Arjith Singh ட்விட்டர்
இந்தியா

Arjith Singh: ஒரு டிக்கெட்டின் விலை 16 லட்சமா? அதிர்ச்சியில் ரசிகர்கள்

Keerthanaa R

பின்னணி பாடகர் அர்ஜித் சிங்கின் கான்சர்ட் டிக்கெட்டின் விலை அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. ஒரு டிக்கெட்டின் விலை 16 லட்சம் ரூபாய் என பட்டியலிடப்பட்டுள்ளதை பார்த்த ரசிகர்களை அவர்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

பாலிவுட்டின் பிரபலமான பின்னணி பாடகர் அர்ஜித் சிங். தொலைக்காட்சி பாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று பின்னர் இந்தியில்வெளியான ஆஷிகி 2 படம் மூலம் புகழ் பெற்றார் அர்ஜித் சிங். இவரது வித்தியாசமான கனத்த குரல், அதில் ஒலித்த பாடல்கள் காந்தம் போல இளசுகளை ஈர்த்தது. இந்தியா முழுவதும் இவருக்கு ரசிகர்கள் குவிந்தனர்.

மெல்ல மற்ற மொழிப்பாடல்களையும் இவர் பாடத் தொடங்கினார். ஏஆர் ரஹ்மான் உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்களுக்கு இவர் பாடியுள்ளார். 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் ஸ்பாடிஃபை செயலியில் இவரது பாடல்கள் தான் அதிகம் கேட்கப்பட்டது. இவரது கான்சர்ட்களுக்கு ரசிகர் கூட்டம் அலைமோதிக்கொண்டு வரும்.

இந்நிலையில், இவரது அடுத்த கான்சர்ட்டுக்கான டிக்கெட்டின் விலைப்பட்டியல் வெளியிடப்பட்டது. இதனை பார்த்த ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.

தொடக்க விலை ரூ.999 ஆகும். இது வெண்கல தர டிக்கெட். சில்வர், கோல்ட் ஆகிய வகைகளில் இருக்கும் டிக்கெட்களின் விலை, முறையே ரூ.1999, ரூ.3,999 ஆகும். வெண்கலம், சில்வர் தவிர மற்ற எல்லா நிலை டிக்கெட்களிலும் உட்கார்ந்துகொண்டு கான்சர்ட்டை ரசிக்கலாம்.

இவ்வாறாக படிப்படியாக ஏறும் டிக்கெட்களின் விலை, ப்ரீமியம் லாஞ்ச் 1ல் முடிகிறது. இதில் தான் ஒரு டிக்கெட்டின் விலை 16 லட்சம் ரூபாய். ப்ரீமியம் லாஞ்ச் 1ல் மொத்தம் 40 பேர் அமர்ந்து நிகழ்ச்சியை ரசிக்கலாம்.

இதை பார்த்த நெட்டிசன்கள், தங்களது கருத்துகளை தெரிவித்துவருகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?