Anand Mahindra
Anand Mahindra Twitter
இந்தியா

லாரியில் ஏ.சி வசதியுடன் நடமாடும் திருமண மண்டபம் - ஆச்சரியத்தில் ஆனந்த் மகிந்திரா | Video

Priyadharshini R

இந்தியத் தொழிலதிபரான ஆனந்த் மகிந்திரா வணிக ரீதியாக மட்டுமில்லாமல் இணைய வாசிகள் மத்தியிலும் மிகவும் பிரபலம்.

மக்களின் வித்தியாசமான படைப்புகளை ஒருபோதும் பாராட்டத் தவறுவதில்லை.

அவரது மனதைக் கவரும் அனைத்து விஷயங்களையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து அதை மனதார பாராட்டுவார். அவரது ட்வீட்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

Anand Mahindra

அவரது சமீபத்திய பகிர்வில், ஒரு திருமண மண்டபத்தின் 'படைப்பு' மற்றும் 'சிந்தனை' ஆகியவற்றைப் பாராட்டியுள்ளார்.

அதனை வீடியோவாக தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு மண்டபம் கிடைப்பதே மிகவும் கஷ்டமாக உள்ளது.

நல்ல நாட்களில், இருக்கும் அனைத்து திருமண மண்டபங்களும் பல மாதங்களுக்கு முன்பே புக் ஆகிவிடுகின்றன.

அப்படியே கிடைத்தாலும் அவை நகருக்கு வெளியே ஏதோ ஒரு மூலையில் தான் கிடைக்கும். அதற்கு தீர்வாக நினைத்த இடத்திற்கு நகர்த்த கூடிய மொபைல் திருமண மண்டபத்தை இவர்கள் உருவாக்கி உள்ளனர்.

மொத்தம் 40x30 என்ற அளவில் உள்ள இந்தத் திருமண மண்டபத்தில் ஒரே நேரத்தில் 200 பேர் வரை அமர முடியும்.

மிகவும் ஸ்டைலான டிசைன் உடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த மண்டபத்திற்கு ஏசி வசதி எல்லாம் கூட உள்ளது.

திருமணம் மட்டுமின்றி, பல்வேறு நிகழ்ச்சிகளையும் இந்த மண்டபத்தில் நடத்தலாம்.

இந்த சிந்தனை தான் ஆனந்த் மகிந்திராவை பெரியளவில் கவர்ந்து விட்டது. இந்த வீடியோவை தனது டிவிட்டரில் பகிர்ந்துள்ள ஆனந்த் மகிந்திரா, அதனை பாராட்டியுள்ளார். இந்த வீடியோ இணையவாசிகளை பெரிதும் கவர்ந்து வருகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

2500 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் திசை மாறிய கங்கை நதி - ஆய்வு சொல்வதென்ன?

Nikhila vimal: அழகிய லைலா நிகிலா விமலின் ரீசண்ட் புகைப்படங்கள்!

3.5 ஆண்டுகள் வரை கர்ப்ப காலம் கொள்ளும் விலங்குகள் பற்றி தெரியுமா?

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?

”நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” - மாணவர்களிடம் விஜய் பேசியது என்ன?