ஸ்டூல்களை பயன்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது பரவலாகப் பார்க்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் மழைக்காலம் துவங்கியுள்ள நிலையில், பல இடங்களில் சாலையெங்கும் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், மக்களின் போக்குவரத்து பாதித்துள்ளது.

இதற்கிடையில் நடப்பதற்கே சிரமமாக இருக்கும் சாலையில், இளைஞர் ஒருவர், அசாதாரணமாக பிளாஸ்டிக் ஸ்டூல்களை வைத்து நடந்து செல்லும் வீடியோ ஒன்று இணையத்தை கவர்ந்துள்ளது. இந்த வீடியோவில், சாலையில் கிட்ட தட்ட நம் கால் முட்டியின் அளவுக்கு தண்ணீர் இருப்பது தெரிகிறது.

இதில் ஒரு இளைஞர், தன் இரு கைகளிலும் இரு ஸ்டூல்களை கயிற்றை வைத்து பிடித்துக்கொண்டுள்ளார். ஈரமாக இருக்கும் தரையில் நாம் அடி மீது அடிவைத்து செல்வது போல, இவரும், அந்த ஸ்டூல்களின் மேல் நின்றுக்கொண்டு, ஒன்றன்பின் ஒன்றாக முன்வைத்து நகர்கிறார். கையில் இருக்கும் கயிற்றைவைத்துத் தான் அந்த நாற்காலியை அவர் நகர்த்துகிறார்.

இப்படி அடி மீது அடிவைத்து நடந்து, தான் செல்லவேண்டிய இடத்துக்கு அந்த இளைஞர் சென்று சேரும் காட்சிகள் அதில் பதிவாகியுள்ளன.


இந்த வீடியோ, வழக்கம் போல மஹிந்திரா குழுமத்தின் நிறுவனர் ஆனந்த் மஹிந்திராவின் கண்களில் படவே, "தேவைகள் தான் புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழி வகுக்கிறது என்று சொல்வது போல" என்ற தலைப்புடன் தன் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.


பலரும் அந்த இளைஞரின் புத்திக்கூர்மையைப் பாராட்டி வருகின்றனர். அதில் ஒருவர், "தண்ணீரில் பிளாஸ்டிக் ஸ்டூலை பேலன்ஸ் செய்வது கடினம்...இந்தியாவில் இவரைப் போல பல திறமைசாலிகள் இருக்கிறார்கள்" என்று பதிவிட்டிருந்தார்


இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?