Anand Mahindra Twitter
இந்தியா

மன வயதை எப்போதாவது சோதித்ததுண்டா? ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த வைரல் ட்வீட்

இது ஒரு அற்புதமான துல்லியமான சோதனை என்பதை நான் ஒப்புக் கொள்ள வேண்டும் என்றார். மேலும் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Priyadharshini R

இந்தியத் தொழிலதிபரான ஆனந்த் மகிந்திரா வணிக ரீதியாக மட்டுமில்லாமல் இணைய வாசிகள் மத்தியிலும் மிகவும் பிரபலம்.

மக்களின் வித்தியாசமான படைப்புகளை ஒருபோதும் பாராட்டத் தவறுவதில்லை.

அவரது மனதைக் கவரும் அனைத்து விஷயங்களையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து அதை மனதார பாராட்டுவார். அவரது ட்வீட்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

இந்நிலையில் ஒரு நபரின் மன வயதை மதிப்பிடுவதற்கான சோதனையை ஆனந்த் மஹிந்திரா டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தின் கூற்றுப்படி, 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த தேர்வை ஏற்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை ஆனந்த் மகிந்திராவை ஈர்த்துள்ளது.

அந்த சோதனையை டிவிட்டரில் பகிர்ந்து ”இது ஒரு அற்புதமான துல்லியமான சோதனை என்பதை நான் ஒப்புக் கொள்ள வேண்டும் என்றார்”. தான் இந்த சோதனையை மேற்கொண்டதாகவும், நீங்களும் சோதித்து பாருங்கள் என்றும் அவர் பகிர்ந்திருந்தார். அவரது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதற்கு நெட்டிசன்களின் ரியாக்‌ஷன்ஸ்,

அவர் பகிர்ந்திருந்ததில் கிட்டதட்ட பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருக்கும் ஆங்கில வாக்கியங்கள் இடம்பெற்றுள்ளன. அதனை வாசிப்பவர்கள் நிச்சயம் குழம்பிவிடுவார்கள். மொத்தம் 12 வாக்கியங்கள் இருக்கின்றன.

அந்த வாக்கியங்களை ஒன்றன்பின் ஒன்றாக படித்துவிட்டு கடைசியில் ஒவ்வொரு வாக்கியத்தில் இருக்கும் மூன்றாவது வார்த்தையை படித்தால், அது ஒரு வாக்கியமாக மாறும்.

அந்த வாக்கியத்தின் அர்த்தம்" இப்படி தான் வயதானவர்களை நாற்பது வினாடிகளுக்கு பிசியாக வைத்துக்கொள்ளவேண்டும்" என்ற பொருள் வரும். இது தான் இணையவாசிகளை கவர்ந்துள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?