Assam: This temple has a sacred earthen lamp that has been burning since 1461 ( Rep Image) Canva
இந்தியா

1461ம் ஆண்டு முதல் எரிந்து வரும் மண் விளக்கு - இந்த அதிசயம் எங்கு நிகழ்கிறது?

துறவியும் சீர்திருத்தவாதியுமான மாதவ்தேவாவால் நிறுவப்பட்ட இந்த தலம் ஒரு குறிப்பிடத்தக்க வரலாற்றைக் கொண்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் 500 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து ஒளிர்ந்து கொண்டிருக்கும் மண் விளக்கு இங்கு மேலும் ஒரு சிறப்பு அம்சமாக உள்ளது.

Priyadharshini R

அசாமின் ஜோர்ஹாட் மாவட்டத்தில் அமைந்துள்ள புனித வழிபாட்டு தலத்தினை தெகியாகோவா போர்னம்கர் என்று அழைக்கின்றனர்.

இது 1461 ஆம் ஆண்டுக்கு முற்பட்டது என கூறப்படுகிறது. துறவியும் சீர்திருத்தவாதியுமான மாதவ்தேவாவால் நிறுவப்பட்ட இந்த தலம் ஒரு குறிப்பிடத்தக்க வரலாற்றைக் கொண்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் 500 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து ஒளிர்ந்து கொண்டிருக்கும் மண் விளக்கு இங்கு மேலும் ஒரு சிறப்பு அம்சமாக உள்ளது.

மாதவ்தேவா தனது பயணத்தின் போது ஜோர்ஹாட்டில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் அங்கு இருக்கும் வயதான பெண்மணிக்கு சொந்தமான ஒரு குடிசையில் தஞ்சம் அடைந்ததாக புராணக்கதை கூறுகிறது.

அவரது எளிமையான விருந்தோம்பலால் கவரப்பட்ட மாதவ்தேவா, அவரை கௌரவிக்க முடிவு செய்தார். கோயிலில் மண் விளக்கு ஏற்றும் பொறுப்பை மூதாட்டியிடம் ஒப்படைத்தார்.

அதன் தொடக்கத்திலிருந்தே, விளக்கு அணையாமல் எரிந்து வருகிறது. தீபம் ஒருபோதும் அணையாததை உறுதிசெய்ய தலத்தின் பூசாரிகள் விடாமுயற்சியுடன் முனைந்தனர். 

இந்த புனித தீபம், பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது. ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸால் இது அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

ஜோர்ஹாட் நகரத்திலிருந்து கிழக்கே 15 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த தலத்தை தேசிய நெடுஞ்சாலை 37 இலிருந்து மாநில மற்றும் உள்ளூர் பேருந்துகள் வழியாக எளிதாக அணுகலாம். பார்வையாளர்கள் ஜோர்ஹாட் விமான நிலையத்திலிருந்து வாடகை கார்களையும் தேர்வு செய்யலாம். 

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?