Cheetah Helicopter Crash Twitter
இந்தியா

Cheetah Helicopter Crash: இந்திய ராணுவத்தின் ஹெலிகாப்டர் விபத்து - விமானி உயிரிழப்பு

Priyadharshini R

அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் தவாங் பகுதியில் இந்திய ராணுவத்தின் சீட்டா ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து நியாம் ஜங் சூ என்ற பகுதியில் இருக்கும் நீர்வீழ்ச்சிக்கு அருகே நடைபெற்றதாக கூறப்படுகிறது.

காலை 10 மணியளவில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதை அடுத்து, அதில் இருந்த இரண்டு விமானிகளும் அருகிலுள்ள இராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

அதில் ஒரு விமானி மிகவும் ஆபத்தான நிலையில் இருந்துள்ளார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகிவுள்ளது. மற்றொரு விமானிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சமயத்தில் இந்த விபத்து நடந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?