பத்மஶ்ரீ விருதை திருப்பி அளித்த பஜ்ரங் புனியா! Twitter
இந்தியா

பத்மஶ்ரீ விருதை திருப்பி அளித்த பஜ்ரங் புனியா!

Antony Ajay R

பாஜக பிரமுகர் பிரிஜ் பூஷன் சிங் பாலியல் தொல்லைக் கொடுத்ததற்காக கைது செய்யப்பட வேண்டும் என மல்யுத்த வீரர்கள் இந்த ஆண்டு தொடக்கத்தில் நீண்ட போராட்டத்தை மேற்கொண்டனர்.

அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட பிறகு தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.

சமீபத்தில் நடந்த இந்திய மல்யுத்த சம்மேளன தேர்தலில் போராட்டத்தில் ஈடுபட்ட வீரர்களின் சார்பாக நிறுத்தப்பட்ட பிரதிநிதிகளை தோற்கடித்து, பிரிஜ் பூஷன் சிங்கின் நெருங்கிய கூட்டாளியான சஞ்சய் சிங் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று சாக்‌ஷி மாலிக் மல்யுத்தத்தை விட்டு விலகுவதாக அறிவித்தார். இது தேசிய அளவில் அதிர்வலைகளை எழுப்பியது.

தொடர்ந்து இன்று போராட்டத்தில் முன்னின்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, 2019ம் ஆண்டு தனக்கு வழங்கப்பட்ட பத்மஶ்ரீ பட்டத்தை திருப்பி வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?