Virat Kohli with fan Instagram
இந்தியா

விராட் கோலியை சந்திக்க 23 ஆயிரம் ரூபாய் செலவு செய்த ரசிகர் - யாரு சாமி நீ?

Keerthanaa R

அசாமை சேர்ந்த இளைஞர் ஒருவர் விராட் கோலியை நேரில் சந்திக்க 23 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் செலவு செய்துள்ளார்.

மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா தென் ஆப்ரிக்கா அணிகள் விளையாடுகிறது. முதல் போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெற்று இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இரண்டாவது போட்டி கவுஹாத்தியில் நடக்கிறது.

இந்த போட்டிக்காக கவுஹாத்தி சென்றுள்ள இரு அணிகளுக்கும் அங்குள்ள நட்சத்திர ஹோட்டலில் அறைகள் புக் செய்யப்பட்டுள்ளது. கவுஹாத்தி ஷாந்திபூரை சேர்ந்த ராகுல் ராய் என்ற இளைஞர் கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் தீவிர ரசிகர்.

இந்திய அணி வீரர்கள் கவுஹாத்தி வரும் தேதி அறிந்து ராகுல் ராய் முதலில் விமான நிலையம் சென்றுள்ளார். ஆனால் இந்திய அணி வீரர்களை சுற்றி பலத்த பாதுகாப்பு இருந்துள்ளது. "இதனால் நான் பல முறை அவரை அழைத்துப் பார்த்தும், அவரிடம் நெருங்க முயன்றும் முடியவில்லை" என்றார் ராகுல்.

எப்படியாவது கோலியை பார்த்துவிட வேண்டும் என இரு அணி வீரர்களும் தங்கியிருந்த அதே நட்சத்திர ஹோட்டலில் அறை புக் செய்துள்ளார். மறு நாள் காலை பிரேக்ஃபாஸ்ட் உட்கொள்ளும் சமயத்தில் கோலியை அணுகி, அவருடன் பேசி செல்ஃபியும் எடுத்துள்ளார்.

பல முறை போராடிய பிறகு தான் ஹோட்டலின் பிரேக்ஃபாஸ்ட் லாஞ்சுக்குள் ராகுலை பாதுகாவலர்கள் அனுமதித்துள்ளனர்.

"சாப்பிடுவதில் எனக்கு பெரிதும் கவனம் இல்லை. பல முறை நான் கோலியை அழைத்தேன். கடைசியில் நான் அவரை அழைத்தது தெரிந்து என்னை பிரேக்ஃபாஸ்ட் லாஞ்சுக்குள் வெளியில் வந்து சந்திக்கும்படி கூறினார். அன்று எனக்கு அந்த ஹோட்டலில் தனியறை கிடைத்ததை நான் பாக்கியமாக எண்ணுகிறேன்" என நெகிழ்ந்த ராகுல், ஒரு இரவு அந்த ஹோட்டலில் தங்க செலவு செய்தது ரூ.23,400!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?